மைக்ரோசாப்டின் மிகப் பெறுமதிவாய்ந்த வல்லுனர்கள் (Microsoft Most Valuable Professional) என்பது மைக்ரோசாப்டால் வழங்கப்படும் ஒரு விருது மற்றும் அங்கீகாரத் திட்டமாகும். இவ்விருது, மைக்ரோசாப்டின் மென்பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்த தங்கள் தொழில்நுட்பத்திறனை பகிர்ந்து கொள்ளும் தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுக்கான விருதும், அதற்கு கடந்த ஆண்டுப் பங்களிப்பின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றது.

வெளியிணைப்புக்கள் 
 மைக்ரோசாப்ட்டின் MVP பக்கம் 
 மைக்ரோசாப்ட் MVP பற்றி அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள் 
 தற்போதைய MVP விருது பெற்றவர்களின் பெயர்பட்டியல்  
 MVPs.org com சமூக இணையம்
 MSMVPS.com சமூக வலைப்பதிவு இணையம்

மைக்ரோசாப்ட்
சோமநாதபுரம் மைசூர் மாவட்டத்தில் (கர்நாடக மாநிலம், இந்தியா) காவேரிக்கரையில் அமைந்து உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இந்நகரமே போசளப் பேரரசின் கட்டிடக்கலையின் முதன்மையான இருப்பிடம் ஆகும். இங்கு தான் கலைநயம் மிக்க கேசவர் கோயில் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிற்பங்கள் மென்மையான மாக்கல்லால் ஆனவை. இந்நகரம் பதின்மூன்றாம் நூற்றாண்டில் (கி.பி 1254-91) வாழ்ந்த மூன்றாம் நரசிம்மன் என்ற மன்னனின் தளபதியான (தண்டநாயக்கா) சோமா என்பவரால் கட்டப்பட்டது. எனவே இது சோமநாத புரம் என்று வழங்கப்பட்டது. இங்குள்ள கேசவர் கோயில் மிக நுட்பமான மாக்கல் சிற்பவேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது.

இதனையும் காண்க
 கேசவர் கோயில்

கருநாடக மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
கர்நாடகாவில் உள்ள இந்துக் கோயில்கள்
கர்நாடகத்தில் சுற்றுலாத் துறை
மைசூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்
போசளர் மரபு
மைசூர் மாவட்டம்
விண்டோஸ் லைவ் (Windows Live) என்பது மைக்ரோசாப்ட் உருவாக்கி வரும் பல சேவைகளை குறிக்கும். இது கூகிள் போன்ற போட்டியாளர்களுடன் போட்டிபோடக்கூடிய வகையில் எம்எஸ்என்-இன் மீளுருவாக்கம் ஆகும். இது பொதுவாக உலாவிகளூடாக இயங்கக்கூடியதாகும். இந்தப் பயன்பாடுகளும் அதன் தரவுகளும் உள்ளூர்க் கணினிகளில் அல்லாமல் வழங்கிகளிலேயே சேமிக்கப்படும். இச்சேவையும் வரவிருக்கின்ற கூகிள் சேவைகளும் பயன்பாட்டு மென்பொருட்களை கணினியில் நிறுவாமல் உலகில் எங்கிருந்தும் இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ளமாறு அமைய இருப்பதே வருங்காலத்தின் குறிப்பிடத்தக்க போக்காக இருக்கும் என்று கருதப்படுகின்றது.

வெளியிணைப்புகள் 

 விண்டோஸ் லைவ் இணையத்தளம். 

மைக்ரோசாப்ட்


நிகழ்வுகள்
கிமு 587 – புது பாபிலோனியப் பேரரசு எருசலேம் நகரை முற்றுகையிட்டு சாலமோனின் கோவிலை இடித்தழித்தது. 
238 – பிரட்டோரியக் காவலர்கள் அரண்மனையை முற்றுகையிட்டு உரோமைப் பேரரசர்கள் பப்பியெனசு, பால்பினசு ஆகியோரைக் கைது செய்து, அவர்களை உரோமை வீதிகளில் இழுத்து வந்து கொன்றார்கள். அதே நாளில் 13 வயது மூன்றாம் கோர்டியன் பேரரசனாக அறிவிக்கப்பட்டான்.
1014 – பைசாந்திய-பல்கேரியப் போர்கள்: கிளெய்டியன் சமரில் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் பசில் பல்கேரிய இராணுவத்தினரைத் தோற்கடித்தான். பல்கேரியப் பேரரசர் சாமுவேல் அக்டோபர் 6 இல் இறந்தார்.
1018 – மூன்றாம் டர்க் கோமகன் புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் என்றி மன்னரின் படைகளை விளார்திங்கன் சமரில் தோற்கடித்தார்.
1030 – தென்மார்க்கிடம் இருந்து தனது முடியாட்சியைக் காப்பாற்றும் முகமாக நோர்வேயின் இரண்டாம் ஓலாப் மன்னர் சமரில் ஈடுபட்டு இறந்தார்.
1148 – சிலுவை வீரர்களின் தோல்வியுடன் தமாஸ்கசு மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. 
1567 – ஆறாம் யேம்சு இசுகாட்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
1588 – ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஆங்கிலேயக் கடற்படையினர் சேர் பிரான்சிஸ் டிரேக் தலைமையில் பிரான்சில் கிரேவ்லைன்சு என்ற இடத்தில் எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பை முறியடித்தனர்.
1818 – பிரெஞ்சு இயற்பியலாளர் பிரெனெல் புகழ்பெற்ற "ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய தனது குறிப்புகளை" வெளியிட்டார்.
1848 – இலங்கையில் பிரித்தானியக் குடியேற்றத்துக்கெதிராக மாத்தளையில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்க கிளர்ச்சியாளர்களுடன் இராணுவத்தினர் சண்டையில் ஈடுபட்டனர்.
1848 – அயர்லாந்தின் உருளைக்கிழங்குப் பஞ்சம்: அயர்லாந்தில் டிப்பெரரி என்ற இடத்தில் பிரித்தானிய ஆட்சிக்கெதிரான கிளர்ச்சி அடக்கப்பட்டது.
1900 – இத்தாலியில், முதலாம் உம்பெர்த்தோ மன்னர் கொலை செய்யப்பட்டார்.
1907 – சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது.
1921 – இட்லர் செருமன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1948 – ஒலிம்பிக் விளையாட்டுக்கள்: 14-வது ஒலிம்பிக் விளையாட்டுகள்: இரண்டாம் உலகப் போர் காரணமாக 12 ஆண்டுகளாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் ஆரம்பமாயின.
1950 – கொரியப் போர்: நான்கு நாட்களாக நோகன் ரி என்ற இடத்தில் நடந்த அமெரிக்க வான்தாக்குதல்களில் பெருந்தொகையான தென் கொரிய அகதிகள் கொல்லப்பட்டனர்.
1957 – பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமைக்கப்படட்து.
1958 – ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1959 – அவாயில் முதற்தடவையாக அமெரிக்க சட்டமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1967 – வியட்நாம் போர்: வட வியட்நாம் கரையில் பொரெஸ்டல் என்ற அமெரிக்கக் கப்பலில் தீப்பிடித்ததில் 134 பேர் உயிரிழந்தனர்.
1967 – வெனிசுவேலாவின் 400ம் ஆண்டு நிறைவு நாள் கொண்டாட்டங்களின் நான்காம் நாளில் கரகஸ் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 500 பேர் உயிரிழந்தனர்.
1973 – கிரேக்கத்தில் முடியாட்சியை முடிவுக்குக்  கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பு இடம்பெற்றது.
1980 – ஈரானியப் புரட்சியை அடுத்து ஈரான் புதிய புனித நாட்டுக்கொடியை அறிமுகப்படுத்தியது.
1981 – இலண்டன் புனித பவுல் பேராலயத்தில் நடைபெற்ற வேல்சு இளவரசர் சார்லசு-டயானா திருமணத்தை உலகத் தொலைக்காட்சிகளில் 700 மில்லியன் பேர் பார்வையிட்டனர்.
1987 – ஆங்கிலக் கால்வாயூடாக யூரோ சுரங்கம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் ஐக்கிய இராச்சியப் பிரதமர் மார்கரட் தாட்சரும், பிரெஞ்சு அரசுத்தலைவர் பிரான்சுவா மித்தரானும் கையெழுத்திட்டனர்.
1987 – இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை-இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கையெழுத்திடப்பட்டது. இந்நிகழ்வில் இடம்பெற்ற மரியாதை அணிவகுப்பின் போது ராஜீவ் காந்தி இலங்கை இராணுவத்தினன் ஒருவனால் துப்பாக்கியால் தலையில் குத்தப்பட்டு காயம் அடைந்தார்.
1999 – இலங்கையின் வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீலன் திருச்செல்வம் தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார்.
2005 – ஏரிசு குறுங்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
2010 – காங்கோவில் கசாய் ஆற்றில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
2013 – சுவிட்சர்லாந்தில் லோசான் அருகே இரண்டு பயணிகள் தொடருந்துகள் மோதிக் கொண்டதில் 25 பேர் காயமடைந்தனர்.
2015 – மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோசு 10 இயக்குதளத்தை வெளியிட்டது.

பிறப்புகள்

1841 – கெரார்டு ஆன்சன், நோர்வே மருத்துவர் (இ. 1912)
1883 – பெனிட்டோ முசோலினி, இத்தாலியின் 27வது பிரதமர் (இ. 1945)
1890 – பி. சா. சுப்பிரமணிய சாத்திரியார், தமிழக சமக்கிருத, தமிழறிஞர், உரையாசிரியர் (இ. 1978)
1894 – எட்வர்ட் குபேர், புதுச்சேரியின் 1வது முதலமைச்சர் (இ. 1979)
1898 – இசிதர் ஐசக் ரபி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
1904 – ஜெ. ர. தா. டாட்டா, பிரான்சிய-இந்திய தொழிலதிபர் (இ. 1993)
1905 – டாக் ஹமாஷெல்ட், ஐநாவின் 2வது பொதுச் செயலர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற சுவீடியர் (இ. 1961)
1920 – வி. சீ. கந்தையா, இலங்கைத் தமிழ் பண்டிதர், புலவர்
1927 – ஆரி முலிச், டச்சு எழுத்தாளர் (இ. 2010)
1936 – சிற்பி பாலசுப்பிரமணியம், தமிழகக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர்
1958 – கேயில் டைன்சு, ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளர்
1959 – சஞ்சய் தத், இந்திய நடிகர்
1980 – ராசி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்
1099 – இரண்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1042)
1644 – எட்டாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1568)
1856 – ராபர்ட் சூமான், செருமனிய இசையமைப்பாளர் (பி. 1810)
1883 – வில்லியம் வில்பர்ஃபோர்ஸ், ஆங்கிலேய அரசியல்வாதி, கொடையாளி (பி. 1759)
1890 – வின்சென்ட் வான் கோ, டச்சு ஓவியர் (பி. 1853)
1891 – ஈஸ்வர சந்திர வித்யாசாகர், இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1820)
1947 – நாராயண ஐயங்கார், தமிழக இதழாசிரியர், ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1861)
1962 – ரொனால்டு பிசர், ஆங்கிலேய உயிரியலாளர், கணிதவியலாளர் (பி. 1890)
1974 – கருமுத்து தியாகராசர், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893)
1979 – எர்பர்ட் மார்குசே, செருமானிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (பி. 1898)
1994 – டோரதி ஓட்ச்கின், நோபல் பரிசு பெற்ற எகிப்திய-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1910)
1996 – அருணா ஆசஃப் அலி, இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் (பி. 1909)
1999 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1944)
2000 – இரெனே பாவலோரோ, அர்கெந்தீன இதய அறுவை மருத்துவ வல்லுநர் (பி. 1923)
2009 – காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920
2009 – ராசன் பி. தேவ், மலையாள நடிகர் (பி. 1954)
2014 – ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், இலங்கைத் தமிழ் ஒலிபரப்பாளர்
2014 – ஐசக் இன்பராஜா, ஈழத்து நாடகக் கலைஞர் (பி. 1952)

சிறப்பு நாள்
பன்னாட்டுப் புலி நாள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 

 பிபிசி: இன்றைய நாளில்
 நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
 சூலை 29 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com

சூலை
ஆண்டின் நாட்கள்
ஜே. ஆர். டி. டாட்டா எனப் பரவலாக அறியப்படும் ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (சூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார். மேலும், இவர் இந்திய விமானியும், தொழிலதிபரும், தொழில் முனைவோரும், டாட்டா குழுமத்தின் தலைவரும் ஆவார்.

இளமைக்காலம் 
இந்தியாவின் டாட்டா குடும்பத்தில் பிறந்த இவர், பிரபல தொழிலதிபர் இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா, அவரது மனைவி சுசான் பிரையர் ஆகியோரின் மகனாவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார். இவரது தாயார் இந்தியாவில் கார் ஓட்டிய முதல் பெண்மணி ஆவார்.1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.

டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா மோட்டார்ஸ், டைட்டன் நிறுவனம், டாட்டா உப்பு, வோல்டாஸ், ஏர் இந்தியா உள்ளிட்ட டாட்டா குழுமத்தின் கீழ் பல தொழில்களை நிறுவியதற்காக இவர் மிகவும் பிரபலமானவர். 1983ஆம் ஆண்டில், இவருக்கு செவாலியே விருதும், 1955 மற்றும் 1992ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் உயரிய குடிமகன்களின் விருதுகளான பத்ம விபூசண், பாரத ரத்னா ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்றார். இந்திய தொழில்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்த விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

விருதுகள் 

 1957-இல் இவர் பத்ம விபூசண் விருது பெற்றார்.
 1992-இல் பாரத் ரத்னா விருது.

இறப்பு 
இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.

இதனையும் பார்க்கவும்  

ஜம்சேத்ஜீ டாட்டா
இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா
தோரப்ஜி டாடா

மேற்கோள்கள்

^http://www.tatacentralarchives.com/history/family_tree/family_tree.pdf

நூற்பட்டியல்

வெளி இணைப்புகள் 

Tata Family Tree
 Brief Lifestory of JRD Tata 
  
  
 Biography at newindiadigest.com 
 Biography at tata.com 

இந்தியத் தொழிலதிபர்கள்
டாட்டா குழும நபர்கள்
1904 பிறப்புகள்
1993 இறப்புகள்
வானூர்தியியல் முன்னோடிகள்
குஜராத் தொழிலதிபர்கள்
1904 பிறப்புகள்
1993 இறப்புகள்
பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
டாட்டா குடும்பம்
மும்பையைச் சேர்ந்தவர்கள்
வரத பண்டிதர் (1656 - 1716) யாழ்ப்பாணத்திலுள்ள சுன்னாகத்தைச் சேர்ந்த அரங்கநாதையர் என்பவரின் மகன். இலக்கியம், இலக்கணம், மருத்துவம் முதலியவற்றிற் சிறந்த புலமை படைத்தவர்.

இவரது செய்யுள் நூல்கள்
 சிவராத்திரிப் புராணம்
 ஏகாதசிப் புராணம்
 அமுதாகரம்
 கிள்ளைவிடுதூது
 பிள்ளையார் கதை (நூல்)

வெளி இணைப்புகள்
 வரதபண்டிதர்

ஈழத்துப் புலவர்கள்
சுல்ஃபிகா ஈழத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் கவிஞர். எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரியான இவர், சுமார் பத்து ஆண்டு காலம் விஞ்ஞான ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். கொழும்புப் பலகலைக் கழகத்தின் கல்வியியல் டிப்ளோமாப் பட்டமும் பெற்ற இவர் பின்னர் இலங்கைத் தேசிய கல்வி நிறுவகத்தில் செயல்திட்ட அதிகாரியாகவும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் அதிதி விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். பெண்களின் முன்னேற்றம், விஞ்ஞானக் கல்வி, கல்விச் சிந்தனைகள் என்பன தொடர்பாக ஆய்வுக் கட்டுரைகளும் எழுதிவரும் இவர் கவிஞராக மட்டுமன்றி ஆய்வறிவாளராகவும் முகிழ்த்துள்ளார்.

இவரது நூல்கள்
 விலங்கிடப்பட்ட மானிடம் (1994)
 உரத்துப் பேசும் உள்மனம் (கவிதைத்தொகுதி)

வெளி இணைப்புக்கள்
 விலங்கிடப்பட்ட மானுடம்  - நூலகத் திட்டம் (மின்னூல்)
 உரத்துப் பேசும் உள்மனம்

தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்
இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள்
மணவை முஸ்தபா (பிறப்பு 15 சூன் 1935 - இறப்பு 06 பிப்ரவரி 2017) அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு அருப்பெரும் பணியாற்றிய தமிழ் அறிஞர். இவர் அறிவியல் தமிழ்த் தந்தை என்றும் அறியப்படுகிறார். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச் சொல் அகராதிகளை வெளியிட்டவர். தொடர்ந்து பல துறைகளில் கலைச் சொல் அகராதிகளை வெளியிட திட்டமிட்டு பணியாற்றியவர். யுனெஸ்கோ கூரியரின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக அது நிறுத்தப்படும் வரை பணியாற்றினார். அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் நிறுவனத்தை நிறுவி அறிவியல் தமிழ் பணியை தொடர்ந்தவர். 

இவர் எழுதிய இசுலாமும் சமய நல்லிணக்கமும் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அளவியல், அறவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் எனும் நூல் 1996 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றிருக்கின்றன.   அறிவியல் தொழில் நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் அனந்தாச்சாரி ஃபௌண்டேஷன் ஆப் இந்தியாவின் முதற் பரிசு பெற்றது.  கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி நூல் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முதற்பரிசு பெற்றது.

வாழ்க்கைக் குறிப்பு 
1935 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் தேதி மீராசா ராவுத்தரின் மகனாகப் பிறந்தார் முஸ்தஃபா. திண்டுக்கல் அருகே உள்ள பிலாத்து என்ற சிறிய கிராமம் தான் இவரது சொந்த ஊர். இவர் மணப்பாறை அருகில் உள்ள இளங்காகுறிச்சியில் 15 சூன் 1935ஆம் நாள் பிறந்தார். இவருக்கு சவுதா என்கிற மனைவியும், அண்ணல், செம்மல் என்ற 2 மகன்களும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர்

ஆற்றிய பணிகள் 
தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள், ‘புத்தக நண்பன்’ (புக் பிரண்ட் - மாத இதழ்) ஆசிரியராக 4 ஆண்டுகள், யுனெஸ்கோ கூரியர் - பன்னாட்டு மாத இதழ் - ஆசிரியராக 35 ஆண்டுகள், என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தலைமை பொறுப்பாசிரியர் - தமிழ் பதிப்பு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட ‘சுதந்திர பொன்விழா குழு” முன்னாள் உறுப்பினராகவும், முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி வரும் சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும், ‘பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு’ உறுப்பினராகவும், 1968, 1982, 1987, 1995 ஆண்டுகளில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் 7 ஆய்வுக் கட்டுரைகள் படித்துள்ளார். 1986 இல் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘அறிவியல் தொழில் நுட்பக் கருத்துப் பரிமாற்றம் பற்றிய 15 நாள் கருத்தரங்க மற்றும் பயிற்சி வல்லுநராக இருந்து நடத்தியுள்ளார். தொலைக்காட்சி தொடங்குமுன் தமிழ்நாடு அரசு அமைத்த தொலைக்காட்சி ஆலோசனைக் குழு மேனாள் உறுப்பினர் தொலைக்காட்சி விளம்பரதாரர் நிகழ்ச்சித் தேர்வாளராக பணியாற்றினார். 1965 முதல் எல்லா வகையான வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். தமிழ்நாடு பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராக பணியாற்றியிருந்தார். அண்ணா பல்கலைக்கழக வளர்தமிழ் மன்ற ‘களஞ்சியம்’அறிவியல் இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும், கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராக 1972 முதல் 1974 முடிய பணியாற்றினார்.

திரைப்படத் தணிக்கை குழு உறுப்பினராக 1977 முதல் 1986  முடிய பணியாற்றினார்.  நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மீரா அற நிறுவனம்”  தலைவராகவும், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும், 2006 - 2009 வரை தமிழ்நாடு அரசின்  அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராக பொறுப்பு வகித்தார். ‘அறிவியல் தமிழ் அறக்கட்டளையின்”  தலைவராகவும், தமிழ் மொழி மேம்பாட்டு வாரியத்தின்  உறுப்பினரகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சென்னை உறுப்பினராகவும் இருந்தார்.

எழுதிய நூல்கள்
 கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி 
 கணினி களஞ்சிய பேரகராதி 
 மருத்துவக் களஞ்சிய பேரகராதி 
 செம்மொழி உள்ளும் புறமும் 
 விழா தந்த விழிப்பு 
 சிறுவர்க்கும் சுதந்திரம் 
 தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள் 
 பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம் 
 அன்றாட வாழ்வில் அழகு தமிழ் 
 இஸ்லாம் - ஆன்மீக மார்க்கமா? ஆறிவியல் மார்க்கமா? 
 இளையர் அறிவியல் களஞ்சியம் 
 காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாற 
 அறிவியல் கலைச்சொல் களஞ்சியம் 
 இஸ்லாமும் சமய நல்லிணக்கமும் 
 அண்ணலாரும் அறிவியலும் 
 அறிவியல் தமிழின் விடிவெள்ளி 
 தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம் 
 சமண பௌத்த கிருஸ்துவ இஸ்லாமிய இலக்கியங்கள் 
 இன்றைய தென்னக இலக்கியப் போக்கு  
 அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி 
 தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள் 
 மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம் 
 தெளிவு பிறந்தது 
 சிந்தைக்கினிய சீறா 
 இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் 
 காலம் தேடும் தமிழ் 
 திருப்புமுனை 
 சிறுவர் கலைக்களஞ்சியம் 
 மொழிபெயர்ப்பும் ஒலி பெயர்ப்பும்  
 வலம் வந்த உலகம் 
 எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்
 புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு
 நூறு பேர்
 மாதிரி லட்சாதிபதி
 ஜெர்மானிய இந்திய இயல் அன்றும் இன்றும்
 பறக்கும்
 இந்திய தேசிய இராணுவத்தின் கதை
 மலேசிய கூட்டரசு அரசமைப்பு சட்டம்

மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த நூல்கள்
 பறக்கும் கலங்கள் 
 காலம்
 பன்னிரண்டு ஓரங்க நாடகங்கள்

உருவாக்கிய தொகுப்புகள்
 அறிவியல் செய்தி  பரிமாற்றம்
 சிறப்பு சிறுகதைகள்
 காசிம் புலவர் திருப்புகழ்

பெற்ற விருதுகளும் சிறப்புகளும்
கலைமாமணி விருது (1985) - மணவையாரின் அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டியும் உலகெங்கும் தமிழ் மொழி கலை இலக்கிய பண்பாட்டுச் சிறப்புகளைப் பரப்பி வருவதற்காகவும் தமிழ்நாடு அரசு இயல் இசை நாடக மன்றம் 1985 இல் வழங்கியது (26.01.85). ‘திரு.வி.க.” விருது (1989) - 1989ல் அறிவியல் தமிழ் வளர்ச்சிப் பணியை பாராட்டி தமிழ்நாடு அளித்த சிறந்த தமிழறிஞர்க்கான விருது. ‘எம்ஜி.ஆர்.” விருது (1996) - அறிவியல் தமிழ் பணியை பாராட்டி ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் 1996இல் வழங்கப்பட்டது. ‘தமிழ் தூதுவர்’ விருது (1994) தமிழ்நாடு கூட்டுறவு வங்கி அதிகாரிகள் மன்றம் உலகளாவிய முறையில் தமிழ்மொழி பண்பாடு கலை இலக்கியப்பணி ஆற்றி வருவதைப் பாராட்டி வழங்கப்பட்டது (28.4.1994).  'வளர்தமிழ்ச் செல்வர்' - இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரி அறிவியல் மன்றம் இவரது அறிவியல் தமிழ்ப்பணியைப் பாராட்டி குன்றக்குடி அடிகளாரால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி' விருது (1987) - சிந்தனையாளர் கழகம் இவரது அறிவியல் தமிழ் பணியை போற்றும் வகையில் அதன் சார்பில் அன்றைய முதல்வர் மு. கருணாநிதியால் வழங்கப்பட்டது.

‘கேரளப் பல்கலைக்கழகப் பாராட்டு” (1994) - கலைச் சொல்லாக்கப் பணியை போற்றும் வகையிலும் தமிழுக்கும் மலையாள மொழிக்குமிடையே மொழி பெயர்ப்பு மூலம்  இணைப்புப் பாலமாக விளங்குவதைப் பாராட்டும் வகையிலும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பொன் விழாவின் பொழுது, இவருக்கு பொன்னாடை அணிவித்து விருதுக் கேடயமும் பாராட்டு இதழும் வழங்கப்பட்டது. சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருது தமிழ்நாடு அரசால் 1994-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

‘புகழ் பதிந்த தமிழர்” பட்டம், பம்மல் - நாகல்கேணி தமிழ்ச் சங்கம் இவரது தமிழ்ப் பணியை பாராட்டி வழங்கியது.	‘அறிவியல் தமிழ் வித்தகர்”	விருது (1995) - ஈரோடு அல்லாமா இக்பால் இலக்கிய மன்றத்தாரால் இவரது தமிழ்ப் பணிக்காக வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழேறு” விருது (1996) மணவைத் தமிழ் மன்றம் இவரது அறிவியல் தமிழப் பணியை பாராட்டி வழங்கியது. ‘ராஜா  சர் முத்தையா செட்டியார் விருது” (1995) திரு.மணைவையாரின் கால் நூற்றாண்டு கால தமிழ் பணியைப் பாராட்டும் வகையில் “ராஜா சர் முத்தைய” விருதும் அண்ணாமலைச் செட்டியார் அறக்கட்டளையின் பொற்கிழியும் வழங்கப்பட்டது.

“முத்தமிழ் வித்தகர்” (1996) உலகப் பண்பாட்டுக் கழகத்தார் இவரது ஆக்கபூர்ர்வமான தமிழ் பணியை பாராட்டும் வகையில் “முத்தமிழ் வித்தகர்” விருது வழங்கினர் (23.07.1996) ‘தந்தை பெரியார் விருது” திராவிடர் கழகத்தின் முத்தமிழ் மன்றத்தாரால் தமிழ் வளர்ச்சி பற்றி பெரியார் கொண்டிருந்த கொள்கையை கனவை நிறைவேற்றும் வகையில் அமைந்து வரும் இவரது அறிவியல் தமிழ் பணியை பாராட்டி வழங்கியது. ‘மூப்பனார்’ விருது (1997) தா.மா.கா.வின் தேசிய ஒருமைப்பாட்டுக் கழகத்தாரால் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது.

‘சாதனையாளர்” விருது இவரது தமிழ்ப் பணியை பாராட்டி 'முகம்' திங்களிதழ் சார்பாக உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி எஸ.மோகனால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் தமிழருவி” விருது (1998) அமெரிக்காவிலுள்ள சிகாகோ தமிழ் மன்றத்தாரால் 1998இல் இவரது அறிவியல் தமிழ்ப்பணியை பாராட்டி வழங்கப்பட்டது. ‘சேவா ரத்னா” விருது (1998)
இவரது இடையறா அறிவியல் தமிழ்ப்பணி சமய நல்லிணக்கப் பணியை பாராட்டி காஞ்சி காமகோடி பீட சென்டினேரியன் டிரஸ்ட் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சங்கர் தயாள் சர்மாவால் வழங்கப்பட்டது (17.09.1998)

‘சான்றோர் விருது” (2000) சான்றோர் பேரவை சார்பில் இவரது அறிவியல் தமிழ்ப் பணியை - குறிப்பாக கலைச் சொல்லாக்கப் பணியைப் பாராட்டி நவம்பர் 2000ல் வழங்கப்பட்டது. ‘கணினி கலைச் சொல்  வேந்தர்” (2000)
திருவையாறு தமிழய்யா கல்விக் கழகம் சார்பில் இவரது கலைச் சொல்லாக்கப் பணியை பாராட்டி விருதும் பொற்கிழியும் நவம்பர் 2000இல் வழங்கப்பட்டது. ‘ஆறாவது உலகத் தமழ் மாநாட்டு சிறப்பு விருது”	தஞ்சையில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழ் மாநாட்டில் அறிவியல் தமிழ் வளர்ச்சிக்காக குறிப்பாக கூரியர் இதழியல் பணிக்காக அப்போதைய முதல்வர் புரட்சித்தலைவியால் சிறப்பு விருது வழங்கப்பட்டது.

‘மாமனிதர்” விருது (1999) இந்திய தேசிய முஸ்லிம லீக் வழங்கியது - 10.3.99 ’அறிவில் கலைச் சொல் தந்தை” விருது (1999) ஆறிவியல் தமிழுக்கு இவர் ஆற்றும் பெரும் பணிக்கு ரூபாய் ஐந்து லட்சத்துடன் இந்தப் பரிசு வழங்கப்பட்டது.  24.02.99 ‘அறிவியல் தமிழ் தந்தை” விருது	(2003) தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை – குவைத் 14.02.2003 ‘தமிழேந்தி’ விருது வளைகுடா வானம்பாடிகள் கவிஞர் சங்கம் வழங்கியது. ‘சீறாச் செல்வர்” விருது கம்பன் கழகம் வழங்கியது

‘தமிழ் வாகைச்  செம்மல்’ விருது சேலம் தமிழ்ச் சங்கம் வழங்கியது. ‘கலைஞர்”விருது (2003) முரசொலி அறக்கட்டளை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது (28.6.2003). ‘அமெரிக்க மாட்சிமை” விருது கனடாவில் வழங்கப்பட்டது. ‘அறிவியல் செல்வம் “ விருது முத்தமிழ் பேரவை சார்பாக கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வழங்கப்பட்டது. ‘தங்க நட்சத்திர’ விருது.
	
‘அறிவியல் தமிழ் கலைசொல் வேந்தர்” விருது வாணியம்பாடி முத்தமழ் மன்றத்தால் வழங்கப்பட்டது. ‘ஆதித்தனார்” விருது	(2004) ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பாக  தங்கப் பதக்கத்துடன் வழங்கப்பட்டது (27.09.2004). ‘உமா மகேசுவரனார்” விருது (2005) கரந்தை தமிழ்ச்சங்ம் வழங்கியது (05.09.2005). ‘செம்மொழிச் செம்மல்” விருது	
திருவள்ளுவர் தமிழ் மன்றம்; மணிமேகலை மன்றம்; கம்பர் கழகம்; சேக்கிழார் மன்றம்; முத்தமிழ் நற்பணி மன்றம்; பாரதி மன்றம் ஆகிய ஆறு மன்றங்களும் இணைந்து இராசபாளையத்தில் வழங்கிறது.

‘செம்மொழிக் காவலர்” விருது (2006) செம்மொழி பணியினை பாராட்டி 20.05.2006 அன்று தலைநகர் தமிழ்ச்சங்கம் வழங்கியது. “இயல் செல்வம்” விருது (2003) இவருடைய கலைத் தொண்டை பாராட்டி டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் முத்தமிழ் பேரவை சார்பாக வழங்கப்பட்டது 28.01.2003. சிறப்பு பரிசு (இலங்கை , 2002) உலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு கொழும்பு (அக்டோபர் 2002) இலங்கை  அதிபர் ரணல் விக்ரமசிங்கே அவர்களால் வழங்கப்பட்டது. ‘அறிவியல் களஞ்சியம்” விருது (2006) பிரான்ஸ் தமிழ் சங்கம் வழங்கியது 9.2.2006. ‘பண்பாட்டு காப்பாளர்” விருது (2006) பூவை தமிழ் பண்பாட்டுச் சங்கம் வழங்கியது (31.12.2006). ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது (2008) பாலம் அமைப்பு 2008ல் வழங்கியது. ‘பாரதி” விருது (2008) ஈரோடு மக்கள் சிந்தனை பேரவை 11.12.2008 வழங்கியது. ‘உலகப் பெருந்தமிழர்“ விருது (2009) உலகத் தமிழர் பேரமைப்பு 27.12.2009ல் வழங்கியது

பல்வேறு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு மற்றும் தமிழகத்தின் பகழ்  பெற்ற அமைப்புகளாவும் நிறுவனங்களாலும் 40க்கு மேற்பட்ட விருதுகளும் பட்டங்களும் பெற்றுள்ளார் இவர்.  தமிழ்நாடு அரசு வழங்கப்படும் சார்பில் ஐந்து விருதுகளை பெற்ற ஒரே தமழறிஞர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது வாழ்க்கையும் சாதனைகளும் மத்திய அரசால் 7 மணி 20 நிமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மறைவு 
இவர் உடல் நலக் குறைவு காரணமாக   பிப்ரவரி 06, 2017 அன்று சென்னையில் காலை 6 மணியளவில் காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள் 
 மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளை
 விழிப்புணர்வு நேர்காணல் 
 மணவை முஸ்தபா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்

தமிழறிஞர்கள்
அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்
தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்
தமிழ் கலைச்சொல் அறிஞர்
நாட்டுடைமை நூல்களின் ஆசிரியர்கள்
1935 பிறப்புகள்
அறிவியல் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்
2017 இறப்புகள்
இசுலாமியத் தமிழறிஞர்கள்
விண்டோஸ் 98 வரைகலை இயங்குதளமானது ஜூன் 25, 1998 அன்றுமைக்ரோசாப்டினால் வெளியிடப்படது. 

இவ் இயங்குதளம் விண்டோஸ் 95 இன் மேம்படுத்தப் பட்ட ஓர் பதிப்பாகும். இவ்வியங்தளத்தில் புதியதாக USB அறிமுகம் செய்யப் பட்டது. FAT32 கோப்புமுறையை ஆதரித்தால் வன்வட்டின் (ஹாட்டிஸ்க் - Harddisk) பிரிவு (Partition) ஒன்றில் 2 GB இடப்பிரச்சினை இருக்கவிலையெனினும் அதிகூடிய பிரிவுன் அளவானது 32 GB ஆகும். இண்டநெட் எக்ஸ்புளேளர் உலாவியானது இவ்வியங்குதளத்திலும் கூட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வசதியானது ஆக்டிவ் டெஸ்டாப் (:en:Active Desktop) என்றழைக்கப் படுகின்றது. 

ஏப்ரல் 1998 இல் கொம்டெக்ஸ்ஸில் (:en:Comdex) இவ்வியங்குதளத்தின் இணைத்தவுடன் இயங்கும் (Plug and Play) வசதி இதில் ஓர் முக்கிய அம்சமென பில்கேட்ஸ் குறிப்பிட்டுக்கூறினார். எனினும் அவரின் உதவியாளர் ஸ்கானரை (Scanner) இணைத்து அதற்குரிய மென்பொருளை நிறுவமுயன்றபோது அவ்வியங்குதளம் நிலைகுலைந்தது (crashed). அப்போது பில்கேட்ஸ் இதற்காகத்தான் இன்னமும் மக்களிடம் விண்டொஸ் 98 ஐ வழங்கவில்லை என்றார்

விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு
விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பானது 5 மே 1999 இல் வெளியிடப்பட்டது. இதில் மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4 இற்குப் பதிலாக இதிலும் வேகமான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 இணைக்கப்பட்டது. அத்துடன் இணைய இணைப்பைப் பகிரும் வசதிகளூடாக ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகள் வலையமைப்பில் ஒரே இணைய இணைப்பைப் பாவிக்கக்கூடியாத உள்ளது.

இயங்குதளத்தின் தேவைகள்
 486 DX, 66 MHz அல்லது அதற்கு மேம்பட்டகணினிகள் 
 24 MB of RAM (கூடுதலாக இருந்தால இயங்குதளம் சிறப்பாத் தொழிப்படும்
வன்வட்டில் (ஹாட்டிஸ்க் - Harddisk) இல் போதுமான இடவசதி*
விண்டோஸ் 95, விண்டோஸ் 3.1 போன்ற இயங்குதளத்தில் இருந்து மேம்படுத்தல்களிற்கு 140-315MB அளவிலான இடவசதி (பொதுவாக 250 MB)
புதிய நிறுவலகள் FAT16 கோப்புமுறையில் உள்ளவற்றிற்கு 210-400 MB (பொதுவாக 260 MB) இடவசதி
புதிய நிறுவலகள் FAT16 கோப்புமுறையில் உள்ளவற்றிற்கு 190-305 MB (பொதுவாக 210 MB) இடவசதி 

குறிப்பு: விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பு ஆகியவையும் 32 GB இற்குமேற்பட்ட அளவிலான வன்வட்டில் (ஹாட்டிஸ்க் - Harddisk) இல் பிரச்சினைகள் உண்டு. மென்பொருள் மேம்படுத்தல்கள் மூலம் இப்பிரச்சினைகுத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது.
 VGA or higher resolution monitor
 CD-ROM or DVD-ROM drive
 மைக்ரோசாப்ட் மவுஸ் அல்லது வேறேதேனும் ஒத்தியங்கும் சுட்டும் கருவி

நிறுவல்கள்
முதன் முதலாக விண்டோஸ் 98 புதிய வன்வட்டில் நிறுவுவதாக இருந்தால் fdisk கட்டளை மூலம் வன்வட்டைப் பிரிக்கவேண்டும். பின்னர் குறிப்பிட்ட ஒரு பகுதியை ஆக்டிவ் பாட்டிஷன் (Active Partition) ஆக்கிவிட்டு நிறுவலை மேற்கொள்ளலாம்.

வன்வட்டினை Format பண்ண format /q/u/s c: என்னும் கட்டளையை வழங்கலாம். இதில் q என்பது விரைவாக என்பதைக் குறிக்கும் ஆங்கிலப் பதமான quick ஐக் குறிப்பிடுகின்றது. இது முதற்தடவையாக போமட் பண்ணினால் ஆதரிக்காது. U என்பது நிபந்தனைகள் அற்ற என்பதைக் குறிக்கும் ஆங்கில பதமான Unconditional என்பதன் தமிழாக்கம் ஆகும். S என்பது சிஸ்டம் என்பதைக் குறிப்பிடுகின்றது எந்தக் வட்டின் பகுதியில் இருந்து கணினி ஆரம்பிக்கவேண்டுமோ அந்த டிரைவைப் போமட் பண்ணுவதற்கு மாத்திரமே /s என்ற சுவிச்சைப் பாவிக்கவும்.

விண்டோஸ் 98 இறுவட்டில்   கீழுள்ளழவாறு MSBATCH.INF கோப்பினை உருவாக்கினால் நிறுவலின் போது கேட்கும் தொடரில்லக்கம் போன்றவற்றை வழங்கலாம். கீழே மைக்ரோசாப்டின் பதிப்புரிமைகாரணாமாக் ஓர் போலியான தொடரிக்கம் தரப்பட்டுள்ளது. 

 MSBATCH.INF

 Copyright (c) 1995-2004 Microsoft Corporation.
 All rights reserved.

[BatchSetup]
Version=3.0 (32-bit)
SaveDate=01/29/00

[Version]
Signature = "$CHICAGO$"

[Setup]
Replace with your product key
ProductKey="This-is-a-fake-key"

வெளியிணைப்புக்கள்
 விண்டோஸ் 98 கணினிகளில் தமிழ் ஒருங்குறியில் எழுத  முகுந்தராஜின் கட்டுரை எழில்நிலாவில்
விடைபெறும் வின்டோஸ் 98 கணனி உலகம் -வலைப்பதிவு 
விண்டோஸ் 98 மாஸ் ஸ்டோரேஜ் டிரைவர் யுஎஸ்பி போன்றவற்றை நிறுவிப் பாவிப்பதற்கான் வழிமுறை. 

 

விண்டோசு இயக்கு தளங்கள்
தனியுடைமை இயக்கு தளங்கள்
கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx) சுருக்கமாக கார்ல் மார்க்சு (5 மே 1818 – 14 மார்ச்சு 1883) செருமானிய மெய்யியலாளரும், பொருளாதார அறிஞரும், வரலாற்றாசிரியரும், சமூகவியலாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், பத்திரிகையாளரும், அரசியல் பொருளாதாரத் திறனாய்வாளரும், சோசலிசப் புரட்சியாளரும் ஆவார். 1848 ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட பொதுவுடைமை அறிக்கை துண்டுப் பிரசுரம், நான்கு-பாகங்களில் மூலதனம் (1867–1883) ஆகியவை இவரது மிகவும் பிரபலமான தலைப்புகள் ஆகும். மார்க்சின் அரசியல் மற்றும் மெய்யியல் சிந்தனைகள் அடுத்தடுத்த அறிவார்ந்த, பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியது.

செருமனியின் திரீர் நகரில் பிறந்த மார்க்சு, பான், பெர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டமும் மெய்யியலும் கற்றார். செருமானிய நாடகத் திறனாய்வாளரும் அரசியல் ஆர்வலருமான செனி வான் வெசுட்பலெனை 1843 இல் மணந்தார். இவருடைய அரசியல் வெளியீடுகள் காரணமாக, மார்க்சு நாடற்றவராகி, பல தசாப்தங்களாக இலண்டனுக்கு மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாடுகடத்தப்பட்டார், அங்கு செருமானிய மெய்யியலாளரான பிரெட்ரிக் எங்கெல்சுடன் இணைந்து தனது சிந்தனையைத் தொடர்ந்தார். எங்கெல்சுடன் இணைந்து பிரித்தானிய அருங்காட்சியக நூலகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு தனது ஆக்கங்களை வெளியிட்டார்.

கூட்டாக மார்க்சியம் என்று புரிந்து கொள்ளப்படும் சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பற்றிய மார்க்சின் விமர்சனக் கோட்பாடுகள், மனித சமூகங்கள் வர்க்க மோதலின் மூலம் உருவாகின்றன எனக் கூறுகிறது. முதலாளித்துவ உற்பத்தி முறையில், இக்கோட்பாடுகள் உற்பத்திச் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் ஆளும் வர்க்கங்களுக்கும் (முதலாளித்துவம் என அறியப்படுகிறது), தொழிலாள வர்க்கங்களுக்கும் (பாட்டாளி வர்க்கம் என அறியப்படுகிறது) இடையேயான மோதலில் வெளிப்படுகிறது. ஊதியத்திற்கு ஈடாக தொழிலாளிகளின் உழைப்பாற்றலை விற்பதன் மூலம் இந்த வழிமுறைகளை செயல்படுத்துகிறது. வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் விமர்சன அணுகுமுறையைப் பயன்படுத்தி, முதலாளித்துவம் முந்தைய சமூகப் பொருளாதார அமைப்புகளைப் போன்ற உள் பதற்றங்களை உருவாக்கியது என்றும், இந்தப் பதற்றங்கள் அதன் சுய-அழிவுக்கு வழிவகுக்கும் என்றும் சோசலிச உற்பத்தி முறை எனப்படும் ஒரு புதிய முறையால் இது மாற்றப்படும் என்றும் மார்க்ஸ் கணித்தார். மார்க்சைப் பொறுத்தவரை, முதலாளித்துவத்தின் கீழ் உள்ள வர்க்க விரோதங்கள் - அதன் உறுதியற்ற தன்மை, நெருக்கடிக்கு ஆளாகும் தன்மை ஆகியவற்றின் காரணமாக - தொழிலாள வர்க்கத்தின் வகுப்பு மனப்பான்மையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும், இது அவர்களின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கும் இறுதியில் வர்க்கமற்ற, பொதுவுடைமை சமூகத்தை நிறுவுவதற்கும் வழிவகுக்கும். முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கும் சமூக-பொருளாதார விடுதலையைக் கொண்டுவருவதற்கும் தொழிலாள வர்க்கம் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டு, மார்க்சு அதைச் செயல்படுத்த தீவிரமாக அழுத்தம் கொடுத்தார்.

மார்க்சு மனித வரலாற்றில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விவரிக்கப்படுகிறார், அவரது பணி பாராட்டப்பட்டும், அதே வேளையில் விமர்சிக்கப்பட்டும் உள்ளது. பொருளாதாரத்தில் இவர் ஆற்றிய பணி, உழைப்பு மற்றும் மூலதனத்துடனான அதன் தொடர்பு பற்றிய சில தற்போதைய கோட்பாடுகளுக்கு அடிப்படையாக அமைந்தது. உலகெங்கிலும் உள்ள பல அறிஞர்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர்கள், அரசியல் கட்சிகள் மார்க்சின் படைப்புகளால் தாக்கம் அடைந்துள்ளனர். நவீன சமூக அறிவியலின் நிறுவனர்களில் ஒருவராக மார்க்சு பொதுவாகக் குறிப்பிடப்படுகிறார்.

வாழ்க்கைக்குறிப்பு 
கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில், ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். காரல் மார்க்சின் தந்தை யூதரான ஐன்றிச் மார்க்சு கிறித்தவராக எப்போது மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் இரைனிசு சைத்துங்கு எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

திருமணம் 
பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெசற்பாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த சென்னியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த சென்னியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, சென்னிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார்.

பிள்ளைகள் 
மார்க்சுக்கும் சென்னிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் சென்னிக்கும் பிறந்த பிள்ளைகள், செனி கரோலின் (1844–1883), செனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), என்றி எட்வார்ட் கை (1849–1850), செனி ஈவ்லின் பிரான்சிசு (1851–1852), செனி சூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.

பணியும் இடர்களும் 
சார்ச்சு வில்லியம் பிரெடரிக் எகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் இழான் இழாக்கு உரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசெல்சு சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கை" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், செருமனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்கசு, இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.

நிதி உதவிகள் 
மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.
மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது.

நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

மூலதனம் நூல் 
அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.

மார்க்சின் சிந்தனைகள் 
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.
மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும். மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை 
மார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில:

 ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
 ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.
 பிரெஞ்சு சோசலிச, சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.
 முந்திய செருமானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக்.
 பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.

வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராகத் தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்றும் ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், கிறித்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கணித்தார்.

மார்க்சின் மெய்யியல் கொள்கைகள் 
மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.
<center>ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."</center>

 கார்ல் மார்க்சின் கடிதம் 
கார்ல் மார்க்சு - மார்ச் 5, 1852-ல் Weydemeyer க்கு எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அவரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தைத் தருகிறது.

" நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதன்று. எனக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்களும் விவரித்துவிட்டார்கள். நான் புதிதாகச் செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்.
 1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.
 2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.
 3. இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவுக்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும். "

 இந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்சு 
1853 ஆம் ஆண்டு, லண்டனில் இருந்து வெளியான "நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்" என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவின் கருத்தை  கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். இப் பத்திரிகையில், இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி, பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள், இந்தியா இராணுவத்தில் புரட்சிக் கலகம், இந்தியாவில் நடந்த சித்ரவதைகள் முதலியன ஆராய்ந்து விவரிக்கப்பட்டன. மேலும், இந்தியாவிலிருந்து பிரிட்டிஷருக்குக் கிடைக்கும் வருமானம், இந்தியாவில் வரும் வரிகள் முதலியன கருத்துக்களையும் தெரிவித்துளார் . 

 இறுதிக் காலம் 
1881 ஆம் ஆண்டு திசம்பரில் மார்க்சின் மனைவி ஜென்னி வான் வெசுட்பலென் காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,
 "மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று மணிக்குக் கால் மணிநேரம் இருந்த போது வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்" என்றார்.

 கார்ல் மார்க்சின் கல்லறை 

இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன.
1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.

 மார்க்சுசின் ஆக்கங்கள் 
 சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம் (Introduction to a Critique of Hegel's philosophy of Right)-1843.
 தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) – 1847.
  சுதந்திரமான நாணயமாற்றுக் கேள்வி பற்றிய சொற்பொழிவு (Discourse upon The Question of Free Exchange) -1848.
  கம்யூனிஸ்ட் அறிக்கை (The communist Manifesto) – 1848.
 மூலதனம் (Das kapital) – 1867
 அரசியல் பொருளாதார திறனாய்விற்கு அறிமுகம் (Introduction to the Critique of Political Economy) -1859.

மார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் 
 1814 - மார்க்சின் மனைவி ஜெனி பிறந்தது
 1818 - காரல் மார்க்சு பிறந்தது
 1820 - பிரெட்ரிக் ஏங்கெல்சின் பிறப்பு
 1836 – 1841-மார்க்சு கல்லூரிப் படிப்பு
 1838 - மார்க்சின் தந்தை கைன்ரிக் மார்க்சு மரணம்
 1842 - மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்
 1843 - ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது. மார்க்சு - ஜெனி திருமணம். பாரிசில் குடியேற்றம்
 1844 - முதல் மகள் பிறப்பு.
 1845 - பாரிசிலிருந்து வெளியேற்ற உத்தரவு. பிரசல்சு வாசம். பிரசிய குடியுரிமையை மார்க்சு துறந்து விட்டார்.
 1847 - சர்வதேசு சங்கத்தின் முதல், இரண்டாம் மாநாடுகள் கூடின.
 1848 - பொதுவுடமை அறிக்கை வெளியானது. பாரிசு புரட்சி. பாரிசிலிருந்து கோலோன் நகரத்துக்கு வருகை. புதிய ரைன்லாந்து கெசட் என்ற புதிய இதழ் தொடக்கம்
 1849 - கோலோனிலிருந்து வெளியேற்றம்.
 1849–1883 - இங்கிலாந்தில் வாழ்ந்தார்.
 1850 - இங்கிலாந்தில் சில காலம் ஓர் இதழை வெளியிட்டு வந்தார்.
 1852 - பன்னாட்டுப் பொதுவுடமைச் சங்கம் கலைக்கப்பட்டது.
 1864 - முதல் இன்டர்நேசனல் தோற்றம்.
 1867- மூலதனம் முதல் பகுதி வெளியானது.
 1872- முதல் இன்டர்நேசனல் கலைக்கப்பட்டது.
 1873 - மார்க்சு உடல் நலம் குன்றினார்.
 1881 - மார்க்சின் மனைவி ஜெனியின் மறைவு.
 1883 - மார்க்சின் மூத்த மகள் சென்னி லொங்குவே மறைந்தார். மார்க்சும் காலமானார்.
 1883–1894 - மூலதனம் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் வெளியாயின.
 1895 - ஏங்கெல்சின் மரணம்

இவற்றையும் பார்க்க 
 பொதுவுடமை அறிக்கை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

 கார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி கூற வேண்டும்?
 
 
 

1818 பிறப்புகள்
1883 இறப்புகள்
இறைமறுப்பாளர்கள்
செருமானிய வரலாற்றாளர்கள்
செருமானிய மெய்யியலாளர்கள்
அறிவாய்வியலாளர்கள்
பொதுவுடமைவாதிகள்
மார்க்சீயர்கள்
புரட்சியாளர்கள்
சமூகவுடமைவாதிகள்
சமூகவியலாளர்கள்
ஊடகவியலாளர்கள்
மார்க்சியப் பொருளியலாளர்கள்
வரலாற்றாளர்கள்
அறிவியலின் மெய்யியலாளர்கள்
புரட்சியாளர்கள்
சமூகவுடமை
மார்க்சிய மெய்யியலாளர்கள்
பொதுவுடமைவாதிகள்
1818 பிறப்புகள்
1883 இறப்புகள்
திருமலை நாயக்கர் அரண்மனை (Thirumalai Nayak Palace) அல்லது திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் பொ.ஊ. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து, சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில், தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால் இந்தோ சரசனிக் பாணி கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக்கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே, தற்போது எஞ்சியுள்ளதாகக் கருதப்படுகின்றது. பிரித்தானிய இந்தியாவின்  சென்னை ஆளுநர், பிரான்சிஸ் நேப்பியர் பொ.ஊ. 1872-இல் இவ்வரண்மனையைப் புதுப்பித்தார். தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை பராமரிக்கும் மூன்று அரண்மனைகளில், இந்த அரண்மனையும் ஒன்றாகும். இவ்வரண்மனையின் நீட்சியாக, பத்துத் தூண் பகுதி இருந்தது.

அமைப்பு 
இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த அரண்மனை, 58 அடி உயரம் கொண்டது. 248 பிரம்மாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் விஷ்ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில், இந்த அரண்மனை, இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம்  என்றும், மற்றது அரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. 'சொர்க்க விலாசம்' மன்னரின் வசிப்பிடமாகவும், 'அரங்க விலாசம்' அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

ஒலி-ஒளி காட்சி 
இந்த மகால், 1971 ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு,  1981 ஆம் ஆண்டு முதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு, இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி காட்சி, நாள்தோறும் மாலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின், இரவு 8 மணிக்கு, தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09  ஆண்டில் சுமார் 36 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டப்பட்டது.

படக்காட்சிகள்

இதனையும் காண்க 
 பத்துத் தூண்கள்
 தஞ்சாவூர் அரண்மனை
 இராமநாதபுரம் அரண்மனை

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள் 
 மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை - காணொலி
 மதுரை திருமலை நாயக்கர் மஹால் சிறப்புகள்
  மதுரை திருமலை நாயக்கர் மஹால் - காணொலி
ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நாயக்கர் அரண்மனை - மறுசீரமைப்பு

தமிழ்நாட்டு அரண்மனைகள்
மதுரை மாவட்டம்
மதுரை நாயக்கர்கள்
{| class="infobox" style="width: 22em"
|+ மதுரை நாயக்க மன்னர்கள் 
     விஜயநகரப் பேரரசின்  சேய் அரசுதான் மன்னர் திருமலை நாயக்கர் அரசு
      விஜயநகரப் பேரரசின் முதல் அரசர் ஹரிஹர ராயன் I 	1336–1356'
| ஆட்சி மொழி || தமிழ், தெலுங்கு
|-
| தலைநகரம் ||  மதுரை 1529–1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634–1695, திருச்சி 1695–1716, மதுரை 1716–1736.
|-
| முன்ஆட்சி || பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
|-
| பின்ஆட்சி  || இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
|-
|  பிரிவு  || ராமநாதபுரம்
புதுக்கோட்டை  சிவகங்கை
|}

திருமலை நாயக்கர், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவராவார். இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் காலத்தில் டெல்லி சுல்தானின் படைகளாலும், மற்றும் அயலிலிருந்த முஸ்லிம் அரசுகளாலும் தொடர்ந்து பயமுறுத்தல்கள் இருந்து வந்தன. எனினும் அவற்றை முறியடித்துத் தனது நாட்டை இவர் சிதையாமல் காப்பாற்றினார். இவரது ஆட்சிப்பகுதிக்குள் பண்டைய பாண்டிநாட்டின் பெரும் பகுதி அடங்கியிருந்தது.

 ஆரம்பகாலம் 
இவர் முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர் மகனாக கி.பி 1584 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது இயற்பெயர் திருமலை சவுரி நாயினு அய்யலுகாரு'' என்பதாகும். முதலாம் முத்துவீரப்பர் சந்ததியின்றி இறந்தமையால் இவரது தம்பி திருமலை நாயக்கர் மதுரை நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார்.

ஆட்சிப் பகுதிகள் 
திருமலை நாயக்கர் திருச்சிராப்பள்ளியிலிருந்து தலைநகரை
மீண்டும் மதுரைக்கு மாற்றினார்.

ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள். 
திருநெல்வேலி நாடு, திருவிதாங்கூர் ஆட்சிபகுதியின் ஒரு பகுதி இத்துடன் தமிழ்நாட்டில் உள்ள
மதுரை,
திண்டுக்கல்,
ராமநாதபுரம்,
சிவகங்கை,
புதுக்கோட்டை,
மணப்பாறை,
கோயம்புத்தூர்,
சேலம் மற்றும்
திருச்சிராப்பள்ளி போன்ற பகுதிகள் நாயக்க மன்னரால் ஆளப்பட்டன. இங்கு குறிக்கப்பட்டுள்ள ஊர்கள், அந்த ஊர்களுடன் சேர்த்து அந்தந்த ஊர்களை தலைநகராக கொண்ட பகுதிகளையும் குறிக்கின்றன. இருப்பினும் இந்த பகுதிகள் திருமலை நாயக்கரின் ஆளுகையில் இருந்தாலும் இவற்றை நேரடியாக ஆட்சி செய்தவர்கள் அந்த பகுதிகளில் நியமிக்கப்பட்ட பாளிகார் என்றழைக்கப்படும் பாளையக்காரர்கள்தான்.

கட்டிடக்கலை 

தமிழக மக்கள் மறவாது நினைக்குமாறு மதுரையை விழாநகரமாகவும்,கலைநகரமாகவும் மாற்றியமைத்தார்.
திருமலை நாயக்கர், கட்டிடக்கலை உள்ளிட்ட கலைகள் மீது ஆர்வம் கொண்டு அவற்றின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களித்தார்.  பழைய கோயில்களைத் திருத்தி அமைத்தார்.
திருமலை நாயக்கர் மகால் என அழைக்கப்படும் அரண்மனை திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில் கட்டுவிக்கப்பட்டது. புதுமண்டபம் கட்டி முடித்த பின்னர், இவரால் துவக்கப்பட்ட இராயகோபுரம் கட்டிடப் பணி முற்றுப் பெறாமலேயே உள்ளது.

மணிமண்டபம் 
திருமலை நாயக்கர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தீவிரமான பக்தன். தினந்தோரும் ஆண்டாள் கோவில் உச்சிகால பூசை முடித்த பின் மதிய உணவு உட்கொள்வது வழக்கம். மன்னர் மதுரையில் இருக்கும்போது ஆண்டாள் கோவில் பூசை மணிஓசையை அறிந்துகொள்ள வழிநெடுக பல மணிமண்டபங்களை அமைத்தார்.

இதனையும் காண்க 
 திருமலை நாயக்கர் அரண்மனை
 புதுமண்டபம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 
 ஸ்ரீவில்லிப்புத்தூரில் திருமலை நாயக்கரின் மகால்
  மன்னாதி மன்னன் திருமலை நாயக்கன்

நாயக்க அரசர்கள்
1659 இறப்புகள்
தெலுங்கு மன்னர்கள்
 இந்திய அரசர்கள்
இடைக்காட்டுச் சித்தர் பாடல் இடைக்காட்டுச் சித்தர் என்பவரால் பாடப்பட்டது. காப்புச் செய்யுள் நீங்கலாக 130 பாடல்களை உடையது இப்பாடல் தொகுப்பு.

எளிமையான நடையுடையவை. உலகவியல்பினை, நிலையாமையை, உணர்ந்து இறைவன் அருளை நாடும் இன்றியமையாமையைப் பொதுவாக அடிப்படைக் கருத்தாக உடையன இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள். இவை நாட்டுப் பாங்கான இலக்கிய அமைதிகளைப் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. தாண்டவக்கோனே, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் நாட்டுப்பாடல் மரபினைக் காட்டுகின்றன.

இவரது பாடல் ஒன்று
மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!

மனம் என்பது கட்டுக் கடங்காத ஒரு முரட்டு மாடு, அது நமது கட்டுக்குள் அடங்குமானால் விடுதலை கிடைத்து வெற்றியும் அடையலாம் என்று கூறுகிறார்.

வெளியீடுகள்
பதினெண் சித்தர்கள் பெரிய ஞானக்கோவை (முருகேசநாயகர் 1899, வி. சரவணமுத்துப்பிள்ளை 1907)
பதினெண்சித்தர் பெரிய ஞானக்கோவை என வழங்கும் சித்தர் பாடல்கள் (அரு இராமநாதன், 1959)

மேற்கோள்கள்

இணையத்தில் இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள்
இடைக்காட்டுச் சித்தர் பாடல்கள் 
சித்தர் பாடல்கள்
கிளிவெட்டி சிவன் கோயில் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் கிளிவெளிவெட்டியில் அமைந்துள்ளது. மூதூர் மட்டக்களப்பு முதன்மை வீதிக்கு அருகில் உள்ள இக்கோயில் மூதூர் தோப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து கொழும்புக்கான தரைவழிப்பயணத்தை மேற்கொள்கின்ற அனைவரும் வணங்கிச் செல்லும் முதன்மைக் கோயில் ஆகும்.

இவ்வூருக்கு அருகில் ஆஸாத்நகர், ஜின்னாநகர் போன்ற இசுலாமிய ஊர்களும் தெகிவத்த என்னும் சிங்கள ஊரும் அமைந்துள்ளது. பாரதிபுரத்தில் 500க்கும் மேற்பட்ட இந்துக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

புதிதாக கருவறை அர்த்தமண்டபம், மகாமண்டபம். தரிசன மண்டபம், மடப்பள்ளி என்பன மறு சீரமைக்கப்பட்டுளன. கூடிய விரைவில் பெரும் திருக்குடமுழுக்கும் நடைபெற உள்ளது.

ஆதாரங்கள் 
ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்

இலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்
திருகோணமலையில் உள்ள கோயில்கள்
வந்தாறுமூலைச் சிவன் கோவில் இலங்கையின்  கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. வந்தாறுமூலைக்கு மேற்கே சுமார் 30 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட லிங்கம் பின்னர் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோவில்கள்
இலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்
ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் (ஏப்ரல் 26, 1762 - பெப்ரவரி 06, 1827) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு
இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் வெங்கடசுப்ரமணிய சர்மா என்பதாகும். "சியாம கிருஷ்ணா" செல்லப்பெயரே இசை உலகில் நிலைத்து விட்டது. தெய்வப்புலமை பெற்ற வாக்கேயக்காரரென எல்லோராலும் மதிக்கப்பட்டார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் இவர்பால் மிக்க அன்பு கொண்டிருந்தார்.

சியாம கிருஷ்ணன் இளமை முதல் சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் இவர் அம் மொழிகளில் பெரும் புலமை பெற்றார். பாடல்கள் இயற்றும் ஆற்றல் பெற்றார்.

இசைப் புலமை
இவர் ஆரம்பத்தில் தமது மாமனாரிடம் இசை பயின்றார். பின்னர் சங்கீத சுவாமிகள் என்பவரைக் குருவாகக் கொண்டு சங்கீத நுட்பங்களையும் தாள சாஸ்திர மர்மங்களையும் சங்கீத நடை பேதங்களின் கிரமங்களையும் நன்கு அறிந்து கொண்டார். சங்கீத சுவாமிகள், சியாமா சாஸ்திரிகளுக்கு இசை நுட்பங்களைப் போதித்ததோடு நில்லாது அரிய இசைச் சுவடி ஒன்றையும் கொடுத்துதவினார்.

தேவி பக்தரான சியாமா சாஸ்திரிகள் ஆதியப்பரின் இசையினை பெரிதும் விரும்பிக் கேட்கத் தொடங்கினார். இதனால் அவர் மீது அதிக பற்று கொண்டார். இவரது இசை ஞானத்தையும் தேவி பக்தியையும் கண்ட ஆதியப்பர் இவர் மீது அன்பு கொண்டார். தானவர்ணங்களில் ஆணிமுத்தைப் போல விளங்கும் விரிபோணி (பைரவி ராகம் - அட தாளம்) வர்ணத்தின் கர்த்தாவாகிய ஆதியப்பர் சங்கீதத்தின் நுட்பங்களையும், இரகங்களின் மர்மங்களையும், கமகங்களின் நுண்மைகளையும் அடிக்கடி பாடியும் வீணையில் வாசித்தும் சாஸ்திரிகளுக்கு விளக்கினார்.

இசைப்பணி
சங்கீத சாஸ்திர நுட்பங்களை நன்குணர்ந்த சியாமா சாஸ்திரிகள் இளமையிலேயே உருப்படிகளை இயற்ற ஆரம்பித்தார். முதலில் சமஸ்கிருதத்திலும் பின்னர் தெலுங்கிலும் கிருதிகளை இயற்றினார். சில உருப்படிகளை தமிழில் செய்தார்.

இசை நுணுக்கம் தெரிந்தவர்களே இவரது பாடல்களை நன்கு பாட முடியும். இவரது பாடல்களைக் கதலி ரசத்திற்கு ஒப்பிடுவர். ஏறத்தாழ 300 கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அபூர்வமான இராகங்களை மாஞ்சி, கல்கட, கர்நாடக காபி, சிந்தமணி போன்றவற்றிலும் கிருதிகளைச் செய்துள்ளார்.

இவரது சில கிருதிகள் விலோம சாபு தாளத்தில் அமைந்துள்ளன. அதாவது தகிட தகதிமி என்னும் சாதாரண முறையில் இல்லாமல் தகதிமி தகிட என்னும் மாற்று முறையில் அமைந்துள்ளன. (உதாரணம்: நின்னு வினாகமரி-  பூர்விகல்யாணி)

பைரவி இராகத்தில் உள்ள இவரது காமாட்சி ஸ்வரஜதியில் சரணங்களின் ஆரம்ப ஸ்வரங்கள் ஆரோகண ஸ்தாயி என்னும் முறையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்வராஷ்ட்ர அணிகளை இவர் தனது உருப்படிகளில் நன்கு பயன்படுத்தியுள்ளார்.
	
இவரது பெரும்பாலான பாடல்கள் காமாட்சி அம்மன் பேரில் பாடப்பட்டிருக்கும். வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விசேட தினங்களிலும் சியாமா சாஸ்திரிகள் பங்காரு காமாட்சியின் சந்நிதியில் உட்கார்ந்து கொண்டு தியானம் செய்வார். பக்திப்பரவசத்தால் அவர் கண்களில் இருந்து நீர் தாரை தாரையாகப் பெருகும். அவ்வேளைகளில் அநேக உருப்படிகள் அவர் வாக்கினின்றும் உதித்தன. இக்காரணம் பற்றியே இவரது உருப்படிகளுக்கு தனியான சுவை ஒன்று ஏற்பட்டது என்பர்.

நவரத்ன மாலிகை	
மதுரை மீனாட்சியம்மன் பேரில் பல கிருதிகளை இவர் இயற்றியுள்ளார். அம்மன் சந்நிதியில் நவரத்ன மாலிகை என்னும் பிரசித்தி பெற்ற ஒன்பது கிருதிகளைப் பாடினார்.

நவரத்ன மாலையில் பிரசித்தமான கிருதிகள் சில வருமாறு:
 ஸரோஜ தாள நேத்ரி (சங்கராபரணம்)
 தேவிமீன நேத்ரி (சங்கராபரணம்)
 மரிவேறே கதி (ஆனந்தபைரவி)
 நன்னுப்ரோவு லலிதே லலிதா
 மாயம்மயனி நே பிலசிநே (ஆஹிரி)
 தேவி நீ பதராஸ (காம்போஜி)
 மீனலோசனப்ரோவ (தன்யாசி)

உருப்படிகள்
இவரது உருப்படிகளில் பலவிதமான இசையணிகள் அழகுறச் சேர்க்கப்பட்டுள்ளன. சில உருப்படிகளில் அழகான ஸ்வரஸாகித்யங்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில:
 நின்னே நம்மினானு (தோடி)
 துருஸுகா க்ருப ஜுசி (சாவேரி)
 பாஹி ஸ்ரீ கிரிராஜஸுதே (ஆனந்தபைரவி)
 மரிவேரே கதி (ஆனந்தபைரவி)
 பாலிஞ்சு காமாட்சி (மத்தியமாவதி)

அஞ்சல்தலை
சியாமா சாஸ்திரியின் நினைவைப் போற்றும் வகையில், இந்திய அரசின் அஞ்சல் துறை ஒரு ரூபாய் மதிப்பிலான அஞ்சல்தலையை 21 திசம்பர் 1985 அன்று வெளியிட்டது.

இவற்றையும் பார்க்கவும்
 தியாகராஜ சுவாமிகள்
 முத்துசுவாமி தீட்சிதர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

இசை மும்மூர்த்திகள்
கருநாடக இசைக் கலைஞர்கள்
வாக்கேயக்காரர்கள்
1762 பிறப்புகள்
1827 இறப்புகள்
திருவாரூர் மாவட்ட நபர்கள்
தெலுங்கு மக்கள்
இரத்தினபுரி இரத்தின சபேஸ்வரர் கோவில் இலங்கையில் இரத்தினபுரி வரக்காகோட்ட வீதியில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் சபேஸ்வரர் என்றும், அம்பிகை திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இவ்வாலயம் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த ஆலயங்களில் ஒன்றாகும்.

இவ்வாலயம் இரத்தினபுரி சைவபரிபாலன மகா சபையினரால் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாலயம் 1989ஆம் ஆண்டு ஸ்ரீ பொன்னம்பலவாணேஸ்வர தேவஸ்தான காலஞ்சென்ற பிரதம குருக்கள் சிவஸ்ரீ  குஞ்சிபாதக் குருக்கள் தலைமையில் பாலபஸ்தானம் செய்து வைக்கப்பட்டு  புனருத்தாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன். 15 ஆண்டுகளிற்குப் பின் இப்பணிகள் பூர்த்தியடைந்தன.

இன்று இவ்வாலயம் விநாயகர், சுப்பிரமணியர் , நடராஜர், வைரவர், நவக்கிரக 58 பரிவாரங்களுடன் உள்ள ஓர் ஆலயமாகவுள்ளது.  கும்பாபிஷேகம் நடைபெற்றபின்னர் முதன்முறையாக 4 ஏப்பர் 2006ஆம் அன்று சுவாமி வெளிவீதி வலம் வந்து அடியார்களிற்கு அருள்பாலித்தார்.

இவ்வாயத்தில் முக்கிய தினங்கள் அனைத்தும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றன.

ஆதாரங்கள்
ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்

இலங்கையில் உள்ள இந்துக் கோவில்கள்
இரத்தினபுரி
இலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்
பொன்னம்பலவாணேசுவரர் கோயில் கொழும்பு நகரில் சரித்திரப் புகழ்வாய்ந்த கோயில்களுள் ஒன்றாகும். இது கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோயில்.

வரலாறு
இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள்  சில இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடத்தின் தூண்கள் ஒரே கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டன. கூரை வேய்தலுக்கான கற்பாறைகள் 25 அடி நீளமாகவும், 5 அடி அகலமாகவும், 1 அடி கனமாகவும் உள்ளன.

இக்கோயிலின் இராசகோபுரம் கட்டி முடிக்கப்பட முன்னரே சேர் பொன். இராமநாதன் காலமாகிவிட்டார். அவர் இறந்து பல ஆண்டுகளாகியும் இராசகோபுரம் மொட்டையாகவே இருந்தது. பின்னர் இராசகோபுரத்தை மீள நிர்மாணிக்கும் பணிகள் 1965 ஆம் ஆண்டளவில் அவரது சந்ததியினரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இராசகோபுரத்தை கருங்கற்களால் அவர்களால் கட்ட முடியவில்லை. பதிலாக சீமெந்தினால் கட்டி முடிக்கப்பட்டது. ஐந்து மாடிகள் கொண்ட இக்கோபுரத்தில் 162 விக்கிரகங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இந்த ராசகோபுரம் வண்னம் தீட்டப்படாது, கருங்கற்களால் செதுக்கிய கட்டிடம் போன்று அமைக்கப்பட்டது.

அமைப்பு
மூலத்தானத்தில் பொன்னம்பலவாணேசுவரர் வீற்றிருக்க சிவகாமி அம்பாள் - அம்பாள் சந்நிதானத்தில் அமர்ந்திருக்கிறார். நடராசர், மூலப் பிள்ளையார், சோமஸ்கந்தர், பஞ்சலிங்கம், விஷ்ணு, சுப்பிரமணியர், சண்முகர், பைரவர், சுவர்ண பைரவர், நவக்கிரகம் ஆகியோருக்குத் தனித்தனி ஆலயங்கள் உள. கோட்டத்தில் நர்த்தன கணபதி, தட்சணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை முதலானோர் உள்ளனர். சனீசுவரன் தனியாக அமர்ந்துள்ளார்.

வெளிவீதியில் கோவிலின் முன்னே நர்த்தன கணபதியும், தென்புறத்தே மாரி அம்மன், ஆஞ்சநேயர், முனியப்பர் ஆகியோர் தனி ஆலயங் கொண்டுள்ளனர். வடக்கே கோமாதாவின் கோகுலம் உள்ளது.

விழாக்கள்
ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பித்து பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று நிறைவு பெறுகின்றது. தேர்த்திருவிழா அன்று சோமாஸ்கந்தர், அம்பாள், சண்டேசுவரர் தம் தம் அழகிய சிற்பத் தேர்களிலும் விநாயகர், முருகன் தம் வாகனங்களிலும் எழுந்தருளி வீதி வலம் வருவர். அம்பாளின் தேரைப் பெண்களே இழுப்பது வழக்கம்..

மேற்கோள்கள்

கொழும்பு மாவட்டத்தில் உள்ள கோயில்கள்
திராவிடக் கட்டிடக்கலை
இலங்கையில் உள்ள சிவன் கோயில்கள்
வில்லியம் சேக்சுபியர் (William Shakespeare; திருமுழுக்கு: 26 ஏப்ரல் 1564 – 23 ஏப்ரல் 1616)  என்பவர் ஆங்கிலேய நாடகாசிரியர், பாவலர் மற்றும் நடிகர் ஆவார். ஆங்கில மொழி எழுத்தாளர்கள் அனைவரிலும் சிறந்தவராகவும், உலகின் சிறந்த நாடக ஆசிரியராகவும் பரவலாகக் கருதப்படுகிறார். இவர் அடிக்கடி இங்கிலாந்தின் தேசியக் கவிஞர், "அவோனின் புலவர்" அல்லது சுருக்கமாகப் "புலவர்" என்று அழைக்கப்படுகிறார். இவரது கூட்டுமுயற்சிகள் உள்ளிட்ட நடப்பிலுள்ள படைப்புகளானவை சுமார் 39 நாடகங்கள், 154 ஈரேழ் வரிப்பாக்கள், 3 விவரிக்கப்பட்ட நீண்ட கவிதைகள், சில பிற கவிதைகள் மற்றும் ஆசிரியர் யாரென்று உறுதி செய்யப்படாத கவிதைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இவரது நாடகங்கள் கிட்டத்தட்ட முக்கியமான தற்கால மொழிகள் அனைத்திற்கும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மற்ற எந்த நாடகாசிரியரின் படைப்புகளையும் விட அடிக்கடி நடத்தப்படுகின்றன. விவாதத்திற்குரியதாக இருந்தாலும் ஆங்கில மொழியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்தாளராக இவர் இன்றும் கருதப்படுகிறார். இவரது படைப்புகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் படைக்கப்படுகின்றன.

சேக்சுபியர் இங்கிலாந்தின் வார்விக்குசையர் மாநிலத்தில் இசுதிராத்போர்டு என்ற இடத்தில் பிறந்தார். அங்கு வளர்க்கப்பட்டார். இவர் தன் 18ஆம் அகவையில் அன்னே கதாவேய் என்ற பெண்ணை மணந்தார். இருவருக்கும் சூசன்னா மற்றும் இரட்டைக் குழந்தைகளான ஆம்னெத் மற்றும் சூடித் ஆகிய 3 பிள்ளைகள் பிறந்தனர். 1585 மற்றும் 1592க்கு இடைப்பட்ட காலத்தில் இவர் இலண்டனில் நடிகர், எழுத்தாளர், மற்றும் பிரபு சாம்பெர்லைனின் ஆட்கள் என்ற நாடக நிறுவனத்தின் பகுதியளவு உரிமையாளராக வெற்றிகரமான தன் நாடக வாழ்க்கையைத் தொடங்கினார். இந்நிறுவனம் பிற்காலத்தில் அரசனின் ஆட்கள் என்று பெயர் பெற்றது. 1613ஆம் ஆண்டின் வாக்கில் தன் 49ஆம் அகவையில் இவர் இசுதிராத்போர்டுக்கு ஓய்வில் சென்றார் எனத் தெரிகிறது. அங்கு 3 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் இறந்தார். சேக்சுபியரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி சில பதிவுகளே எஞ்சியுள்ளன. இது இவரது உடல் தோற்றம், சமய நம்பிக்கைகள் மற்றும் இவர் படைத்ததாகக் கூறப்பட்டுள்ள படைப்புகள் மற்றவர்களால் எழுதப்பட்டுள்ளனவா என்பது பற்றி பெருமளவிலான ஊகங்களைத் தூண்டியுள்ளது.

சேக்சுபியர் தற்போது அறியப்படும் தன் பெரும்பாலான படைப்புகளை 1589 மற்றும் 1613க்கு இடைப்பட்ட காலத்தில் படைத்தார். இவரது ஆரம்பகால நாடகங்கள் முதன்மையாக நகைச்சுவை மற்றும் வரலாற்று நாடகங்களாக இருந்தன. அந்நாடகங்கள் தத்தமது வகைகளின் மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாகக் கருதப்படுகின்றன. பிறகு இவர் 1608ஆம் ஆண்டு வரை முதன்மையாகத் துன்பியல் நாடகங்களை எழுதினார். அவற்றுள் சிலவான ஹாம்லெட், ரோமியோ ஜூலியட், ஒத்தெல்லோ, லெயிர் மன்னன், மற்றும் மக்பெத் ஆகிய அனைத்தும் ஆங்கில மொழியின் மிகச் சிறந்த படைப்புகளில் சிலவாகக் கருதப்படுகின்றன. தன் வாழ்வின் கடைசிக் காலத்தில் இவர் துன்ப நகைச்சுவை நாடகங்களை (இவை காதல் நாடகங்கள் என்றும் அறியப்படுகின்றன) எழுதினார். மற்ற நாடகாசிரியர்களுடனும் இணைந்து படைப்புகளை உருவாக்கினார்.

இவரது பெரும்பாலான நாடகங்கள் இவரது வாழ்நாளில் வெவ்வேறு தரம் மற்றும் துல்லியத்துடன் கூடிய பதிப்புகளாகப் பதிப்பிக்கப்பட்டன. எனினும், 1623ஆம் ஆண்டு சேக்சுபியரின் நண்பர்களும், உடன் நடித்த நடிகர்களுமான யோவான் எம்மிங்சு மற்றும் என்றி கான்டல் ஆகிய இருவர் இவரது நாடகங்களின் முழுமையான தொகுப்பினை முதல் இணைபக்கம் என்ற பெயரில் பதிப்பிட்டனர். இது இவரின் இறப்பிற்குப் பிறகு பதிப்பிக்கப்பட்ட, இவரது இரு நாடகங்களைத் தவிர மற்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பதிப்பாகும். இதன் முகப்பில் தற்போது அடைமொழியாகப் பயன்படுத்தப்படும், சேக்சுபியரைப் போற்றிய பென் ஜான்சனின் முன்னுணர்வுடைய ஒரு கவிதை குறிப்பிடப்பட்டிருந்தது: "ஒரு காலத்திற்கல்ல, எக்காலத்திற்கும் உரியவர்".

குறிப்புகள்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 
1564 பிறப்புகள்
1616 இறப்புகள்
கீற்று தமிழின் முக்கிய சில சிற்றிதழ்களை வெளியிடும் இணைய தளம் ஆகும். இது இலக்கியம், திரைவிருந்து, சிற்றிதழ்கள், மருத்துவம், நளபாகம், தகவல் களம், சிரிப்'பூ' ஆகிய பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

கீற்றில் வெளியிடப்படும் இதழ்கள்
 தமிழ்தேசிய தமிழர் கண்ணோட்டம்
 தலித் முரசு
 கதைசொல்லி
 சிந்தனையாளன்
 விழிப்புணர்வு
 கவிதாசரண்
 அணங்கு
 தீம்தரிகிட
 புதிய காற்று
 புதுவிசை
 அநிச்ச
 உங்கள் நூலகம்
 உன்னதம்
 கூட்டாஞ்சோறு
 புரட்சி பெரியார் முழக்கம்
 தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்
 தாகம்

வெளி இணைப்புகள்
கீற்று இதழ்

 

தமிழ் வலைத்தளங்கள்
அருள் செல்வநாயகம் (சூன் 6, 1926 - செப்டம்பர் 2, 1973) வரலாற்றுச் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் நாடகங்கள், கட்டுரைகள் எழுதிய ஈழத்து எழுத்தாளர். இவரது முதற் சிறுகதையான 'விதியின் கொடுமை' 1946 இல் மின்னொளி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. பின்னர் இவரது சிறுகதைகள் கலைமகள், அமுதசுரபி, காவேரி, உமா, கல்கி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. திருவருட் செல்வம், ரி.டி.எஸ். வழிகாட்டி, குருசெல்வம், செல்வா, ரி. டி. செல்வநாயகம், குபேரன் ஆகிய புனைபெயர்களிலும் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு
அருள் செல்வநாயகம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம், குருமண்வெளி என்ற ஊரில் 1926 சூன் 6 ஆம் நாள் தம்பாய்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோருக்குப் பிறந்தார். நல்லூர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் 1948 இல் சேர்ந்து 1950 ஆம் ஆண்டில் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். மட்டக்களப்பிலும் மலையகத்திலும் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும், அதிபராகவும் பணிபுரிந்தார். 1956 ஏப்ரல் 23 இல் அருளம்மா என்பவரைத் திருமணம் புரிந்தார். மனைவியின் பெயரை முதன்மைப்படுத்தி அருள் செல்வநாயகம் என்ற பெயரில் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார்.

எழுத்துப் பணி
நுவரெலியா அக்கரைப்பத்தனையில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய போது ‘பசுமலைப் பார்பதி’ என்னும் கதையை எழுதி வெளியிட்டார். இவர் 23 நூல்களை படைத்துள்ளார். மட்டக்களப்பில் முதல்முதல் சிறுகதை தொகுதி வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இவரது ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்கள் இலங்கை, இந்திய, மலேசிய வானொலிகளில் ஒலிபரப்பப்பட்டுள்ளன. "சீர்பாத குல வரலாறு" என்னும் இவரது ஆராய்ச்சிக் கட்டுரை 1968 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் வாசிக்கப்பட்டு அறிஞர்களால் பாராட்டப்பட்டது. சென்னை சாகித்திய அகடமி வெளியிட்ட கலைக்களஞ்சியத்திலும் இவரது கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.

சுவாமி விபுலானந்தரால் எழுதப்பட்டுப் பிரசுரிக்கப்படாத கட்டுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள் முதலியவைகளை அருள் செல்வநாயகம் தேடிப் பெற்று விபுலானந்த அடிகள் என்னும் நூலை 1953 ஆம் ஆண்டு வெளியிட்டார். அத்துடன், விபுலானந்தரின் ஆக்கங்களைத் தொகுத்து விபுலானந்தத்தேன், விபுலானந்த வெள்ளம், விபுலானந்த செல்வம், விபுலானந்த ஆய்வு, விபுலானந்தர் கவிதைகள், விபுலானந்தக் கவிமலர், விபுலானந்த அமுதம், விபுலானந்தச் சொல்வளம், விபுலானந்த அடிகள் என்னும் பத்து நூல்களாக வெளியிட்டார். விபுலானந்த ஆய்வு என்னும் நூல் க.பொ.த (சா.த) வகுப்பிற்கு இலக்கிய பாடப் புத்தகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. விபுலானந்த வெள்ளம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பாடநூலாகவும், விபுலானந்த இன்பம் க.பொ.த. உயர்தர வகுப்புக்குக்கும் பாட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இவரது நூல்கள்

சிறுகதைத்தொகுதி
 தாம்பூல ராணி

புதினங்கள்
 பாசக்குரல் - 1963
 மர்ம மாளிகை – 1973
 வாழ முடியாதவன்
 மாலதியின் மனோரதம்
 சூரிய காந்தி
 வாள்முனை வாழ்வு – 3 பாகங்கள்
 திலகசுந்தரி

நாடகத் தொகுப்பு
 உயிர் தந்த ஓவியங்கள்

ஆராய்ச்சி நூல்கள்
 நறுமலர் மாலை
 ஈழமும் தமிழரும்
 சீர்பாத குல வரலாறு

தேடித் தொகுத்து வெளியிட்ட நூல்கள்
 விபுலானந்த அமுதம்
 விபுலானந்தத் தேன்
 விபுலானந்த வெள்ளம்
 விபுலானந்தக் கவிதைகள்
 விபுலானந்தச் செல்வம்
 விபுலானந்த ஆராய்வு
 விபுலானந்தக் கவிமலர்
 விபுலானந்த சொல்வளம்
 விபுலானந்த இன்பம்
 பூசணியாள் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு (1957)
 சதாரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு (1957)
 பாஞ்சாலி சுயம்வரம் - மட்டக்களப்பு மக்களின் ஊஞ்சல் பாடல்களின் திரட்டு

மேற்கோள்கள்

ஈழத்து எழுத்தாளர்கள்
1926 பிறப்புகள்
1973 இறப்புகள்
மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
பியூட்டேன் (Butane)என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C4H10 ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CH3CH2CH2CH3.

இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும். 
அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது. இதன் பெயர் பியூட்ரிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட பியூட் மற்றும் அல்கேன்களுக்கான விகுதி ஏன் ஆகியைவ இணைந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சேர்மம் எட்வர்ட் பிரேங்லேண்ட் என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்டது.

மாற்றியங்கள் 

n-பியூட்டேனில் மையத்தில் உள்ள C−C பிணைப்பைப் பொறுத்த சுழற்சி இரண்டு விதமான (டிரான்சு மற்றும் காஸ்) வகை (டிரான்சு மற்றும் காசு) புறவெளி அமைப்பு மாற்றியங்களைத் தோற்றுவிக்கிறது.

வேதிவினைகள் 
அதிக அளவு ஆக்சிசனின் முன்னிலையில் பியூட்டேன் ஆக்சிசனில் எரிந்து கார்பனீராக்சைடு மற்றும் நீராவியைத் தருகிறது; குறைவான அளவில் ஆக்சிசன் இருக்கும் போது, கார்பன்(புகை) அல்லது கார்பன் மோனாக்சைடும் சேர்த்து உருவாக்கப்படலாம்.

போதுமான ஆக்சிசனின் முன்னிலையில்:
 2 C4H10 + 13 O2 → 8 CO2 + 10 H2O
வரையறுக்கப்பட்ட அல்லது குறைவான ஆக்சிசனின் முன்னிலையில்:
 2 C4H10 + 9 O2 → 8 CO + 10 H2O

காற்றில் எரியும் போது பியூட்டேனின் உயர்ந்தபட்ச வெப்பமாறா தழல் வெப்பநிலையானது.

n-பியூட்டேனானது மேலியிக் நீரிலியின் தயாரிப்பின் போதான டூபாண்ட் எனப்படும் வெடிமருந்தின் வினைவேகமாற்றிச் செயல்பாட்டின் தொடக்கநிலை மூலப்பொருளாக உள்ளது:
2 CH3CH2CH2CH3 + 7 O2 → 2 C2H2(CO)2O + 8 H2O

n-பியூட்டேன், அனைத்து இதர ஐதரோகார்பன்களைப் போலவும் தனி உறுப்பு குளோரினேற்ற வினைகளில் ஈடுபட்டு 1-குளோரோ மற்றும் 2-குளோரோபியூட்டேன்கயும், மேலும் அதிக குளோரினேற்றம் செய்யப்பட்ட வழிப்பொருட்களையும் தருகின்றது. குளோரினேற்ற வினையின் வேகங்களின் ஒப்புமையானது n-பியூட்டேனில் காணப்படும் இரண்டு வகை c-H பிணைப்புகளின் பிணைப்பு சிதையும் ஆற்றல்களில் உள்ள வேறுபாட்டைக் (425 and 411 கிலோயூல்/மோல்) கொண்டு விளக்கப்படுகிறது.

பயன்கள் 
பியூட்டேனானது பெட்ரோல் (அ) பாறை எண்ணெய் உடன் கலவைப்பொருளாகவும், எரிபொருளாகப் பயன்படும் வாயுவாகவும், நறுமணப் பொருட்களைத் தயாரிக்கும் போது தனித்தோ அல்லது புரொப்பேனுடன் சேர்ந்த கலவையாகவோ கரைப்பானாகவும், எத்திலீன் மற்றும் பியூட்டாடையீன் ஆகியவற்றைத் தயாரிக்க தொடக்க மூலப்பொருளாகவும், தொகுப்பு முறை இரப்பரில் ஒரு தலையாய பகுதிப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஐசோபியூட்டேன் முதன்மையாக பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெட்ரோலின் ஆக்டேன் எண்ணெய் அதிகப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது.

புரொப்பேன் மற்றும் இதர ஐதரோகார்பன்களுடன் கலக்கும் போது இது பொதுவாக, வணிகவியல்ரீதியாக திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு என குறிப்பிடப்படுகிறது. பாறை எண்ணெயின் பகுதிப்பொருளாக பயன்படுத்தப்பட்டு நீராவியாற் பகுப்பு செயல்முறையில் இதர அடிப்படையான பெட்ரோவேதிப்பொருட்களைத் தயாரிப்பதற்கான தொடக்கநிலை மூலப்பொருளாகவும் சிகரெட் பற்றவைப்பானில் எரிபொருளாகவும், நாற்றமகற்றிகள் போன்ற தெளிப்பு வகைக் கரைசல்களில் உந்துபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

பியூட்டேனின் மிகத்துாய்மையான வடிவங்களானவை, குறிப்பாக ஐசோபியூட்டேன்  ஓசோன் சிதைவுபடுத்திகளாக இருந்த ஆலோமீத்தேன்களுக்குப் பதிலியாக, வீட்டு உபயோக குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களில் குளிர்பதனூட்டிகளாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும், பியூட்டேன் ஒரு தீமூட்டி எரிபொருளாகவும், பியூட்டேன் பந்தம் போன்ற பொதுவான தீமூட்டிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள் 

ஆல்கேன்கள்
எரி வாயு
பியூட்டேன்
கி. பி. 1500 க்குப் பின்னர் நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்கள் அழிந்துள்ளன. அத்துடன் பறவையினங்களின் அழிவுவீதமும் அதிகரித்துச் செல்வதாகவே உள்ளது. இப்பொழுது உலகில் உயிர்வாழும் ஏறத்தாழப் பத்தாயிரம் இனப் பறவைகளில் 1200 இனங்கள் அழிவாபத்திலுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அழிவாபத்து மிகப் பெரும்பாலும் மனிதனாலேயே ஆகும். தீவுகளில் வாழும் குறிப்பாகப் பறக்கவியலாத பறவையினங்களே அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றன.

அழிந்த பறவைகளின் பட்டியல்
 டோடோ
 பெரிய ஓக்
 யானைப் பறவை

மேற்கோள்கள்

அழிந்த பறவைகள்
இராணி மங்கம்மாள் (இறப்பு:  1705) பெண்கள் முடி சூட்டி ஆட்சி செய்யாத நாயக்கர் மரபில் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை 1689 முதல் 1704 வரை ஆண்ட பெண்மணி ஆவார்.  மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரின் மனைவி ஆவார். கணவர் இறந்ததும் தன் மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் இளம் வயதினனாக இருந்த காரணத்தால் தான் உடன்கட்டை ஏறாமல் மகனுக்குத் துணையாகக் காப்பாட்சியாளராக இருந்து மதுரையை  ஆண்டவர். திறமையான ஆட்சியாளர். சமயப் பொறை மிக்கவர். எதிர்ப்புகளைத் தன் ஆற்றலாலும் அறிவு நுட்பத்தாலும் முறியடித்தவர். 18 ஆண்டு காலம் தென்னாட்டை தனியே ஆண்ட பெண்ணரசி. இவருடைய ஆட்சி காலத்தில் மதுரை நாயக்கர்களின் தலைநகரமாக திருச்சிராப்பள்ளி விளங்கியது.

வரலாறு 
இராணி மங்கம்மாள்,  மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கரிடம் (1659 -1682) தளபதியாக இருந்த தப்பகுள லிங்கம நாயக்கரின் மகளாவார். சொக்கநாத நாயக்கர் மங்கம்மாவைத் திருமணம் செய்து கொண்டார். ஆயினும் அவரை இராணியாகப் பட்டம் சூட்டவில்லை. தஞ்சாவூரை  ஆண்ட விஜயராகவ நாயக்கரின்  மகளைத் திருமணம் செய்ய சொக்கநாத நாயக்கர் நினைத்தார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1682 ஆம் ஆண்டில் சொக்கநாத நாயக்கர் இறந்தபோது அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் மூன்று மாத குழந்தை. எனவே, தன் மகனைக் காக்க வேண்டி உடன் கட்டை ஏறாத மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பினை காப்பாளராக ஏற்றார்.

அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் 
மங்கம்மாள் தனது மகன் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு சின்னமுத்தம்மாள் என்பவரைத் திருமணம் செய்வித்தார். அதன் பிறகு அவருக்கு முடி சூட்டினார். அன்னையின் உதவியோடும் அறிவுரைகளோடும் அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் திறமையாக ஆட்சி செய்தார் . தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்த பகுதிகள் சிலவற்றை போரிட்டு மீட்டார். ஏழாண்டு காலம் நல்வழியில் ஆட்சி செய்து வந்த அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர் பெரியம்மை நோயால் 1688ஆம் ஆண்டில் காலமானார். கணவர் இறந்த சிறிது நாளிலேயே ஆண்மகனைப் பெற்றெடுத்த சின்ன முத்தம்மாள் கணவரின் பிரிவு தாங்காமல் குளிக்க பயன்படுத்தும் பன்னீர் கலந்த நீரை அளவுக்கு அதிகமாக குடித்து ஜன்னி கண்டு உயிரிழந்தார். அம்மன்னரின் மகனான விஜயரங்க சொக்கநாதருக்குப் பெயரளவில் பட்டம் சூட்டப்பட்டது. அவர் சார்பில் அவருடைய பாட்டியும், சொக்கநாத நாயக்கரின் மனைவியுமான மங்கம்மாள் காப்பாட்சியராக  பதவி ஏற்றுக்கொண்டு, இராணி மங்கம்மாள் என்ற பெயரில் 1706 வரை ஆட்சி நடத்தினார்.

இராணி மங்கம்மாளின் ஆட்சி 
மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற காலத்தில் போர்கள் அதிகம் நடைபெறவில்லை. இவர் அண்டையில் உள்ள அரசுகளிடம் நட்புறவையே விரும்பினார். ஆயினும் தஞ்சை மராத்தியர்கள், முகலாயர்கள், திருவாங்கூர் அரசு, போன்றவர்களால் சவாலைச் சந்திக்க வேண்டி இருந்தது. மிகத்திறமையான இராச தந்திரியாகவும்  தேர்ந்த அரசியல் அறிவும் பெற்ற மங்கம்மாள் இப்பகைகளை மிகத்திறமையுடன் முறியடித்தார். ஆட்சி காலத்தில் நல்ல பல திட்டங்களைத் தீட்டி மதுரையைச் சிறப்பாக ஆண்டார்.

முகலாயர்களுடனான உறவு 
முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தக்காணம் வரை தனது பேரரசை விரிவு செய்யும்  நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திக்கொண்டிருந்தார். செஞ்சிக் கோட்டையில் பதுங்கி இருந்த  மராத்திய மன்னன் இராசாராமைக் கைது செய்ய, தம் தளபதி 'சல்பீகார் அலிகான்' என்பவரை அனுப்பினார். சல்பீகார் அலிகான் சுமார் ஏழாண்டு காலம்  செஞ்சிக்கொட்டையை முற்றுகையிட்டான். முற்றுகை நடந்து கொண்டிருக்கும் போதே  மற்ற தமிழக அரசுகளைப் பணிய வைத்துத் திறைப்பொருளைச் செலுத்த படைகளை அணுப்பினான். மைசூர் மன்னரும்  தஞ்சை மராத்தியரும் பணிந்து திறை செலுத்தினர்.
 
இராணி மங்கம்மாளும் முகலாயர் படை வலிமையையும் தன் படை வலிமையியும் நன்குணர்ந்து முகலாயருக்குப் பணிந்துபோக முடிவு செய்தார். விலையுயர்ந்த பொருள்களை தளபதி சல்பீகார் அலிகானுக்கு அன்பளிப்பாக அனுப்பி போரைத் தவிர்த்தார். பின் முகலாயர்களின் உதவியால், மராத்தியர்களிடம் இழந்த சில பகுதிகளை மீட்டார். உடையார்பாளையச் சிற்றரசர் கைப்பற்றியிருந்த  மதுரையின் பகுதிகளையும் மீட்டார்.

திருவிதாங்கூர்ப் போர் 
மதுரை நாயக்க அரசுக்கு உட்பட்ட சிற்றரசாக அப்போது திருவிதாங்கூர் அரசு இருந்தது. திருவிதாங்கூர் மன்னர் இரவி வர்மா, மதுரை நாயக்க அரசுக்கு செலுத்த வேண்டிய திறைப்பொருள்களைச் செலுத்தவில்லை. மேலும் கல்குளம் பகுதியில் இருந்த நாயக்கர் படையையும் தாக்கி அழித்தான். எனவே, தளவாய் நரசப்பையா என்பவர் தலைமையில் மங்கம்மாள் அனுப்பிய படை திருவிதாங்கூர் படையைத் தோற்கடித்தது.
திறைப்பொருளாக பொன், பீரங்கி முதலிய பொருள்களையும் பெற்றுத் திரும்பியது.

தஞ்சைப் போர் 
தஞ்சையை ஆண்ட மராத்தியருக்கும் மதுரை நாயக்கர்களுக்குமிடையில் நல்லுறவு நிலவவில்லை. தஞ்சை மராத்திய மன்னர் ஷாஜி, மதுரை நாயக்க மன்னர்களின் ஆட்சிப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றிக் கொண்டார்.  இராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையரை படைகளுடன் அனுப்பி அப்பகுதிகளை மீட்டார். அப்படை தஞ்சையை அச்சுறுத்தியது. எனவே தஞ்சை அமைச்சர் பாலாஜி பண்டிதர்  இராணி மங்கம்மாளின் படைகளுக்குப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினார்.

மைசூர்ப் போர் 
முகலாய அரசு தக்கானத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டு வர நினைத்த அதே வேளையில் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் தனது ஆட்சியை  விரிவாக்க எண்ணி  மதுரையின் ஆளுகைக்குக் கீழ் இருந்த சேலம் மற்றும் கோயமுத்தூரைக் கைப்பற்றினான். 1695ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி கோட்டையையும் முற்றுகையிட்டான். இராணி மங்கம்மாளின் படைகளால் அம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.

சிக்கதேவராயன் தஞ்சை மற்றும் திருச்சிக்கு நீர் ஆதாரமாக விளங்கும்  காவிரி நதியின் குறுக்கே தற்போது கண்ணம்பாடி அணை (Krishna Raja Sagar - KRS)   உள்ள பகுதியில் அணை கட்டி அதனைத் தடுக்க எண்ணினான். அப்போது மங்கம்மாள் 1700ஆம் ஆண்டில் தஞ்சையுடனான பகையை மறந்து அதனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தஞ்சை- மதுரைக் கூட்டுப்படை ஒன்றை உருவாக்கினார். படை கிளம்பும் வேளையில் மைசூர்ப் பகுதிகளில் கடும் மழை பெய்ததால் சிக்க தேவராயன் கட்டிய அணை உடைந்தது. சிக்கல் எதுவும் இல்லாமல் இப்பிரச்சினை தற்காலிகமாக முடிவடைந்தது.

ராமநாதபுரம் போர் 
இராணி மங்கம்மாளின்  முதலும் கடைசியுமான  மிகப்பெரிய தோல்வியாக இராமநாதபுரம்  போர் இருந்தது. மதுரைக்கு எதிராகவும் தஞ்சைக்கு ஆதரவாகவும் ராமநாதபுரம் மன்னர் ரகுநாத சேதுபதி இருந்ததால் 1702 ல்  ரகுநாத சேதுபதிக்கு  எதிராக இராணி மங்கம்மாள் தனது படைகளை அனுப்பினார்.  இந்த போரில் மதுரையின் தொடர் வெற்றிகளுக்குக் காரணமான தளவாய் நரசப்பைய்யா வீர  மரணம் அடைந்தார். இது போரின் தோல்விக்கு மிக  முக்கியக் காரணமாக அமைந்தது.

மங்கம்மாளின் சமயப் பொறை 
மதுரை நாயக்கர்களைப் போலவே மங்கம்மாளும் சமயப் பொறையைக் கடைப் பிடித்தார்." ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தைப் கைக்கொண்டு வாழ்வதே தருமம் " என்ற கொள்கையைக்  மங்கம்மாள் பின்பற்றினார். மதுரை மீனாட்சி அம்மனுக்கு பல்லக்கு மற்றும் பொன்னணிகள் பலவற்றை வழங்கினார். ஆனித்திங்களில் ஊஞ்சல் திருவிழா நடத்த ஏற்பாடு செய்தார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது, இராணி மங்கம்மாள் தமது செங்கோலை அம்மனின் முன்வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சித்திரை முழுமதி நாளில் இராணி மங்கம்மாளும் இளவரசரும் தமுக்கம் அரண்மனையில் தங்கி, மீனாட்சி திருமணத்தைக் கண்டு களித்தனர். ஆற்றில் இறங்கும் கள்ளழகரை அவர்கள் இருவரும் வழிபட்டனர்.

தான் ஒரு இந்துவாக இருந்த போதும் கிறிஸ்துவர் மற்றும் இசுலாமியர்களையும் மதித்தார். கிறித்துவ மத குருமார்களை சமயப் பேருரை செய்ய அனுமதி அளித்தார். சமயத் தொடர்பாக சிறை வைக்கப்பட்டிருந்த 'மெல்லோ' பாதிரியாரை விடுதலை செய்ததோடு, 'போசேத்' என்ற குருவைத் தம் அரசவையில் வரவேற்று விருந்தோம்பினார்.

இசுலாமியர்களுக்கும் மங்கம்மாள் மானியம் அளித்தார். 1701-ல்  இசுலாமியர்களின் நல்வாழ்விற்காகவும் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காகவும் திருச்சியிலுள்ள நிலங்களை மானியமாக வழங்கியது குறித்துக் கல்வெட்டு கூறுகிறது

இராணி மங்கம்மாளின் அறப்பணிகள் 
இராணி மங்கம்மாள் மக்கள் நலம் பேணும் பல அறச் செயல்களைச் செய்தார். மதுரையில் பெரியதொரு அன்னச்சத்திரம் அமைத்தார். அது 'மங்கம்மாள் சத்திரம்' என இன்றும் அழைக்கப்படுகிறது. புதிய சாலைகள் பலவற்றை அமைத்தார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை மங்கம்மாள் சாலை என அழைக்கப்படுகிறது. குதிரைகள், பசுக்கள், காளைகள் முதலியவை நீர் அருந்துவதற்காக சாலையோரங்களில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்க ஆணையிட்டார். பொது மக்களுக்காக குடிநீர் ஊருணிகள், கிணறுகள் ஆகியவற்றைத் தோண்டச்செய்தார். தொழில் வளர்ச்சி, வாணிகம், மக்கள் தொடர்பு ஆகியவற்றிற்கு வழிவகுத்தார். கொள்ளிடத்தில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துன்புற்ற போது அவர்களுக்கு உணவு, உடை, வீடு மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்கு ஆணையிட்டார். வெள்ளத்தால் அழிந்த கரையோரத்துச் சிற்றூர்களையும் சீரமைத்தார். தற்போது மகாத்மா காந்தி அருங்காட்சியகமாக விளங்கும் தமுக்கம் அரண்மனையே இராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாகும்.  இதிலுள்ள தமுக்கம் மைதானத்தில் தான் அக்காலத்தில் யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுகளும் அரச விழாக்களும் நடைபெற்றன.

இறுதிக்காலம் 
மிகத்திறமையாக ஆட்சி செய்த இராணி மங்கம்மாளால் தனது பேரனான விஜயரங்க சொக்கநாத நாயக்கருடன் நேரம் செலவழிக்க இயலாமல் போனது. எனவே, தவறான வழிகாட்டுதலின் பேரில் விஜய ரங்க சொக்கநாத நாயக்கர் இராணி மங்கம்மாளைத் தனது எதிரியாகக் கருதினார். எனவே தனது பெயரனாலேயே அவர்  சிறையிலிடப்பட்டார். , இதுவே அவரது வாழ்நாளின் இறுதியாயிற்று இராணி மங்கம்மாள் 1706- ல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.

மேலும் பார்க்க 
 இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 

ராணி மங்கம்மாள் தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்
 http://www.madurai.com/rani.html
 http://www.mabeats.com/2008/02/rani-mangammalthe-queen.html
 http://historicity-was-already-taken.tumblr.com/post/5949735602/fierce-historical-ladies-post-queen-regent-rani

ஆந்திரப் பிரதேச வரலாறு
அரசிகள்
1705 இறப்புகள்
இந்திய அரச குடும்பப் பெண்கள்
தெலுங்கு மக்கள்
1689 பிறப்புகள்
1706 இறப்புகள்
இந்திய அரசர்கள்
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர்.தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கர் என்பவராவர். சேவப்ப நாயக்கர், விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கராகவும் இருந்த திம்மப்ப நாயக்கரின் மகன். தஞ்சாவூர் நாயக்கர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை பேசினர்.

தஞ்சை நாயக்க அரசர்கள் 
 1532 - 1560 சேவப்ப நாயக்கர் 
 1560 - 1600 அச்சுதப்ப நாயக்கர்
 1600 - 1632 இரகுநாத நாயக்கர்
 1633 - 1673 விஜயராகவ நாயக்கர்

கோவிந்த தீட்சிதர் 
சோழ மண்டல வரலாற்றில் இராஜராஜன், இராஜேந்திரன், இராஜாதிராஜன் எனும் முப்பெரும் சோழ மன்னர்களுக்குக் கிருஷ்ணன் இர்மன் என்னும் மும்முடிச் சோழப் பிரம்மராயன் எப்படித் தளபதியோ, விக்கிரமசோழன், குலோத்துங்கன், இராஜராஜன் ஆகிய மூவேந்தர்களுக்கு ஒட்டக்கூத்தர் எப்படி அவைக்களப் புலவரோ, அதுபோன்று அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கர், விஜயராகவ நாயக்கர் எனும் மூன்று தஞ்சை மன்னர்களுக்கும் மதியமைச்சராக, அறிவுசார்ந்த ஆசிரியராக, பெரும்புலவராகத் திகழ்ந்தவர் கோவிந்த தீட்சிதர் ஆவார்.

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க 
 விஜயநகரப் பேரரசு
 தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி
 மதுரை நாயக்கர்கள்
 செஞ்சி நாயக்கர்கள்

வெளி இணைப்பு 
 Coins Of Tanjore Nayaks 

நாயக்க அரசர்கள்
தமிழ்நாட்டு அரச வம்சங்கள்
இந்திய அரச மரபுகள்
ஆசியாவின் முன்னாள் நாடுகள்
தெலுங்கு மக்கள்
தஞ்சாவூர் வரலாறு
தமிழ்நாட்டு வரலாறு
NFPA 704 என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் நாட்டு தீக்காப்பு அமைப்பின் (National Fire Protection Association) ஒரு சீர்தரம் ஆகும். தீநிகழ்வுகளில் இருந்து விரைந்து காக்க வரும் பணியாளர்கள் சட்டென (உடனே) கண்டு உணர்ந்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பொருட்களை பற்றிய ஒரு அடையாளம் ஆகும். பொருட்களால் விளையவல்ல தீமைகள் எத்தன்மையது என்று அறிவிக்கப் பயன்படும், நிறங்களாலும் எண்களாலும் உணர்த்தும் சாய்க்கட்ட வடிவில் உள்ளக் குறியீடு. இதனை தீ சாய்க்கட்டம் (Fire diamond) என்று பேச்சு வழக்கில் அமெரிக்காவில் கூறுவதுண்டு.

குறியீடு 

சட்டென விளங்கிக்கொள்ளுவதற்காக அமைந்த சாய்சதுரத்தில் உள்ள நான்கு பிரிவுகளும் வெவ்வேறு நிறக்குறியீடு கொண்டிருக்கும்.. நீல நிறம் உடல்நலத்திற்குத் தரவல்ல கேட்டைக் குறிக்கும், சிவப்பு நிறம் தீப்பற்றும் தன்மையைக் குறிக்கும், மஞ்சள் நிறம் வேதியியல் வினை நிகழவல்லதைக் குறிக்கும், வெள்ளை நிறம் சிறப்பான சில குறிப்பிட்ட கேடுகள் விளைய வல்ல சூழலைக்குறிக்கும். ஒவ்வொரு கேடும் எத்தனை வலிமை உடையதாகும் என்பதை விளையக்கூடிய கேட்டின் வீரியத்தை 0 முதல் 4 என்னும் எண்களால் குறிக்கபடும். எண் 4 என்றால் விளையும் கேடு மிகவும் வலிமையானது என்று பொருள். எண் 0 என்றால் வீரியம் குறைந்தது என்று பொருள்.

நீலம்/உடல்நலம் பற்றியது 

 4.  மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டால் இறக்க நேரிடும், அல்லது பெரும் கேடு உடல்நலத்திற்கு விளையக்கூடும். (எடுத்துக்காட்டுகள்: ஹைட்ரஜன் சயனைடு (hydrogen cyanide))
 3.  மிகக் குறுகிய காலம் இப்பொருளோடு தொடர்பு ஏற்பட்டாலும் தற்காலிகமாக உடல்நலக்கேடு விளையக்கூடும், வற்ருள் சில நிலைத்தும் இருக்கலாம். (எடுத்துக்காட்டு: குளோரின் வளிமம்)
 2.  Intsதற்காலிகமாக உடல்நலக்கேடு விளையலாம். அது கடுமையானதாகவோ, அல்லது நிலைத்ததாகவோ இருக்கலாம். தொடர்ந்து இப்பொருளோடு தொடர்பு கொள்ளுவது கேடு விளைவிக்கலாம்.
 1.  இப்பொருளோடு தொடர்பு கொண்டால் சிறிதளவே எரிச்சல் முதலிய இடையூறு நிகழும், ஆனால் அவை தற்காலிகமானது. (எடுத்துக்காட்டு: டர்ப்பன்ட்டைன்)
 0.  Expo பெரும்பாலும் ஏதும் கேடு விளைவிக்காத பொருள், ஆனால் தீப்பற்றக்க்கூடியதாக இருக்கலாம் (எடுத்துக்காட்டு: கடலை எண்ணெய்)

சிவப்பு/தீப்பற்றும் தன்மை (தீப்பற்றுமை) 

 4.  சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் முற்றுமாய் ஆவியாகி காற்றில் எளிதாகக் கலந்து எரியக்கூடிய பொருள். (எடுத்துக்காட்டு: புரோப்பேன் - இதன் தீப்பாற்றும் வெப்பநிலை 73°F க்கும் குறைவானது.
 3.  சாதாரண காற்றழுத்தத்திலும், வெப்பநிலையிலும் தீப்பற்றக்கூடிய நீர்மப்பொருளோ அல்லது திண்மப்பொருளோ இது (எடுத்துக்காட்டு: பெட்ரோல்(காசொலீன்) என்னும் எரியெண்ணெய்)
 2.  ஓரளவிற்கு சூடேற்ற வேண்டும், அப்பொழுதுதான் தீப்பற்ற வல்லது. (எடுத்துக்காட்டு: டீசல் எண்ணெய் - இதன் தீப்பற்றும் வெப்பநிலை 100°F முதல் 200°F.
 1.  முதலிலேயே சூடேற்றப்பட்டிருந்தால் தீப்பற்ற வாய்ப்புள்ள பொருள் (எடுத்துக்காட்டு: கனோலா எண்ணெய் -இதன் தீப்பற்றும் வெப்பநிலை 200°F ஐயும் மீறியது.
 0.  Willதீப்பற்றி எரியாத பொருள் (எடுத்துக்காட்டு: நீர்)

மஞ்சள்/வேதியையல் வினை கொள்ள வல்லவை (இயையுமை) 

 4.  கடல்மட்ட காற்றழுத்ததிலும், அறை வெப்பநிலையிலும் வேதியியல் வினையால் எளிதாக வெடிக்க வல்லது (எடுத்துக்காட்டு: நைட்ரோகிளிசரீன் (Nitroglycerin)
 3.  Capaஇதுவும் கடல்மட்ட காற்றழுத்ததிலும், அறை வெப்பநிலையிலும் வேதியியல் வினையால் வெடிக்கவல்லது ஆனால் இந்நிகழ்வைத்தொடக்க ஒரு தூண்டுகோல் தேவை. இல்லாவிடில், இத்தகைய நிகழ்வுக்கு இப்பொருட்கள் அடைபட்ட ஓரிடத்தில் சூடாக்கப்படவேண்டும், அல்லது திடீ்ரென தாக்கழுத்தம் தரப்படவேண்டும் (shockwaves), அப்பொழுது வெடிக்கவல்லது. இப்பொருட்கள் நீரோடு சேர்ந்து (வேதியியல் வினையால்) வெடிக்க வல்லது. (எடுத்துக்காட்டு: ஃவுளோரின் (ஃபுளோரின், Florine).)
 2.  Undeuஉயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும், நீருடன் சேர்ந்தோ அல்லது பிற வகைகளிலோ கடுமையான வெடிப்பு போன்ற விளைவு ஏற்படுத்த வல்ல பொருள். (எடுத்துக்காட்டு: கால்சியம் 
 1.  Normஇப்பொருள் பெரும்பாலும், அதிகம் மாறாமல், நிலையாக இருக்கக்கூடியது, ஆனால் உயர் வெப்பநிலையிலும், உயர் அழுத்த நிலையிலும் நிலைபிரியக்கூடியது. (எடுத்துக்காட்டு: பாஸ்பரஸ்(phosphorus))
 0.  Normதீயுடன் எதிர்ப்பட்டாலும் பொதுவாக நிலையாக இருக்கக்கூடியது, மேலும் நீரோடும் வினைகொள்ளாதது. (எடுத்துக்காட்டு: நீர்ம நிலையில் உள்ள நைட்ரஜன்)

வெள்ளை/சிறப்புக் குறிப்புகள் 

வெண்மையாக உள்ள கட்டத்தில் இருக்கும் குறிப்பானது ஒரு பொருளைப்பற்றிச் சிறப்பாக குறிப்பிட ஏதும் இருந்தால், அதற்கான குறியீட்டை அங்கு இடுவர். சில சிறப்புக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

 'W' - இக்குறியீடு, நீரோடு வழக்கத்திற்கு மாறான முறையிலோ, அல்லது தீங்குநேரும் வகையிலோ வேதியியல் வினைகொள்ளக் கூடியது (எ.கா: சீசியம் )
 'OX' - ஆக்சைடாக்கி
 'COR' - அரிக்கக்கூடியது; வலுமிக்க காடி(அமிலம், புளிமம்) அல்லது காரப் பொருள்(base) 
 'ACID' மற்றும் 'ALK' என்னும் எழுத்துக்கள் முறையே காடிக்கும், காரத்திற்கும் தனியாகவும் குறிப்பிடப்படும்.
 'BIO' -உயிரியல் தீநேர்வுப்பொருள் (எளிதில் பரவி மனிதர்களின் உயிருக்கு தீமை நிகழ்த்தக்கூடிய உயிரியல் பொருட்கள். இவை நுண்ணியிரிகளாகவோ, நச்சுயிரிகளாகவோ, பிற நச்சுப்பொருட்களாகவோ இருக்கலாம்) 
 அணுக்கதிர்வீச்சுக் கேடு உள்ளது என்று குறிக்கப் பயன்படும் மஞ்சள் முக்கோணத்துள் இருக்கும் கரியமூவிலைக் குறி .
 'CRYO' - மிகுகுளிரியப் பொருள்

குறிப்பு: 'W' மற்றும் 'OX' ஆகிய இரண்டு குறிகள் மட்டும்தான் NFPA 704 ன் சீர்தரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறையேற்பான குறிகள். பிறவெல்லாம் எளிதில் விளங்கிக்கொள்ளும் குறிகள் அவைகள் முறையேற்பு ஏதும் இல்லாமல் பயன்படுத்தப்படுவன.

வெளி இணைப்புகள் 
அமெரிக்காவின் நாட்டு தீக்காப்பு அமைப்பின் இணையத்தளம்
சீர்தரங்களில் 704ம் அவ்வெண்ணை ஒட்டிய பிற சீர்தரங்களின் பட்டியலும்.

தீத்தடுப்பு
பென்ட்டேன் என்னும் ஆல்க்கேன் வகை ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதை) மூலக்கூறில் 5 கரிம அணுக்கள் நேர்த்தொடராக அமைந்துள்ளன. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. ஆனால் 36.1 °C வெப்பநிலையிலேயே கொதிநிலையடவது. எளிதாக ஆவியாகக்கூடிய பொருள். பெரும்பாலும் எரிபொருளாகவும், கரைப்பானாகவும் பயன்படுகின்றது. 

ஆல்கேன்கள்
நீரகக்கரிமக் கரைப்பான்கள்
டோடோ (dodo) (Raphus cucullatus) அழிந்த பறவையினங்களில் ஒன்று. பழங்காலத்தில் வாழ்ந்த பறவை இனங்களில் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன ஓர் அபூர்வ பறவை. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீசியஸ் தீவில் தான் டோடோ  என்ற இந்த அழிந்துபோன பறவை வாழ்ந்து வந்தது. டோடோ என்ற சொல்லுக்கு போர்த்துகீசிய மொழியில் முட்டாள் அல்லது அற்பமான என்பது பொருள். இது மொரீசியஸ் தீவில் வாழ்ந்த பறக்க முடியாத பறவையாகும். ஏறத்தாழ ஒரு மீட்டர் உயரமான டோடோ நிலத்தில் கூடு கட்டி வாழ்ந்தது; பழங்களை உணவாகக் கொண்டது.டோடோ சுமார் 1 மீட்டர் (3 அடி 3 அங்குலம்) உயரமும், காடுகளில் 10.6–17.5 கிலோ (23–39 எல்பி) எடையும் இருந்ததாக சப்ஃபோசில் எச்சங்கள் காட்டுகின்றன.  வாழ்க்கையில் டோடோவின் தோற்றம் 17 ஆம் நூற்றாண்டின் வரைபடங்கள், ஓவியங்கள் மற்றும் எழுதப்பட்ட கணக்குகளால் மட்டுமே சாட்சியமளிக்கப்படுகிறது.  இவை கணிசமாக வேறுபடுவதால், சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே நேரடி மாதிரிகளிலிருந்து பெறப்பட்டவை என்று அறியப்படுவதால், வாழ்க்கையில் அதன் சரியான தோற்றம் தீர்க்கப்படாமல் உள்ளது, மேலும் அதன் நடத்தை பற்றி அதிகம் அறியப்படவில்லை.  டோடோ வரலாற்று ரீதியாக கொழுப்பு மற்றும் விகாரமானதாகக் கருதப்பட்டாலும், இப்போது அது அதன் சுற்றுச்சூழல் அமைப்புக்கு நன்கு பொருந்தியதாக கருதப்படுகிறது.  இது பழுப்பு-சாம்பல் நிறத் தழும்புகள், மஞ்சள் கால்கள், வால் இறகுகள், சாம்பல், நிர்வாண தலை மற்றும் கருப்பு, மஞ்சள் மற்றும் பச்சை நிறக் கொடியுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது.  இது பழங்களை உள்ளடக்கியதாகக் கருதப்படும் அதன் உணவை ஜீரணிக்க கிசார்ட் கற்களைப் பயன்படுத்தியது, மேலும் அதன் முக்கிய வாழ்விடம் மொரீஷியஸின் வறண்ட கடலோரப் பகுதிகளில் காடுகளாக இருந்ததாக நம்பப்படுகிறது.  ஒரு கணக்கு அதன் கிளட்ச் ஒரு முட்டையைக் கொண்டிருந்தது என்று கூறுகிறது.  ஏராளமான உணவு ஆதாரங்கள் தயாராக இருப்பதாலும், மொரீஷியஸில் வேட்டையாடுபவர்களின் ஒப்பீட்டளவில் இல்லாததாலும் டோடோ பறக்கவில்லை என்று கருதப்படுகிறது.

டோடோவைப் பற்றி முதன்முதலில் 1598 ஆம் ஆண்டில் டச்சு மாலுமிகளால் பதிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டுகளில், பறவை மாலுமிகள் மற்றும் ஆக்கிரமிப்பு இனங்களால் வேட்டையாடப்பட்டது, அதே நேரத்தில் அதன் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.  1662 ஆம் ஆண்டில் ஒரு டோடோவை கடைசியாக பரவலாக ஏற்றுக்கொண்டது. அதன் அழிவு உடனடியாக கவனிக்கப்படவில்லை, மேலும் சிலர் இதை ஒரு புராண உயிரினமாக கருதினர்.  19 ஆம் நூற்றாண்டில், 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவிற்கு கொண்டு வரப்பட்ட நான்கு மாதிரிகளின் சிறிய அளவிலான எச்சங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.  இவற்றில் உலர்ந்த தலை, டோடோவின் ஒரே மென்மையான திசு இன்றும் உள்ளது.  அப்போதிருந்து, மொரீஷியஸில் அதிக அளவு சப்ஃபோசில் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, பெரும்பாலும் மாரே ஆக்ஸ் பாடல்கள் சதுப்புநிலத்திலிருந்து.  டோடோ கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நூற்றாண்டுக்குள்ளேயே அழிந்துவிட்டது, முழு உயிரினங்களும் காணாமல் போவதில் மனிதர்களின் ஈடுபாட்டின் முன்னர் அடையாளம் காணப்படாத பிரச்சினைக்கு கவனம் செலுத்தியது.  ஆலிஸின் அட்வென்ச்சர்ஸ் இன் வொண்டர்லேண்டின் கதையில் டோடோ அதன் பாத்திரத்திலிருந்து பரவலான அங்கீகாரத்தைப் பெற்றது, பின்னர் இது பிரபலமான கலாச்சாரத்தில் ஒரு அங்கமாக மாறியுள்ளது, பெரும்பாலும் அழிவு மற்றும் வழக்கற்றுப்போகும் அடையாளமாக.

உடலமைப்பு 
இப்பறவை வான்கோழியைவிட சற்றுப் பெரியது. சதைப்பற்று மிக்கது. வளைந்த பெரிய அலகு உடையது. இறகுகளும், வாலும் வளர்ச்சியுறாமல் காணப்பட்டன. கால்கள் குட்டையாகத் தடித்து மஞ்சள் நிறத்தில் இருந்தன. எனவே, இவை பறக்கவும், ஓடவும் முடியாதவைகளாக இருந்தன. ஒரு தடவைக்கு ஒரு முட்டையே இடும். தரையில் புற்களால் கூடு அமைத்து முட்டையை அடைகாக்கும்.

வாழ்வு 
இந்தப் பறவையைப் பற்றி 1507 - ஆம் ஆண்டுவரை எவரும் அறிந்திருக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சுற்றி கப்பலில் சென்ற மாலுமிகள் தண்ணீரூக்காக மொரீசியஸ் தீவில் ஒதுங்கியபோது இப்பறவையைப் பார்த்தார்கள். பிடித்து உண்டார்கள். 1598 - ல் இங்கு குடியேறிய டச்சுக்காரர்கள், மனிதர்கள் விரும்பாத அழகற்ற பறவை என இதனை அறிவித்தார்கள்.

அழிவு 
குடியேற்றக்காரர்கள் வளர்ப்புப் பறவைகளையும், விலங்குகளையும் இறக்குமதி செய்த பிறகு இது படிப்படியாக அழியத் துவங்கியது.கொன்றுண்ணிகளற்ற தீவில் வாழ்ந்த பறவை என்பதால் டோடோ மனிதர்களைக் கண்டு அஞ்சாமை அதன் அழிவுக்கு காரணமானது. மொரீசியஸ் தீவுகளுக்கு போர்த்துக்கேயர் 1505 இல் சென்றனர். பின்னர் இடச்சுக்காரர்கள் அங்கு குடியேறினர். மனிதர்களாலும் அவர்களது வளர்ப்பு விலங்குகளாலும் ஏறத்தாழ நூறாண்டுக் காலத்தில் படிப்படியாக டோடோ பறவையினம் முற்றாக அழிக்கப்பட்டது. டோடோ பறவை மெல்ல மெல்ல சூழல் பாதுகாப்புச் சின்னமாக மாறி வருகிறது. 1681 - க்குப் பிறகு இப்பறவையில் ஒன்றுகூட உயிருடன் இல்லை. அழிந்துபோன பறவையாக மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொள்ளாத மனிதர்களை மொரீசியஸ் தீவில் டோடோ என்று குறிப்பிடுகிறார்கள்.

இவற்றையும் பார்க்க 
 ஹோலோசீன் பேரழிவு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 
 திண்ணை மின்னிதழில் டோடோ பற்றிய கட்டுரை
  அமுதம் தகவல் களஞ்சியம்

அழிந்த பறவைகள்
பறக்காத பறவைகள்
எக்ஃசேன் (ஹெக்சேன்) என்னும் கரிம வேதியியல் பொருள் ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஒரு ஐதரோகார்பன் (கரிமநீரதை) ஆகும். இம்மூலக்கூறில் 6 கரிம அணுக்களும், 14 ஐதரசன் அணுக்களும் உள்ளன. கரிம அணுக்கள் நேர்தொடராக அமைதுள்ளன. கரிம அணுக்களுக்கிடையே ஒற்றைப் பிணைப்புதான் உள்ளது. இப்பொருள் அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ளது. இந்நீர்மம் 69 °C (342 K) ல் கொதிநிலைக்கு வருகின்றது. நிலத்தடியில் இருந்து எடுக்கும் கச்சா எரியெண்ணெயை தூய்மைப்படுத்துகையில், எக்ஃசேன் விளைபொருளாக கிடக்கின்றது.

நச்சுத்தன்மை 
எக்ஃசேன் அதிக நச்சுத்தன்மை கொண்டதல்ல, எனினும், இதனை முகர்ந்தால் மென்மையான மயக்கம் உண்டாக்கும். அதிக அளவில் முகர்ந்தால், தலைசுற்றல் போன்ற உணர்வு, தலைவலி, மயக்கம் போன்ற தூக்கம் ஏற்படும். தொடர்ந்து முகர நேரிட்டால், உடல் தசைகள், தலையில் உள்ள தசைகள் ஆகியவை அழியத்தொடங்கும். கை கால்களை துல்லியமாய் இயக்க முடியாமையும், கண்பார்வையில் குறைபாடுகளும் ஏற்படும் என அறியப்படுகின்றது. காலணிகள், தானுந்துகள், வீட்டு மேசை நாற்காலி போன்ற இருக்கைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் இடங்களில் பணியாளர்களுக்கு எக்ஃசேன் முகரும் வாய்ப்பு உண்டு, அப்படி முகர்வதால் கேடுகள் நிகழலாம்.  

ஆல்கேன்கள்
நீரகக்கரிமக் கரைப்பான்கள்
லேவி (Levite) என்பது இஸ்ரவேலரின் 12 கோத்திரங்களில் ஒன்றாகும். லேவியர் கோத்திரம் யாக்கோபின் மனைவியான லேயாள் மூலம் பிறந்த மூன்றாவது ஆண் குழந்தையான லேவியின் வழிவரும் கோத்திரமாகும். இப்பெயரின் பொருள் சேர்ந்திருத்தல் என்பதாகும். லேவியர்கள் அர்ச்சகர்களாக தெரிந்து கொள்ளப்பட்ட கோத்திரமாகும். இயேசுவா இஸ்ரவேலருக்கு கானான் நாட்டை பகிரும் போது லேவி கோத்திரத்த்ருக்கு நிலம் எதனையுன் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தார் சமய கடமைகளை தவிர்த்த விடத்து அரசியல் கடமைகள எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆகவே ஏனைய கோத்திரத்தார் லேவியருக்கு காணிக்கை கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது.

உசாத்துணை 

இஸ்ரவேல் கோத்திரங்கள்
பத்துக் கட்டளைகள் அல்லது கற்பனைகள் என்பது சமய, மனிதநேய விதிகளின் பட்டியலாகும். இது விவிலியத்தின் படி சீனாய் மலை மீது கடவுளால் கற்பலகைமேல் எழுதி மோசே மூலமாக இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. கற்பனைகள் என்ற சொல் விவிலியத்தில் விடுதலைப் பயணம் 34:28 இல் காணப்படுகிறது. யேம்சு மன்னன் பதிப்பு "பத்துக் கற்பனைகளாகிய உடன்படிக்கை"  என்ற பதத்தைப் பாவிக்கையில், விவிலிய இலகு வாசிப்பு பதிப்பு உடன்படிக்கை என்ற பதத்தைப் பாவிக்கிறது.

முன்னாயத்தம் 
விவிலியத்தின் படி, பத்துக் கட்டளைகள் என்பது கடவுள் சீனாய் மலையில் இருந்து இசுரயேலருக்கு பேசி உரைத்த வார்த்தைகளாகும். இது கடவுளால் நேரடியாக கற்பலகைகள் இரண்டின் மீது எழுதப்பட்டு மோசே மூலம் இசுரயேலருக்கு கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் இசுரயேலர் எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு மூன்றாம் மாதம் அவர்கள் சீனாய் மலையடிவாரத்துக்கு வந்தபோது நடந்தது. கட்டளைகள் கொடுக்கப்படும் முன்னர் மக்கள், இரண்டு நாட்கள் பரிசுத்தமாக இருக்கப் பணிக்கப்பட்டனர். அவர்கள் பரிசுத்தமாக்கப்படும்படி பின்வருவனவற்றை செய்ய கட்டளையிடப்பட்டது:
 உடைகளை கசக்கி தூய்மைப்படுத்தல் (19:10)
 உடலுறவு கொள்ளாதிருத்தல் (19:15)
மேலும் மூன்றாம் நாள் வரை மலையச்சுற்றி ஒரு எல்லை குறிக்கப்பட்டு அதனுள் யாரும் வராமலிருக்க உத்தரவிடப்பட்டது.

விவிலிய வசனங்கள் 
பின்வரும் விவிலிய பாடமானது பத்துக் கட்டளை எனப் பொதுவாக ஏற்கப்பட்டதாகும். இது விடுதலைப் பயணம் 20:1-17 மற்றும் இணைச் சட்டம் 5:6–21 யிலும் காணப்படுகிறது. கிறிஸ்தவ உட்பிரிவினர் இக்கட்டளைகளை 10 குழுக்களாக தொகுக்கும் முறை வெவ்வேறானது. பின்வரும் வசனங்கள் குழுக்களாக பிரிக்காமல் தரப்பட்டுள்ளது. இவை திருவிவிலியத்திலிருந்து (பொது மொழிபெயர்ப்பு) பெறப்பட்டவையாகும்.

வகைப்படுத்தல்கள் 

மேற்காணப்படும் விடுதலைப் பயணம் 20 இன் விவிலியப் பகுதியானது, பத்துக்கு மேற்பட்ட தனி வசனங்களை கொண்டுள்ளது. ஆனால் விவிலியத்தில் பத்துக் கட்டளைகள் என்ற பதம் யாத்திராகாமம் 34:28, உபாகமம் 4:13, உபாகமம் 10:4 இல் பாவிக்கப்பட்டுள்ளது. எனவே இவ் 16 வசனங்களும் 10 கட்டளைகளாக குழுப்படுத்தப்படுகின்றது.

இக் குழுப்படுத்தல் சமய மற்றும் சமய குழுக்களிடையே வேறுபடுகிறது. கத்தோலிக்கர் மற்றும் லூதரன் திருச்சபைகள் முதல் ஆறு வசனங்களை அன்னிய தெய்வங்களை வணங்குவதற்கு எதிரான கட்டளையாக கொள்கின்றனர். லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய சீர்திருத்தத் திருச்சபைகள் இவ்வாறு வசனங்களை இரண்டு கட்டளைகளாக பிரித்து நோக்குகின்றன. (முதலாவது "ஏக கடவுள்", இரண்டாவது "சிலைவழிபாட்டுக்கு எதிரானது") கத்தோலிக்க மற்றும் லூதரன் திருச்சபைகள் கடைசி வசனங்களில் கூறப்பட்டுள்ள விரும்புதலுக்கு எதிரான கட்டளைகளை "மனைவி" மற்றும் உடைமை என இரண்டாக பிரிக்கின்றனர். இவ்வேற்றுமைகள் இங்கே பட்டியலிடப்படுகின்றன:

கத்தோலிக்க திருச்சபையில் 10 கட்டளைகள்
முதலாவது எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளை அன்பு செய்வது. (இறையன்பு கட்டளைகள்: 3)
 நாமே உன் கடவுளாகிய ஆண்டவர். எம்மைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கு இருத்தல் ஆகாது. (1)
 உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே. (2)
 ஆண்டவரின் நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இரு. (3)
இரண்டாவது தன்னை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்வது. (பிறரன்பு கட்டளைகள்: 7)
 உன் தந்தையையும் தாயையும் மதித்து நட. (4)
 கொலை செய்யாதே. (5)
 விபசாரம் செய்யாதே. (6)
 களவு செய்யாதே. (7)
 பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. (8)
 பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே. (9)
 பிறருக்கு உரியது எதையும் கவர்ந்திட விரும்பாதே. (10)

ஒரே சர்வேஸ்வரனை விசுவசிப்பாயாக

சீர்த்திருத்த சபைகளில் 10 கட்டளைகள் 
சீர்த்திருத்த திருச்சபைகள் பல காணப்படுகின்ற காரணத்தினால் அவை எல்லாவற்றினதும் கருத்துக்களை ஒன்றாக தொகுப்பது கடினமான விடயமாகும். பின்வருவன லூதரன் திருச்சபைகள் தவிர்ந்த ஏனைய திருச்சபைகளின் பொதுவான நோக்காகும்.

முகவுரை: 20:1-2  இது கட்டளைகளை ஏன் இசுரயேலர் கைக்கொள்ள வேண்டும் என்பதை சுட்டி நிற்கிறது.

 வசனம் 20:3  இங்கு அன்னிய கடவுள்களை வணங்குதலை தடுக்கும் கட்டளையாகும். இங்கு வணங்குதல் மட்டுமல்லாது அன்னிய தெய்வங்களை மரியாதை செய்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
 வசனங்கள் 20:4-6  இவ்வசனங்கள் இரண்டும் சேர்த்து இரண்டாவது கட்டளையாக கொள்ளப்படுகிறது. இங்கு கடவுளை சிலைகளூடாக வழிபடுவது தடைசெய்யப்படுகிறது. இங்கு சிலைகளோ அல்லது வேறு உயிரினங்களையோ கடவுளாக கருதுவது பாவச்செயலாகச் சுட்டப்படுகிறது.
 வசனம் 20:7  இதில் கடவுளின் பெயர், அவரது செயல்கள், வசனங்கள் போன்றவற்றிற்கு புனிதத் தன்மை கொடுக்கப்பட்டு அவற்றை வீணாக உச்சரிக்காமல் இருப்பதை உறுதி செய்கிறது. இது சத்தியம் செய்வதற்கு எதிரான கட்டளையாக சிலரால் கொள்ளப்படுகிறது.
 வசனங்கள் 20:8-11   இம்மூன்று வசனங்களும் சேர்த்து கடவுள் வழிபாட்டுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற நான்காவது கட்டளையாகக் கொள்ளப்படுகின்றது. இது வாரத்தின் இறுதிநாளை கடவுளுக்காக ஒதுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
 வசனங்கள் 20:12  இக்கட்டளை ஒன்றே நேரடியாக செய்யவேண்டியதை சுட்டுகிறது. இது பெற்றோரை மதித்து மரியாதை அளிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குகிறது.
 வசனங்கள் 20:13   இது மனித உயிரின் மாண்பினை விளக்குகிறது. இக்கட்டளையால் மனித உயிரை மாய்ப்பது, அல்லது மனித உயிருக்கு ஊறு இழைப்பது போன்றவை தடைசெய்யப்படுகின்றன.
 வசனங்கள் 20:14  இதன் மூலமாக மற்றைவர்ள் மீதான காம எண்ணங்களும் அவை தொடர்பான நடவடிகைகளும் தடைசெய்யப்படுகின்றன.
 வசனங்கள் 20:15  திருடலுக்கு எதிரான கட்டளையாகும். இதன் மூலம் சட்டப்படி நம்முடையவைகள் தவிர்த்த ஏனையவற்றை சட்டவிரோதமான முறையில் சேர்ப்பது தடைசெய்யப்படுகிறது.
 வசனங்கள் 20:16  இது மக்களிடையே உண்மைபேசப்படுவதன் முக்கியத்துவதை கூறுகின்றது. முக்கியமாக ஏதாவது ஒரு சம்பவத்துக்கு சாட்சியாக இருக்கும் போது உண்மையை பேசவேண்டியதன் முக்கியத்துவதை சுட்டுகிறது.
 வசனங்கள் 20:17  தனதல்லாத வேறு நபர் ஒருவரின் உடைமைகளையோ அல்லது அவரது துணைவரையோ( மனைவி, கணவன்) பெற்றுக்கொள்ளும் படி விரும்புவதை இக்கட்டளை தடைசெய்கிறது.

திரைப்படம் 
இந்தப் பத்து கட்டளைகளை பற்றிய பின்னணியைக் கொண்டு ஹாலிவூட்டில் திரைப்படங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள் 

 பத்துக்கட்டளைகள்: விடுதலைப் பயணம் 20 அதிகாரம் (எழுத்து வடிவு, எம்பி3), Deut. 5'' version (text, mp3) in The Hebrew Bible in English by Jewish Publication Society, 1917 ed.
 Jewish Encyclopedia: Decalogue
 Catechism of the Catholic Church
 Decalogue in the 1911 பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
 The Ten Commandments from the 1908 Catholic Encyclopedia

கிறித்தவ இறையியல்
கிறித்தவ வழிபாடு
விவிலியம்


நிகழ்வுகள் 
கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் அடுத்தநாள் தற்கொலை செய்து கொண்டான்.
781 – பூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.
1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.
1492 – எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.
1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக முடிசூடினார்.
1712 – பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.
1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் மீட்கப்பட்டன.
1741 – புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.
1790 – முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.
1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.
1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1913 – பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.
1932 – செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.
1938 – கிரேக்கம், துருக்கி, உருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என பல்காரியா உடன்பாட்டுக்கு வந்தது.
1938 – பெர்சப்பொலிஸ் நகரில் அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியசின் தங்கம், மற்றும் வெள்ளித் தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சிமோலென்சுக் சண்டை முடிவுக்கு வந்தது. செருமனி 300,000 சோவியத் செஞ்சேனைப் படையினரைப் போர்கைதிகளாகப் பிடித்தனர்.
1948 – இலண்டன், 1948 ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீ தடை ஓட்டப்போட்டியில் இலங்கையைச் சேர்ந்த டங்கன் உவைட் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.
1964 – சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
1971 – அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் தரையுலவியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.
1972 – பிரித்தானிய இராணுவம் வட அயர்லாந்தின் ஆட்கள் செல்ல முடியாத புறநகர்ப் பகுதிகளைக் கைப்பற்றியது. சூயெசு நெருக்கடிக்குப் பின்னர் பிரித்தானியாவின் மிகப்பெரும் இராணுவ நடவடிக்கை இதுவாகும்.
1973 – அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் விமான நிலையத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.
1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.
1988 – மலேசியா, பட்டர்வொர்த் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.
1991 – ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கையெழுத்திட்டன.
1992 – சியார்சியா ஐநாவில் இணைந்தது.
1992 – நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.
1999 – நிலாவில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற நாசாவின் டிஸ்கவரி விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.
2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.
2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.
2012 – மைக்கல் ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக அளவு பதக்கங்களைப் பெற்று 1964 சாதனையை முறியடித்தார்.
2014 – தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்தனர்.
2022 – காபுல் நகரில் அல் காயிதா இயக்கத்தின் தலைவர் ஐமன் அழ்-ழவாகிரி அமெரிக்க ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

பிறப்புகள் 

1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
1880 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (இ. 1936)
1902 – கே. சங்கர் பிள்ளை, இந்திய கார்ட்டூன் வரைவாளர் (இ. 1989)
1907 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
1912 – மில்ட்டன் பிரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
1916 – மோகன் லால் சுகாதியா, இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
1919 – வே. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
1919 – ஹேமு அதிகாரி, இந்தியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2003)
1923 – இஸ்டெபனி குவோலக், அமெரிக்க வேதியியலாளர், கெவ்லார் இழையைக் கண்டுபிடித்தவர் (இ. 2014)
1936 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. 2016)
1947 – மும்தாஜ், இந்தித் திரைப்பட நடிகை
1951 – சரத் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1954 – மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் (பி. 2013)
1961 – ராம்ஜி, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
1965 – ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர்
1989 – விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை

இறப்புகள் 
1556 – லொயோலா இஞ்ஞாசி, இயேசு சபையை உருவாக்கிய இசுப்பானியர் (பி. 1491)
1805 – தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1756)
1886 – பிரான்சு லிசித்து, அங்கேரிய இசையமைப்பாளர் (பி. 1811)
1940 – உதம் சிங், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1899)
1944 – அந்துவான் து செயிந் தெகுபெறி, பிரெஞ்சுக் கவிஞர், விமானி (பி. 1900)
1966 – இசபெல் மார்ட்டின் இலெவிசு, அமெரிக்க வானியலாளர் (பி. 1881)
1980 – முகம்மது ராபி, இந்தியப் பாடகர் (பி. 1924)
1989 – பிரேமகீர்த்தி டி அல்விஸ், இலங்கை சிங்கள ஊடகவியலாளர், பாடலாசிரியர் (பி. 1947)
1996 – அரங்க. சீனிவாசன், தமிழகக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1920)
1997 – தங்கபாண்டியன், தமிழக அரசியல்வாதி
2000 – என்றிக் சி. வான் தெ அல்ஸ்ட், இடச்சு வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1918)
2014 – சாரல்நாடன், ஈழத்து எழுத்தாளர்

சிறப்பு நாள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 

 பிபிசி: இன்றைய நாளில்
 நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
 சூலை 31 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com

சூலை
ஆண்டின் நாட்கள்
பிரெட்ரிக் எங்கெல்சு (ஃபிரெட்ரிக் எங்கெல்ஸ்; Friedrich Engels; நவம்பர் 28, 1820 – ஆகஸ்டு 5, 1895) 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜெர்மன் அரசியல் மெய்யியலாளராவார். 
இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை மார்க்சுடன் சேர்ந்து எழுதினார்.

ஆரம்ப வாழ்க்கை 
இவர் பிரசியாவிலுள்ள, பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்பு கொண்டிருந்தார். இக்காலகட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் ஹேக்கல் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார். மான்செஸ்டரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார்.

மார்க்சுடன் நட்பு 
செருமனிக்கு செல்லும் வழியில் பாரீசில், கார்ல் மார்க்சை சந்தித்து நட்பை வளர்த்துக் கொண்டார். 1849-இல் செருமனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து கார்ல் மார்க்சுக்கு உதவத் தொடங்கினார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார். தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தினார் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார்.

மதவாதத்தைப் பற்றி 
மதவாதம் மக்களின் வாழ்வை மூச்சடக்கச் செய்து‍ கடுமையானதாக்கிக் கொண்டிருக்கிறது. மதவாத தத்துவமானது‍ சாதாரண மக்களின் அரசியல் நலன்களுக்கு‍ எதிரானது. முதலாளி/ நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் நலனைக் காப்பதற்காகவே உள்ளது.

முதலாளித்துவத்தைப் பற்றி 
முதலாளித்துவமானது‍ தொழிலாளிகளுக்கு‍ வேலை பாதுகாப்பின்மையை உருவாக்கி உள்ளது. தன் வாழ்‌க்கை என்னவாகுமோ என்ற பயத்தை உண்டாக்கியுள்ளது.

முதலாளித்துவ பொருளாதாரத்தைப் பற்றி 
முதலாளித்து‍வ பொருளாதாரத்தைப் பற்றி 1839 ஆம் ஆண்டு‍ அவர் இவ்வாறு‍ கூறுகிறார். முதலாளித்துவ சமூகத்தில் மக்களின் சிந்தனைகளும், செயல்பாடுகளும் பொருளாதார நலன் குறித்தே சுற்றி வருகின்றன.

வரலாற்று‍ நூல்கள் 
கார்ல் மார்க்சின் இறப்புக்கு பின் மூலதனம் நூலின் பல தொகுதிகளை தொகுத்தார். கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். மற்றவர் கார்ல் மார்க்சு ஆவார்.
மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.

மறைவு 
1895-ஆம் ஆண்டு ஆகஸ்டு‍ 5-ஆம் நாள் இறந்தார்.

மேற்கோள்கள்

மார்க்சிய மெய்யியலாளர்கள்
மானிடவியல்
பொருளியலாளர்கள்
1820 பிறப்புகள்
1895 இறப்புகள்
சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 12 சூன் 1918 – 10 மார்ச் 2001) இலங்கைத் தமிழ் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், கல்வியாளரும், தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948இல் வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.

வாழ்க்கைக் குறிப்பு
எலியேசர் தனது தொடக்கக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியிலும் பெற்று, பின்னர் லண்டன் கேம்பிறிட்சுப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றார். அங்கேயே 1949இல் பவுல் டிராக்கின் வழிகாட்டலில் டாக்டர் (DSc) பட்டமும் பெற்றார்.

பேராசிரியராகப் பணி
எலியேசர் பின்னர் கொழும்பு திரும்பி பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் பேராசிரியராகவும் அறிவியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் கடமையாற்றினார். இவர் ஜெனீவா, வியன்னா, மும்பாய் நகரங்களில் ஜக்கிய நாடுகளின் சார்பாக அமைதிக்காக அணு சக்தி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவும் அழைக்கப்பட்டார்.

1959இல் மலேயா பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியரானார். கோலாலம்பூரில் 1966 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சுழியம் என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை படைத்தார். 1968இல் அவுஸ்திரேலியா மெல்பேர்ணிற்குக் குடியேறி லா ட்ரோப் (La Trobe) பல்கலைக்கழகத்தில் பயன்முகக் (பிரயோக) கணிதத்தில் பேராசிரியரானார். அங்கே அவர் இயற்பியல் பீடத்தின் (துறையின்) தலைவராகவும் பல்கலைக்கழகத்தின் கூடுதல் துணை-வேந்தராகவும் இருந்தார். 1983இல் அங்கிருந்து இளைப்பாறினார்.

தமிழ் ஆர்வலர்

அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் சமுகத்திற்கு இவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. 1978ஆம் ஆண்டில் விக்ரோறியா மாநில 'இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்' தொடக்கத் தலைவராக பதவியேற்று இங்கு குடியேறும் தமிழர்களுக்கு ஆணிவேராக உழைத்தது மட்டுமல்லாமல் 1983 ம் ஆண்டில் இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலைக்கு உட்படுத்தப்பட்டபோது முழுமூச்சாக அம்மக்களின் விடிவுக்காக உழைத்தவரும் ஆவார். 1984 ம் ஆண்டின் அவுஸ்திரேலிய தமிழ் சங்கங்களின் சம்மேளனம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகவும் பதவியேற்றார்.

அவுஸ்திரேலியாவின் உயர் விருது

இவர் அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களுக்காகவும் கணிதத்துறைக்கும் ஆற்றிய சேவையைப் பாராட்டி அவுஸ்திரேலிய அரசின் அதி உயர் Order of Australia விருது 1996 இல் வழங்கப்பட்டது.

தமிழீழத்தின் உயர் விருது

1997ஆம் ஆண்டு தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன், மாமனிதர் விருதினை பேராசிரியருக்கு வழங்கினார். முதல் முறையாக இவ் விருது தமிழீழத்துக்கு அப்பால் வாழும் ஒரு தமிழருக்கு வழங்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எலியேசரின் தேற்றம்
நேர்மின்னி (புரோத்தன்) ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி (இலத்திரன்) ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் (radially) செல்லும் போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் (Lorentz-Dirac) சமன்பாட்டின் படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏற்படுத்தவில்லை. மாறாக, அது நேர்மின்னியில் இருந்து எதிர்க்கப்பட்டு நேரத்துடன் 'எல்லை அடைவாக அதிகரிக்கும்' (asymptotically) ஆர்முடுகலுடன் செல்கிறது என எலியேசர் நிறுவினார். இது எலியேசரின் தேற்றம் எனப்படுகிறது.

மேற்கோள்கள்

எலியேசரின் ஆய்வுக் கட்டுரைகளில் சில
 Eliezer, C.J. , The Interaction of Electrons and an Electromagnetic Field, Reviews of Modern Physics, 19 (3): 147-184 1947
 Eliezer, C.J., On the Classical Theory of Particles, Proceedings of the Royal Soceity of London Series A - Mathematical and physical Sciences, 194 (1039): 543-555 1948
  Prince, G.E., Eliezer, C.J., On the Lie Symmetries of the Classical Kepler- Problem, Journal of Physics A - Mathematical and General 14 (3): 587-596 1981
 Prince, G.E., Eliezer, C.J., On Symmetries of the Time-Dependent N-Dimensional Oscillator, Journal of Physics A - Mathematical and General 13 (3): 815-823 1980
  Eliezer, C.J., Note on Time-dependent harmonic oscillator , SIAM Journal of Applied Matethematics  30 (3): 463-468 1976
 Eliezer, C.J., Wave Equation of the Electron, Nature,  167 (4237): 79-79 1951

வெளி இணைப்புகள்
tamilnation.org
ஹார்ட்லிக் கல்லூரியில் எலி்யேசர்
 Professor Christie Jeyaratnam Eliezer by Sachi Sri Kantha
 An extension of Eliezer's theorem
 Variant forms of Eliezer's Theorem

1918 பிறப்புகள்
2001 இறப்புகள்
மாமனிதர் விருது பெற்றவர்கள்
ஈழத்து எழுத்தாளர்கள்
ஆஸ்திரேலியத் தமிழர்
இலங்கைத் தமிழ் கணிதவியலாளர்கள்
இலங்கைத் தமிழ் இயற்பியலாளர்கள்
யாழ்ப்பாணத்து நபர்கள்
இலங்கைத் தமிழ் அறிவியலாளர்கள்
இலங்கையின் கல்விமான்கள்
இலங்கையின் வட மாகாண நபர்கள்
ஹாட்லிக் கல்லூரி பழைய மாணவர்கள்
தினத்தந்தி (Dina Thanthi) தமிழ்நாட்டில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணித் தமிழ் நாளிதழ் ஆகும். இது 1942 ஆம் ஆண்டு நவம்பர் 1 சி.பா. ஆதித்தனாரால் மதுரையில் தொடங்கப்பட்டது. இந்தியாவில் முழுவதும் 16 பதிப்புகளும், சர்வதேச அளவில் துபாய், கொழும்பு ஆகிய இரு பதிப்புகளும் கொண்டு உள்ளது. .

சிறப்புகள் 
 தமிழகத்தில் நிறைய வாசகர்களைக் கொண்ட நாளிதழ் தினத்தந்தியாகும்.
 எளிய தமிழ்ச் சொற்களை பயன்படுத்துதல், ஒவ்வொரு பத்திக்கும் தலைப்பு இடுதல்.
 சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல்,திருப்பூர் புதுச்சேரி, பெங்களூர், மும்பை , துபாய், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து தினத்தந்தி பதிப்பிக்கப்படுகிறது.

கல்விப் பணிகள் 
ஆண்டின் இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதன்கிழமையும் தினத்தந்தி 'பத்து, பன்னிரண்டாம் வகுப்பு கேள்வி வினா விடை' புத்தகத்தை வெளியிடுகிறது. இதில் அனைத்து பாடங்களிலிருந்தும் விடைகளுடன் மாதிரி கேள்வித்தாள் தரப்படுகின்றது. மேலும் ஆண்டுக்கு ஒரு முறை 'வெற்றி நிச்சயம்' என்ற நிகழ்ச்சி தினத்தந்தியால் நடத்தப்படுகின்றது. இதில் மாணவர்கள் வருங்காலத்தில் என்ன துறையை தேர்ந்தெடுக்கலாம் என்பதைப் பற்றி ஒவ்வொரு துறையிலிருந்தும் வல்லுனர்கள் வந்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்குகின்றார்கள்.

பதிப்பு வாரியாக பத்திரிக்கை விற்பனை விவரம்

கல்விச்சீரமைப்புக் காலப் பணிகள் 
பள்ளிப்பகல் உணவுத் திட்டம், சீருடைத்திட்டம், பள்ளிச்சீரமைப்புத் திட்டம் முதலான பல கல்வித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் அவை குறித்த செய்திகளுக்கு முன்னுரிமையும் முழு அளவு இடமும் தாராளமாகத் தொடர்ந்து தந்த நாளிதழ்களில் முதலிடம் பெற்ற நாளிதழாக தினத்தந்தியைத் தமது நூலில் குறிப்பிட்டுள்ளார் கல்வித்துறை இயக்குநராகப் பணியாற்றிய பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு.

தினத்தந்தியின் இலவச இணைப்புகள் 

 மேலும், 'தமிழ் மாத பலன்கள்' என்று ஜோதிடப் புத்தகம் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் திங்களன்று வெளியிடப்படுகின்றது.

தினத்தந்தியின் பிற பகுதிகள் 

 கன்னித் தீவு - தொடர் கதை
 சாணக்கியன் சொல்
 ஆண்டியார் பாடுகிறார்
 தினபலன்
 மக்கள் மேடை
 தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
 தினம் ஒரு தகவல்
 தெரிந்து கொள்ளுங்கள்
 வெளிநாட்டு விநோதம்
மாணவர் ஸ்பெஷல்

விருதுகள் 
ஏழை, எளிய மக்கள் கல்வி கற்பதற்கு சிறப்பாக பணி புரிந்ததற்காக தினத்தந்தி நிர்வாக இயக்குநர் சிவந்தி ஆதித்தனாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு கடந்த 2005-ம் ஆண்டு வழங்கி கவரவித்தது.
ஏழை மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் பத்தாம் வகுப்பு பிளஸ்-2 வகுப்புகளில் முதல் 3 இடங்களை படிக்கும் மாணவர்களுக்கு கல்வி மானியத்தொகை தினத்தந்தி வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சி.பா ஆதித்தனார் பிறந்த நாள் விழாவில் தமிழக அறிஞர்களுக்கு பரிசு தொகையும் பொற்கிழியும் வழங்கி கவுரவித்து வருகிறது.

அரசியல் தாக்கம் 
தி.மு.க சார்பில் 1967 ஆம் ஆண்டுத் தேர்தலில் தினத்தந்தி நிறுவனர் சி. பா. ஆதித்தனார் போட்டியிட்டதில் இருந்து 1976 இல் தி.மு.க அரசு நீக்கப்படும் வரை தி.மு.க சார்பு நாளிதழாகவும் பின்னர் ஓரளவு நடுநிலை நாளிதழாகவும் மாறியது.

தினத்தந்தி குழும இதழ்கள் 
 மாலை மலர்
 ராணி
 ராணி முத்து
 DT Next (ஆங்கில நாளிதழ்)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 
 தினத்தந்தி இணையத்தளம்

தமிழக நாளிதழ்கள்
முகமது ரஃபி (Mohammed Rafi, டிசம்பர் 24, 1924 - ஜூலை 31, 1980) இந்தியாவின் பாலிவுட்டில் மிகவும் புகழ் பெற்ற இந்தி/உருது பின்னணிப் பாடகர் ஆவார். இவர் இன்றளவும் இந்தியத் துணைக்கண்டத்திலும் இந்தியர்கள் வாழும் ஐக்கிய இராச்சியம், கென்யா போன்ற நாடுகளிலும் புகழ்பெற்றவர். இவர் இந்தி மொழிப்பாடகராக அறியப்பட்ட போதிலும் வேறு இந்திய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளார். கொங்கணி, போச்புரி, அசாமிய மொழி, ஒடியா மொழி, பஞ்சாபி, மராத்தி, சிந்தி, கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, மாகாகி, மைதிலி மொழி மற்றும் உருது மொழிகளில் பாடியுள்ளார். ஆங்கிலம், பார்சி, அரபி, சிங்களம், டச்சு மற்றும் கிரியோல் மொழி ஆகியவற்றிலும் பாடியுள்ளார்.
இவர் நடிகர்களின் குரலை ஒத்த குரலில் பாடுவதாலும், திரைப்படத்தில் நடிகர்களின் உதட்டசைவை ஒத்தபடி பாடுவதால் பிரபலமடைந்தார்.  1967 ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருதினை இந்திய மத்திய அரசு இவருக்கு வழங்கியது.

இளமைக்காலம்
முகமது ரபி அவரது பெற்றோருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தை ஆவார். இவர்களது குடும்பம் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டர் நகருக்கு அருகேயுள்ள மஜிதா எனும் இடமாகும். சிறுவயதிலேயே தெருவில் பாடிச் செல்லும் பகீர்களைப் போல பாடும் திறமையுடையவர். உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வஹீத் கான், பண்டிட் ஜீவன்லால் போன்றவர்களிடம் இசையினைக் கற்றார்.

வாழ்க்கைக் குறிப்பு
முகமது ரபி இருமுறை திருமணம் செய்து கொண்டார்.  உறவினராக முதல் மனைவியுடனான திருமணம் சொந்தக் கிராமத்தில் நடைபெற்றது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது ரபியின் மனைவி பஸிரா ரபியின் பெற்றோர் கொல்லப்பட்டதால். திருமணத்திற்குப் பின்னர் அவரது மனைவி இந்தியாவில் வசிக்க விரும்பாமல் லாகூர் நகருக்கு இடம்பெயர்ந்தால், இவரது இரண்டாவது திருமணம் பில்குஸ் ரபியுடன் நடைபெற்றது. இறகுப்பந்தாட்டம், கேரம் மற்றும் பட்டம் பறக்கவிடுதல் இவரது முக்கிய பொழுதுபோக்கு ஆகும்.

திரைப்படப் பாடகர்
1941 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியின் லாகூர் நிலையத்தில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றார். திரைப்படப் பாடகர் வாய்ப்பினைப் பெறுவதற்காக 1944 ஆம் ஆண்டு முகமது ரபி மும்பைக்கு இடம் பெயர்ந்தார். நெரிசல்மிக்க பெகந்தி பஜார் (Bhendi Bazar) பகுதியில் தங்கியிருந்தார். கவிஞர் தன்வீர் நக்வி இவரைத் திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாய் ஸ்யாம் சுந்தர் (Shyam Sunder) கோன் கி கோரி (Gaon Ki Gori) திரைப்படத்தில் பாடுவதற்கு வாய்ப்பளித்தார். 1970 களில் இவரது தொண்டையில் நோய்தொற்று ஏற்பட்டதால் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடினார்.

மரணம்
1980 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் நாள் இரவு 10:25 ற்கு அவரது 55 வயதில் மாரடைப்பினால் உயிரிழந்தார். லக்‌ஷ்மிகாந்த் பியாரிலால் (Laxmikant-Pyarelal) இசையில் மரணமடைவதற்கு சற்று முன்னர் ஆஸ் பாஸ் (Aas Paas) திரைப்படத்திற்காகப் பாடியதே இவரது கடைசித் திரைப்படப் பாடலாகும். இவரது மரண ஊர்வலத்தில் 10,000 அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இவரது மறைவிற்காக இந்திய அரசு இரண்டு நாட்கள் துக்கம் கடைபிடித்தது.

வெளி இணைப்புகள்
பாடிய பாடல்களின் பட்டியல்

மேற்கோள்கள்

இந்தியத் திரைப்படப் பாடகர்கள்
1824 பிறப்புகள்
1980 இறப்புகள்
1924 பிறப்புகள்
பத்மசிறீ விருது பெற்ற கலைத் துறையினர்
ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967 அல்லது எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967 என்பது 1967-ல் நடிகர் ம. கோ. இராமச்சந்திரனை நடிகர் எம். ஆர். இராதா துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கைக் குறிக்கும். இவ்வழக்கின் இறுதியில் நடிகர் இராதாவிற்கு மூன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். வீட்டில் துப்பாக்கிச் சூடு

1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலை 5 மணி அளவில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் நந்தம்பாக்கம் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நிகழ்வின் பின்புலம்

ஜூலை 1949ல் 72 வயதான பெரியார் 26 வயதேயான மணியம்மையை திருமணம் செய்து கொண்டார். இந்தச் செயலினால் வருத்தம் கொண்ட அண்ணாதுரை, ஈ.வி.கே. சம்பத் ஆகியோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினர். “தாத்தா கட்ட இருந்த தாலி!” என்ற தலைப்பில் அண்ணாதுரை 1940-ல் விடுதலையில் எழுதினார். பெரியாருக்கு எதிரான உண்மையான திராவிடர்கள் என்று அணி திரண்டனர். அண்ணாதுரை ஆதரவாளர்களுக்கும் பெரியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நிலவிய சமயம் அது. திராவிடக் கழகத்தின் திரையுலக முகமாக விளங்கிய ம.கோ.இரா., “பணக்காரக் குடும்பம்” என்ற படத்தில் நடித்தார். அதில் கதாநாயகனின் தந்தை தனக்கு ஒரு துணை தேடிக் கொள்ள அதை எம்.ஜி.ஆர். சாடிவிட்டுத் தன் தங்கை மணிமாலாவுடன் வீட்டை விட்டு வெளியேறுவார். இந்தப் படத்தின் மையநோக்கே பெரியார்தான் என்று பத்திரிக்கைகள் எழுதின.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது ம.கோ.இரா. தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார். பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான ராதா, காமராசரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று ம.கோ.இரா. சார்ந்திருந்த தி.மு.க. அரசு அண்ணா தலைமையில் அமைந்திருந்தது. மருத்துவமனையில் இருந்தபடியே போட்டியிட்ட ம.கோ.இராவும் பெரும் வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். அவரது செல்வாக்கு சரிந்து வந்த நிலையில் இந்நிகழ்வின்மூலம் கிடைத்த மக்கள் ஆதரவும் இவ்வெற்றியில் பங்காற்றியிருக்கக் கூடும்.

வழக்கு மற்றும் தண்டனை விவரம்
முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர். ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு 1968-ஆம் ஆண்டு ஏப்பிரல் 24-ஆம் நாளன்று தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.

அரசு தரப்பு வாதம்
அரசு தரப்பிலிருந்து ராதாவுக்கும் எம்.ஜி.ஆருக்கும் தொழில்முறைப் போட்டி இருந்ததையும் அரசியல் காழ்ப்புணர்வு இருந்ததையும் சுட்டினார்கள். எடுத்துக்காட்டாக, ராதாவின் நண்பரான காமராஜரை எம்.ஜி.ஆர் தாக்குவார் என்றொரு வதந்தி பரவியதையடுத்து எம்.ஜி.ஆரைக் கடுமையாக தாக்கியும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் ராதா தனது நாத்திகம் இதழில் எழுதினார். மேலும் தயாரிப்பாளர் வாசுவின் சாட்சியின்படி அன்றைய தினம் ராதா ஒரு திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை நடிக்க வைக்கும் பொருட்டு அவரைச் சந்திக்கப் பலமுறை கேட்டிருந்ததாகவும், எம்.ஜி.ஆர் தேர்தல் வாக்கு சேகரிப்பிற்கு சென்று திரும்பியதால் காலம் தாழ்த்தினார் என்றும், அதன் காரணமாக ராதா மிகுந்த எரிச்சலும் கோபமும் கொண்ட மனநிலையும் கொண்டிருந்தார் என்றும் நிறுவினர். 

மேலும் அந்நாட்களில் அவருக்குப் பெரிய பணமுடை இருந்ததாகவும் நிறுவப்பட்டது. தவிர, ராதா தன் கைப்பட எழுதி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் காவல்துறை காவலரிடம் தந்ததாகவும் சொல்லப்பட்ட ஒரு அறிக்கையில் கொள்கைக்காகவும் கட்சி நலனிற்காகவும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாலும் தகும் என்று குறிப்பிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. தவிர எம்.ஜி.ஆர். தோட்டத்து வீட்டில் பணிபுரிந்த வேலையாட்கள் சாட்சியத்திலும் எம்.ஆர்.ராதா "சுட்டாச்சு, சுட்டாச்சு" என்று கூறியபடி இருந்தார் என்று கூறப்பட்டது. இறுதியாக ராதாவின் துப்பாக்கியும் தோட்டாக்களும் எப்படி நிகழ்வு நடந்த இடத்திற்கு வந்தன என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.

எம்.ஆர். இராதா தரப்பு வாதம்
அரசு தரப்பு சாட்சிகள் அமர்வு நீதிமன்றத்திலும் முந்தைய வழக்கிலும் சில முரண்பாடான தகவல்களைத் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர் வானமாமலை அவை தயாரிக்கப்பட்ட சாட்சியங்கள் என்று வாதிட்டார். மேலும், எம்.ஜி.ஆருடன் தீவிர அரசியல் கருத்து வேறுபாடு ஏற்படும் அளவிற்கு எம்.ஜி.ஆருக்கு தி.மு.கவில் செல்வாக்கோ கொள்கைப் பிடிப்போ இல்லை என்று நிறுவும் முயற்சியில் வானமாமலையின் கேள்விகள் இருந்தன. இது அவரது செல்வாக்கைக் குறைக்கும் வகையிலும் அவரை இக்கட்டில் ஆழ்த்தும் வகையிலுமான முயற்சியாயிருந்திருக்கலாம். ராதாவின் துப்பாக்கி மட்டுமல்லாமல் துப்பாக்கிக்கான அனுமதிச் சான்றிதழும் எப்படி அங்கு வந்திருக்கும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் நிகழ்வு நடந்த சில மணி நேரத்திற்குள் ராதா வீட்டு வேலைக்காரர் குடிசையில் நெருப்பு பற்றிக் கொண்டதையும் அவர் சுட்டிக் காட்டினார். இதற்கு நீதிபதி துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வேறு யாராவது எடுத்து வந்திருந்தாலும் ராதாவின் சட்டைப் பைக்குள் சில தோட்டாக்களை அவர் அறியாதவண்ணம் அவர்களால் வைத்திருக்க முடியாது என்று கருத்துத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆரின் சட்டையில் ராதாவின் இரத்தம் படிந்திருந்ததாகவும் அதை காவல்துறையினர் வரும்முன்னர் துவைத்தது ஏன் என்ற ஒரு முக்கிய கேள்வியையும் அவர் முன்வைத்தார். இது தொடர்பில் எம்.ஜி.ஆரிடம் குறுக்கு விசாரணை செய்யும் வேளையில் அவருக்கு இரத்த வகைகளைப் பற்றி முன்னரே தெரியுமா என்று கேட்டு தெரியாது என்று கூறிய எம்.ஜி.ஆரிடம், அவர் நடித்திருந்த நாடோடி திரைப்படத்தின் திரைக்கதையில் இரத்த வகைகளைக் கொண்டு திருப்பம் கொண்டுவந்திருந்ததைச் சுட்டிக் காட்டி மடக்கிய விதம் அவரது திறனைக் காட்டியது. 

மேலும் வழக்கின் முதன்மை சாட்சியான வாசுவையும் அழைத்துக் கொண்டு ராதாவின் துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு நேராக காவல் நிலையத்திற்குச் செல்லாமல் அரசு வழக்கறிஞர் வீட்டிற்குச் சென்றது எதற்காக என்ற வலுவான கேள்வியையும் எழுப்பினார். நீதிபதி தனது தீர்ப்பில் இதற்கு பதிலளிக்கும் வகையில் அது வாசுவிற்குத் தன்மீது பழிவந்துவிடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இருந்திருக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின்
இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் எம்.ஜி.ஆர் விசுவாசிகள் பயந்தனர். அதன் காரணமாக எம்.ஜி.ஆர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

எம்.ஜி.ஆரின் நிலை 

ம.கோ.இராவின் தொண்டையில் பாய்ந்த குண்டை நீக்க வேண்டாமென மருத்துவர்கள் கூறினர். பின்பு சிறுக சிறுக உடல் நலம் பாதித்தது. சில ஆண்டுகள் மட்டுமே நடிக்கவும் முடிந்தது. குரலில் மாற்றம் இருந்த போதும் அவரது படங்களுக்கு வரவேற்பு இருந்தது. தொண்டையில் குண்டுடனே வாழ்ந்து வந்தார். பின்பு உடல்நலம் குன்றி 1987-ல் இறந்து விட்டார்.

மேற்கோள்கள்

உசாத்துணைகள் 
 

 எம்.ஆர். ராதாயணம், முகில், கிழக்கு பதிப்பகம் - எம்.ஆர். ராதாவின் வாழ்க்கை வரலாறு

வெளி இணைப்புகள்
 எம்.சி.ஆரை சுட்டதை இராதா விளையாட்டாகக் குறிப்பிடும் மேடைப் பேச்சு
 எப்படி? இப்படி!- 3: இரண்டு துப்பாக்கிகள்... மூன்று தோட்டாக்கள்! தி இந்து தமிழ்

தமிழக அரசியல்
1967 நிகழ்வுகள்
எம். ஜி. ஆர்
தமிழ்நாட்டில் வழக்குகள்
குற்றப் புலனாய்வு
தமிழ்நாட்டில் குற்றங்கள்
பறக்காத பறவைகள் பரிணாம வளர்ச்சியின் மூலம் பறக்கும் திறனை இழந்த பறவைகள் ஆகும். நன்கு அறியப்பட்ட தீக்கோழிகள், ஈமியூ,, காசோவரிகள், ரியாக்கள், கிவிக்கள், பென்குயின்கள் உட்பட 60 க்கும் மேற்பட்ட பறக்காத பறவை இனங்கள் உள்ளன. மிகச்சிறிய பறக்க முடியாத பறவை அணுகமுடியாத தீவு இரயில் என்பதாகும், இதன் நீளம் 12.5 செ.மீ., எடை 34.7 கிராம். மிகப்பெரிய (கனமான மற்றும் உயரமான) பறக்காத பறவை, இது பொதுவாக வாழும் மிகப்பெரிய பறவை, தீக்கோழி (2.7 மீ, 156 கிலோ).

நியூசிலாந்திலேயே அதிக எண்ணிக்கையான பறக்காத பறவைகள் காணப்படுகின்றன. இதற்கான காரணம் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் மனிதன் அங்கு குடியேறாதவரை மூன்று வகையான வௌவால்களைத் தவிர வேறெந்த நிலத்தில் வாழும் பாலூட்டிகளும் காணப்படாமையாகும். பறக்காத பறவைகளின் பிரதான எதிரிகளாக பெரிய பறவைகளே காணப்பட்டன. ஆனால் மனிதக் குடியேற்றத்தின் பின் பெருமளவு பறக்காத பறவையினங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பெரிய ஓக், டோடோ போன்றவை அவற்றுள் சில.

பறக்காத பறவைகளைப் பிடித்து வளர்ப்பது இலகுவானது. ஏனெனில் அவற்றுக்கு கூண்டுகள் தேவையில்லை. தீக்கோழிகள் இறகு, தோல், இறைச்சி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பறக்காத பறவை தீக்கோழி ஆகும். அதுவே உயிர்வாழும் பறவைகளுள்ளும் பெரியது.

இவற்றையும் பார்க்கவும் 
 அழிந்த பறவைகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்
 TerraNature pages on New Zealand flightless birds
 Kiwi in Te Ara – the Encyclopedia of New Zealand
யானைப் பறவை (Elephant birds) என்பது அழிந்துபோன பறவையினங்களில் ஒன்றாகும். மடகாஸ்காரில் காணப்பட்ட இவை பதினாறாம் நூற்றாண்டுடன் அழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது. யானைப் பறவையே உலகின் மிகப் பெரிய பறவையாக இருந்தது. அது மூன்று மீட்டரை விட உயரமானதாகவும் அரைத் தொன்னை (ஐந்நூறு கிலோகிராம்) விட நிறையுடையதாகவும் இருந்ததாக நம்பப்படுகிறது. யானைப் பறவையின் முட்டைகளின் எச்சங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில ஒரு மீற்றரை விட அதிக சுற்றளவுடையனவாக இருந்தன. யானைப் பறவைகளின் அழிவுக்கும் மனிதன் அவற்றை வேட்டையாடியமையே காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதனை நிராகரிக்கும் வாதங்களும் உள்ளன.

மேற்கோள்கள் 

அழிந்த பறவைகள்
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அற்றுவிட்ட இனங்கள்
சி. பா. ஆதித்தனார் (27 செப்டம்பர் 1905 – 24 மே 1981) தமிழ் நாட்டில் இதழியல் முன்னோடியான இவர், இன்றைய முன்னணி நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழைத் தொடங்கியவர். அரசியலிலும் ஆர்வம் கொண்டிருந்த இவர் தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். சட்டத்துறையில் கல்விகற்ற இவர், தமிழ்ப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட தனது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு வசதியாகப் பத்திரிகைத் துறையிலேயே தனது கவனத்தைச் செலுத்தினார். தனது கொள்கைகளைச் செயற்படுத்தும் ஆர்வத்தில் நாம் தமிழர் என்னும் கட்சி ஒன்றையும் தொடங்கினார்.எனினும், காந்தியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டம் கூர்மையடையத் தொடங்கியபோது தனது கட்சியின் செயற்பாட்டை இடைநிறுத்தினார்.

இளமைக் காலம் 
இவர்  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயாமொழியில் சிவந்தி ஆதித்தர். கனகம் அம்மையார் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவரது தந்தையார் ஒரு வழக்கறிஞர். தனது மகனையும் வழக்கறிஞராக ஆக்க விரும்பிய சிவந்தி ஆதித்தர், அவரை இங்கிலாந்துக்கு அனுப்பினார். அங்கு படிக்கும்போதே இதழியல் தொடர்பான பகுதி நேர வேலைகளைச் செய்துள்ளார். இலண்டனில் இருந்தபடியே சுதேசமித்திரன் போன்ற தமிழ் நாட்டுப் பத்திரிகைகளுக்கும், வட இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற இடங்களில் வெளிவந்த சில பத்திரிகைகளுக்கும் செய்திகளையும், செய்திக் கட்டுரைகளையும் அனுப்பியுள்ளார்.

1933 ஆம் ஆண்டில் இவரது திருமணம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இவரது மனைவி பெயர் கோவிந்தம்மாள். பின்னர் சென்னை திரும்பிய அவர், பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளால் கவரப்பட்டார். அக்காலத்தில் பெரியாரின் குடியரசுப் பத்திரிகையில் அரசியல் கட்டுரைகளும் எழுதியுள்ளார். எனினும் தனது பிற்கால நடவடிக்கைகளுக்குப் பணம் திரட்டும் நோக்கில் சிங்கப்பூர் சென்ற அவர் அங்கே வழக்கறிஞராகப் பணிபுரிந்து நல்ல வருமானம் பெற்றார். 1942 ஆம் ஆண்டில் மீண்டும் தமிழ் நாடு திரும்பினார்.

பத்திரிகைப் பணி 
இவர் தொடங்கிய முதல் பத்திரிகை தமிழன் என்னும் வார இதழ் ஆகும். 1942 ஆம் ஆண்டில் இதை அவர் தொடங்கினார். அதே ஆண்டிலேயே நவம்பர் மாதத்தில், தினத்தந்தி என்னும் தமிழ் நாளிதழையும் அவர் தொடங்கினார். இது மதுரையில் இருந்து வெளிவந்தது. தனது இதழியல் முயற்சிகளைத் தொடர்ந்து விரிவாக்கி வந்த அவர், மாலை மலர் என்னும் மாலைப் பத்திரிகையையும், ராணி என்னும் வார இதழையும் தொடங்கினார். 1947 ஆம் ஆண்டில் தினத்தாள் என்னும் பத்திரிகையை ஆரம்பித்து அதனைச் சேலத்தில் இருந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டில், திருச்சி, சென்னை ஆகிய இடங்களிலிருந்து முறையே தினத்தூது, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகள் வெளியிடப்பட்டன.

தமிழ் வளர்ச்சி, தமிழ் உணர்வு ஆகியவற்றை முன்னிலைப்படுத்தித் தனது பத்திரிகைகளில் செய்திகளையும், பல்வேறு அம்சங்களையும் வெளியிட்டு வந்த ஆதித்தனார், அக்காலத்தில் நிலவிய உயர்தட்டு மக்கள் வாசிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்த மொழி நடையைத் தவிர்த்து, சாதாரண மக்களை முன்னிலைப்படுத்தி எளிய தமிழ் நடையைக் கையாண்டார். இதனால் பரந்த அளவில் தமிழ் நாட்டில் வாசிப்புப் பழக்கம் பரவ வழிவகுத்தார். அடிப்படையான எழுத்தறிவு பெற்றிருந்தவர்கள் மத்தியில் கூட, செய்திகளை வாசிக்கும் போக்கு வளர இவரது இதழியல் முயற்சிகள் வழி வகுத்தன.

மாதம் ஒரு நாவல் என்னும் திட்டத்தின் கீழ் ராணி முத்து என்னும் வெளியீட்டை ஒவ்வொரு மாதமும் வெளியிட்டுத் தமிழ்ப் பத்திரிகை உலகில் புதிய போக்கு ஒன்றிற்கு ஆதித்தனார் வித்திட்டார்.

சமூகவியல் நோக்கிலும், இவரது பணிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. 1947 ஆம் ஆண்டில் நாடு விடுதலை பெற்றபோது மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைத்த உரிமைகளைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான சமகால அரசியல் அறிவை வளர்த்துக்கொள்வதில் இவரது இதழியல் முயற்சிகள் பெரும் பங்காற்றின.

அரசியலில் ஆதித்தனார் 
இவர் சிங்கப்பூரில் இருந்து வந்ததுமே ”நாம் தமிழர்” இயக்கத்தைத் தொடங்கினார். ஆதித்தனார் பல போராட்டங்களிலும் பங்குபெற்றுள்ளார். சில சமயங்களில் இதற்காகச் சிறை சென்றும் உள்ளார். 1947 முதல் 1953 ஆம் ஆண்டுவரை தமிழக மேலவை உறுப்பினராகவும், பின்னர் 1957 முதல் 1962 வரை தமிழ் நாடு சட்டப்பேரவையில் உறுப்பினராகவும் இவர் பணியாற்றினார். 1964 இல் அவர் மீண்டும் மேலவை உறுப்பினர் ஆனார். 1967 ஆம் ஆண்டு இவர் சட்டப் பேரவையின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 1969ஆம் ஆண்டு இவர் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார்.  இவருடைய அரசியல் சார்பு காலத்துக்குக் காலம் மாறியபடியே இருந்து வந்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தை ஆதரித்ததில் இருந்து, இந்திய தேசிய காங்கிரஸ், சுயமரியாதை இயக்கம், தனித் தமிழ்நாடு கோரிக்கை எனப் பல அரசியல் நிலைகளையும் அவர் எடுத்துள்ளார்.

அமைச்சராக 
மு. கருணாநிதி 1969 பெப்ரவரி இல் ஆட்சியைப் பிடித்தவுடன் ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆனார். இதில் ஸ்ரீவைகுண்டம் இருந்து அவர் அமைச்சரவைக்கு மறு தேர்வு செய்யப்பட்டார். 1971 தேர்தல்களில் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைவராக தொடர்ந்து பங்காற்றினார்.

பிற்கால அரசியல் வாழ்க்கை 
திமுகவிலிருந்து, 1972 இல் எம். ஜி. இராமச்சந்திரன் பிரிந்து  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)வை உருவாக்கினார். பிறகு ஆதித்தனார் அதிமுகவை ஆதரித்தார். 1977 தேர்தலில் அவர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சாதான்குளத்திலிருந்து அதிமுகவை சுயாதீனமாக ஆதரித்தார். 1980 தேர்தலில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தோல்வியடைந்தார் .

சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் செயல்திறன்

மறைவும் மரபும்
இவர் தனது 76 ஆம் வயதில் 1981 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி காலமானார். 2005 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா 1928 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அவரது வீடு நினைவுச்சின்னமாக மாற்றப்படும் என்று அறிவித்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பி.ராமச்சந்திரன் ஆதித்யன் (தேவி வீக்லியின் நிறுவனர்) மற்றும் பி.சிவந்தி ஆதித்யன். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளில், எஸ்.பி. ஆதித்தனார்  மூத்த தமிழ் அறிஞர் விருது ரூ. 300,000 மற்றும் எஸ்.பி. ஆதித்தனார் இலக்கிய விருது ரூ. 200,000 தமிழ் அறிஞர்களுக்கும், இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மக்களுக்கும் ஆதித்தனாரின் மகனும், தினத்தந்தி குழுவின் முன்னாள் இயக்குநருமான சிவந்தி ஆதித்தனரால் வழங்கப்பட்டது. சென்னையில் சாலையை இணைக்கும் எழும்பூர் செல்லும் அண்ணா சாலை , அவரது நினைவாக "ஆதித்தனார் சாலை" பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 
 சி.பா. ஆதித்தனார் (1905 - 1981) 

1905 பிறப்புகள்
1981 இறப்புகள்
தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள்
தமிழ்ப் பதிப்பாளர்கள்
தமிழக முன்னாள் அமைச்சர்கள்
தமிழகப் பத்திரிகையாளர்கள்
தமிழகத் தொழிலதிபர்கள்
திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்
2 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
4 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
5 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்
தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர்கள்
நச்சுத்தன்மை என்பது ஓருயிருக்கு ஏதேனும் ஒரு வகையில் உடலியக்கத்திற்குக் கேடுதரவல்ல பொருளின் கேடுதரும் தன்மையைக் குறிப்பதாகும். பாம்பு கடித்தால் கடிவாயின் வழியே செலுத்தும் நச்சுப்பொருள் குருதியில் (இரத்தத்தில்) கலந்து ஏற்படும் விளைவுகள் நச்சுத்தன்மையை நன்கு உணர்த்தும். இதே போல தேள் கடித்தாலும் உடலுள் நச்சூட்டு நிகழ்கின்றது. நச்சுத்தன்மையில் அதிக கேடு, குறைவான கேடு என்று வீரியம் மாறுபடலாம். மேலும், எந்த ஒரு நச்சுப்பொருளும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மீறி இருந்தால்தான் கேடு தருகின்றது. எனவே நச்சாகும் அளவும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக நச்சுப் பொருள்களில் இரண்டு வகைகள் உண்டு:
 வேதியியல் பொருட்கள் 
 உயிரியல் பொருட்கள் (நுண்ணுயிரிகள், நச்சுயிரிகள் (வைரஸ்) போன்றவை).

இவை அன்றி மூன்றாவதாக கதிரியக்கம் முதலிய இயற்பியல் வகையிலும் கேடுகள் விளையலாம். நச்சுத்தன்மை பற்றிய கற்கைநெறி நச்சியல் எனப்படும்.

நச்சியல்
கந்தையா கமலேசுவரன் (Kandiah Kamalesvaran, பிறப்பு: நவம்பர் 13, 1934) உலகப் புகழ்பெற்ற ஆத்திரேலிய இசைஞர். கமால் (Kamahl) என்று மேற்கத்திய இசை உலகில் போற்றப்படுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு
இவரது இயற்பெயர் கந்தையா கமலேஸ்வரன். மலேசியாவில் கோலாலம்பூரில் பிறந்தவர். இலங்கைத் தமிழர்களான கந்தையா மயில்வாகனம், இளையதங்கம் ஆகியோரின் ஆறு பிள்ளைகளில் இரண்டாவதாகப் பிறந்து, கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் என்ற இடத்தில் வளர்ந்தார். தந்தை கோலாலம்பூர் இசைப்பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கமால் மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு உயர் கல்வி பெறுவதற்காக வந்தார். தெற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான அடிலெய்ட்டில் மன்னர் கல்லூரியில் (பெம்புரோக் பள்ளி) தமது படிப்பைத் தொடர்ந்தார். அப்போது கமாலுக்கு ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வராது. இனவெறி தாண்டவமாடிய காலம். வெள்ளை ஆஸ்திரேலியா கொள்கை தீவிரமாக அமுலில் இருந்த காலம் அது. கமால் கறுப்பு நிறம் கொண்டவர். இந்தச் சூழலில் கமால் தமது படிப்பை மேற்கொண்டார். பல இடர்களுக்கு மத்தியில் 1955 ஆம் ஆண்டு கமால் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டார்.

ரூபேட் மேர்டொக்கின் நட்பு
அடிலெய்ட்டில் பெரும் செல்வந்தராக விளங்கிய ரூபேட் மேர்டொக் (Rupert Murdock) அவர்களின் நட்புக்குரியவரானார். 1968 ஆம் ஆண்டு தொடங்கிய இந்நட்புறவு, கமாலுக்குத் துன்பங்கள் வந்தபோதெல்லாம் பேருதவியாக இருந்தது. 1962 ஆம் ஆண்டு கமால் அடிலெய்டில் இருந்து சிட்னிக்குப் புலம்பெயர்ந்தார். 1966 இல் அவுஸ்திரேலியாவின் நிரந்தரக் குடிமகனானார்.

மேற்கத்திய இசையில் புகழ்
ரூபேட் மேர்டொக்கின் உதவியால் மேற்கத்திய இசையில் புகழ் பெற்றார். தனது முதலாவது ஆல்பமான A Voice to Remember சிட்னியில் 1967 இல் வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக இசை விழாவில் கமால் பங்கு கொண்டார். மேற்கத்திய இசைத்துறையில் சுமார் 50 ஆண்டு காலம் கோலோச்சி நூற்றுக்கணக்கான ஆல்பங்களை பலநாடுகளிலும் வெளியிட்டார். சமீபத்திய ஆல்பமான Imagine the World in Unison 2005 இல் வெளியிடப்பட்டது.

விருதுகள்
 1994 - Order of Australia, அவுஸ்திரேலியாவின் அதிஉயர் விருது.
 1998 - Australian father of the Year
 2004 - அவுஸ்திரேலியாவின் நூற்றாண்டு விருது இரண்டாம் எலிசபெத் மகாராணியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
 2006 - Our Entertainers of the 20th Century - அவுஸ்திரேலிய விருது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

 Kamahl.Com
 கமாலின் ஆல்பங்களின் தொகுப்பு 
 கமாலின் மலேசியா வாழ்க்கை, சில அரிய புகைப்படங்கள் 
 அவுஸ்திரேலிய ஏபிசி தொலைக்காட்சியில் கமாலின் நேர்காணல், 2005
 கமாலின் The Elephant Song 
 Kamahl performing `My Home` in 2015, தனது 80வது அகவையில் நியூகாசில் நகரில்
 Some information about Kamahl about when he was young in Malaysia, from the Victoria Institution
 Kamahl performing "My Home" in 2015 at the age of 80 in Newcastle NSW Australia

ஆத்திரேலியப் பாடகர்கள்
1934 பிறப்புகள்
வாழும் நபர்கள்
ஆஸ்திரேலியத் தமிழர்
இசைக் கலைஞர்கள்
மலேசியத் தமிழ் நபர்கள்
தெற்கு ஆத்திரேலிய நபர்கள்
தமிழ் இசைக்கலைஞர்கள்
இலங்கைத் தமிழ் ஆத்திரேலியர்கள்
ஆத்திரேலிய இந்துக்கள்
மலேசிய இந்தியர்கள்
மலேசிய இந்துக்கள்
இலங்கைத் தமிழ் இசைக்கலைஞர்கள்
பாலகுமாரன் (சூலை 5, 1946 - மே 15, 2018) தமிழ்நாட்டின், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் 150-க்கு மேற்பட்ட புதினங்கள், நூற்றிற்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல தமிழ்த் திரைப்படங்களுக்குக் கதை, வசனங்களையும் எழுதியுள்ளார்.

பாலகுமாரன் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் வைத்தியநாதன், சுலோசனா ஆகியோருக்கு 1946 ஆம் ஆண்டு பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர் தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969 ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில 'கணையாழி' இதழில் வெளிவந்தன. பின்னர் இழுவை இயந்திரம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும், கே. பாக்யராஜ் குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

படைப்புகள்

புதினங்கள் 
அகரவரிசையில்

 அகல்யா(5ஆவது நூல்) 
 அகல்விளக்கு
 அடுக்கு மல்லி
 அத்திப்பூ
 அப்பம் வடை தயிர்சாதம் (குமுதம் இதழ் தொடர்) |
 அப்பா!, 1993 
 அமிர்தயோகம்
 அம்மாவும் பத்து கட்டுரைகளும்
 அரசமரம்
 அவரும் அவளும்
 அவனி (இராண்டாம் ராஜராஜன் தாராசுரத்தில் ஐராவதேஸ்வரர் கோயில் கட்டிய கதை)
 அன்பரசு(மாணிக்கவாசகர் புராணம்)
 ஆசை என்னும் வேதம்
 ஆசைக்கடல்
 ஆயிரம் கண்ணி
 ஆருயிரே மன்னவரே
 ஆலமரம்
 ஆனந்த யோகம் (தாயுமானவர் புராணம்)
 ஆனந்த வயல், நர்மதா பதிப்பகம், சென்னை
 இதுதான் காதல் என்பதா..? 
 இதுதான் வயது காதலிக்க... 
 இரண்டாவது கல்யாணம் 
 இரண்டாவது சூரியன், நர்மதா பதிப்பகம், சென்னை 
 இரும்பு குதிரைகள், 1984, கல்கி தொடர், (7ஆவது நூல்) - மோட்டார் தொழில் பற்றிய கதை
 இனி என் முறை 
 இனிது இனிது காதல் இனிது
 இனிய யட்சினி
 உச்சித் திலகம் 
 உடையார், தஞ்சை பெருவுடையார் கோவிலின் கதை
 உத்தமன்
 உயிர்ச்சுருள்
 உள்ளம் கவர் கள்வன், நர்மதா பதிப்பகம், சென்னை
 உறவில் கலந்து உணர்வில் நனைந்து, 1993, தினமணி கதிர் தொடர்
 எங்கள் காதல் ஒரு தினுசு
 எட்ட நின்று சுட்ட நிலா
 எதிர்ப்பக்கம், கல்கி தொடர் 
 நானே எனக்கொரு போதி மரம், ஏப்ரல் 1989 (திருமணத்திற்கு பின்னர் அறுந்துபோகும் ஆண்களது நட்பின் கதை)
 என் அன்புள்ள அப்பா
 என் கண்மணி (20ஆவது நூல்) 
 என் கண்மணித் தாமரை 
 என் மனது தாமரைப்பூ (18ஆவது நூல்) 
 என்றென்றும் அன்புடன் (9ஆவது நூல்)
 என்னுயிரும் நீயல்லவோ, 1994, கல்கி 
 என்னுயிர் தோழி 
 என்னுயிரும் நீயல்லவோ
 ஏதோ ஒரு நதியில் (2ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை, குறுநாவல்
 ஏழாவது காதல் 
 ஏனோ தெரியவில்லை 
 ஒரு காதல் நிவந்தம், நர்மதா பதிப்பகம், சென்னை. (ராஜேந்திர சோழர் - திருவாரூர் தளிச்சேரிப்பெண் பரவையார் காதல்
 ஒரு சொல் (காஞ்சி சங்கரர் கதை)
 கங்கை கொண்ட சோழன் (கங்கைகொண்டசோழபுரத்தின் கதை)
 கடல் நீலம் 1989 ஏப்ரல்
 கடலோரக் குருவிகள் 
 கடற்பாலம் (15ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை 
 கடிகை
 கண்காட்சி 
 கண்ணாடிக் கோபுரங்கள்
 கண்ணே கலைமானே
 கண்ணே வண்ணப் பசுங்கிளியே
 கதைகதையாம் காரணமாம்
 கரையோர முதலைகள் (14ஆவது நூல்) (காதலியின் திருமணத்தை நடத்தி வைக்கும் காதலனின் கதை)
 கர்ணனின் கதை
 கல்குதிரை
 கல்யாண முருங்கை
 கல்யாணத் தேர்
 கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
 கவிழ்ந்த காணிக்கை (திருகளத்தூரில் கவிழ்ந்து பிளந்து கிடக்கும் நந்தியின் கதை)
 கள்ளி
 கற்றுக்கொண்டால் குற்றமில்லை
 கனவு கண்டேன் தோழி
 கனவுக்குடித்தனம் 
 கனவுகள் விற்பவன்
 காசும் பிறப்பும் 
 காதல் சிறகு
 காதல் சொல்ல வந்தேன்
 காதல் வரி
 காதல் வெண்ணிலா
 காதற்கிளிகள்
 காதற் பெருமான் (அருணகிரிநாதர் புராணம்)
 காமதேனு
 காற்றுக்கென்ன வேலி
 கானல் தாகம்
 கிருஷ்ண மந்திரம்
 குசேலர்
 குயிலே குயிலே
 குரு
 கூடு
 கை வீசம்மா கை வீசு, நர்மதா பதிப்பகம், சென்னை 
 கொஞ்சும் புறாவே
 கொம்புத்தேன் (13ஆவது நூல்) 
 சக்ரவாஹம்
 சக்தி
 சிநேகமுள்ள சிங்கம்
 சிம்மாசனம் (குமரகுருபரர் கதை)
 சின்ன சின்ன வட்டங்கள், நர்மதா பதிப்பகம், சென்னை
 சுந்தரி கண்ணால் ஒரு சேதி
 சுழற்காற்று 
 செண்பகத்தோட்டம்
 செப்புப் பட்டயம்
 செவ்வரளி (விலங்கு மருத்துவனின் கதை)
 சொர்ண வேட்டை
 தங்கக்கை
 தனரேகை
 தனிமைத் தவம் 
 தாயுமானவன் (19ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை 
 திருப்பூந்துருத்தி
 திருமணமான என் தோழிக்கு 
 திருவடி
 துணை
 துளசி
 தென்னம் பாளை
 தொப்புள் கொடி
 தோழன்
 நல்ல முன்பனிக்காலம்
 நான்காம் பிறை 
 நான் என்ன சொல்லிவிட்டேன்
 நிகும்பலை
 நிலாக்கால மேகம் (12ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
 நிலாவே வா, நர்மதா பதிப்பகம், சென்னை 
 நிழல் யுத்தம், நர்மதா பதிப்பகம், சென்னை, 1987 நவம்பர் (சங்கரன் மகள் லலிதாவிற்கும் முரளிக்கும் நடந்த மணவாழ்க்கை)
 நீ வருவாய் என (8ஆவது நூல்) 
 நெளிமோதிரம்
 நெல்லுச் சோறு
 நேற்று வரை ஏமாற்றினாள்! 
 பச்சை வயல் மனது (6ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை
 பட்டாபிஷேகம்
 பணம் காய்ச்சி மரம்
 பந்தயப் புறா, நர்மதா பதிப்பகம், சென்னை 
 பயணிகள் கவனிக்கவும்
 பவழமல்லி
 பனிவிழும் மலர்வனம்
 பலாமரம், நர்மதா பதிப்பகம், சென்னை
 பாகசாலை 
 பிரம்புக்கூடை
 புருஷ வதம்
 பெண்ணாசை (பீஷ்மரின் கதை)
 பெரிய புராணக் கதைகள்
 பேய்க் கரும்பு
 பொய்மான்
 பொன்னார் மேனியனே
 போகன் வில்லா
 போராடும் பெண்மணிகள்
 மணல் நதி
 மரக்கால் (17ஆவது நூல்) (விபத்தில் காலை இழந்த சிறுவனின் கதை)
 மனக்கோயில் 
 மனசே மனசே கதவைத் திற
 மனம் உருகுதே
 மண்ணில் தெரியுது வானம் 
 மாலைநேரத்து மயக்கம்
 மாவிலைத் தோரணம்
 மானச தேவி 
 மீட்டாத வீணை 
 முதிர்கன்னி 
 முந்தானை ஆயுதம் 
 முன்கதைச் சுருக்கம், நர்மதா பதிப்பகம், சென்னை
 மெர்க்குரிப் பூக்கள், சாவி இதழ் தொடர் (3ஆவது நூல்), தொழிற்சங்க ஊழியனின் கதை
 மெளனமே காதலாக...(4ஆவது நூல்), நர்மதா பதிப்பகம், சென்னை 
 மேய்ச்சல் மைதானம்
 யானை வேட்டை (23ஆவது நூல்) (தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கதை)
 ரகசிய சிநேகிதனே 
 ராஜ கோபுரம் 
 வன்னிமரத் தாலி 
 வாலிப வேடம் 
 வாழையடி வாழை 
 விழித்துணை (234ஆவது நூல்)
 வில்வ மரம் (22ஆவது நூல்) நர்மதா பதிப்பகம், சென்னை.
 வெள்ளைத் துறைமுகம்
 வெற்றிலைக் கொடி 
 வேட்டை

கட்டுரைகள் 
 உயிர்ச்சுருள்
 காதலாகிக் கனிந்து
 ஞாபகச் சிமிழ்
 சூரியனோடு சில நாட்கள்
 அந்த ஏழு நாட்கள்

கட்டுரைத் தொகுப்புகள் 
 பாலகுமாரன் கட்டுரைகள்
 சிறுகதைகளும் கட்டுரைகளும்

சிறுகதைத் தொகுப்புகள் 
 சின்ன சின்ன வட்டங்கள் (முதலாவது நூல்)
 சுகஜீவனம்
 கடற்பாலம்

கவிதைத் தொகுப்புகள் 
 விட்டில்பூச்சிகள்

சிறுகதைகளும் கவிதைகளும் தொகுப்புகள் 
 விசிறி சாமியார் (1991 திசம்பர்)

வாழ்க்கை வரலாறுகள் 
 பகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம் (2014)

தன்வரலாறு 
 முன்கதைச் சுருக்கம்
 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?
 ஒரு சொல் ஒரு வில் ஒரு இல்

வினாவிடைகள்
 பால்குமாரன் பதில்கள் - 4 பாகங்கள்

மறுஆக்கங்கள்
 மகாபாரதம் (இரு பாகங்கள்)

பாலகுமாரன் சிறுகதைப்பட்டியல் 
(அகரவரிசைப்படி முறைப்படி)

திரைக்கதைகள்

விருதுகள்

இலக்கிய விருதுகள் 
 ராஜா சர் அண்ணாமலை செட்டியார் ட்ரஸ்ட் விருது (இரும்புக் குதிரைகள்)
 இலக்கியச் சிந்தனை விருது (மெர்க்குரிப் பூக்கள்)
 தமிழ்நாட்டு மாநில விருது (சுகஜீவனம் - சிறுகதை தொகுப்பு)

கலை 
 கலைமாமணி

திரையுலக விருதுகள் 
தமிழ்நாட்டு மாநில விருது (காதலன் - சிறந்த வசனம்)

மறைவு 
மே 14, 2018 அன்று இரவு கடும் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மே 15, 2018 அன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 
எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - அறிமுகம்
 Stories from the heart
 எழுத்துச்சித்தர் பாலகுமாரன் - வலைப்பூக்கள்
 பாலகுமாரன் பேசுகிறார் வலைப்பூ
 தமிழ் நண்பர்களில் பாலகுமாரன் 
தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்
 பாலகுமாரன் நூல்கள்
 பாலகுமாரன் - கம்யூனிஸ்ட் - எழுத்தாளர் - சித்தர்

தமிழ் எழுத்தாளர்கள்
1946 பிறப்புகள்
தமிழக எழுத்தாளர்கள்
கலைமாமணி விருது பெற்றவர்கள்
தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்
2018 இறப்புகள்
தமிழ்நாட்டுத் திரைக்கதை எழுத்தாளர்கள்


நிகழ்வுகள் 
கிமு 30 – ஒக்டேவியன் எகிப்தின் அலெக்சாந்திரியா நகரைக் கைப்பற்றி அதனை உரோமைக் குடியரசின் கீழ் கொண்டு வந்தான்.
527 – முதலாம் ஜஸ்டீனியன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
1291 – சுவிஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
1498 – கிறித்தோபர் கொலம்பசு வெனிசுவேலாவில் தரையிறங்கினார். இங்கு வந்த முதலாவது ஐரோப்பர் இவராவார்.
1571 – உதுமானியப் பேரரசு சைப்பிரசைக் கைப்பற்றியது.
1664 – உதுமானியப் படைகள் சென் கோத்தார்டு சமரில் ஆத்திரிய இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்டன.
1714 – அனோவரின் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முதலாம் ஜோர்ஜ் என்ற பெயரில் முடிசூடினார்.
1759 – ஏழாண்டுப் போர்: மின்டென் சமரில் ஆங்கிலோ-செருமனியக் கூட்டுப் படை பிரெஞ்சுப் படைகளை வென்றது.
1774 – பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன் வளிமத்தைக் கண்டுபிடித்து, செருமன்-சுவீடிய வேதியலாளர் காரல் வில்லெம் சீலெயின் முந்தைய கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தினார்.
1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
1801 – அமெரிக்கப் பாய்க்கப்பல் என்டர்பிரைசு லிபியாவில் திரிப்போலி என்ற பாய்க்கப்பலைக் கைப்பற்றியது.
1834 – பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1867 – பிரித்தானிய இலங்கையில் கண்டிக்கும் கொழும்புக்கும் இடையே தொடருந்துப் போக்குவரத்து பொதுமக்களுக்கு ஆரம்பிக்கப்பட்டது.
1876 – கொலராடோ ஐக்கிய அமெரிக்காவின் 38வது மாநிலமாக ஏற்கப்பட்டது.
1894 – சப்பானுக்கும் சிங் சீனாவுக்கும் கொரியா தொடர்பான முதலாம் சீன சப்பானியப் போர் தொடங்கியது.
1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார். இது ஆகத்து 9 வரை நீடித்தது.
1914 – முதலாம் உலகப் போர்: செருமானியப் பேரரசு உருசியப் பேரரசு மீது போரை ஆரம்பித்தது. 
1914 – இலங்கையில் மன்னாருக்கும் மதவாச்சிக்கும் இடையில் பகல் நேர தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1927 – சீன உள்நாட்டுப் போரின் முக்கிய சமர் குவோமின்டாங் படைகளுக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையில் ”நான்சாங்” என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்நாள் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆரம்பிக்கப்பட்ட நாளாக நினைவு கூரப்படுகிறது.
1933 – பாசிசத்துக்கு எதிரான செயற்பாட்டளர்கள் நால்வர் செருமனி, ஆம்பர்கில் தூக்கிலிடப்பட்டனர்.
1936 – பெர்லினில் 11-வது ஒலிம்பிக் விளையாட்டுக்களை இட்லர் ஆரம்பித்து வைத்தார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் வார்சாவா நகரில் நாட்சி ஜெர்மனிக்கெதிரான கிளர்ச்சி ஆரம்பமானது.
1946 – நாட்சி ஜெர்மனியுடன் உறவு வைத்திருந்த உருசிய விடுதலை இராணுவப் படையினர், தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக மாஸ்கோவில் தூக்கிலிடப்பட்டனர்.
1950 – குவாம் ஐக்கிய அமெரிக்காவின் பொதுநலவாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.
1960 – பெனின் பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1960 – பாக்கித்தான் நடுவண் அரசின் தலைநகராக இசுலாமாபாத் அறிவிக்கப்பட்டது.
1964 – பெல்ஜிய கொங்கோவின் பெயர் காங்கோ மக்களாட்சிக் குடியரசு எனப் பெயர் மாற்றப்பட்டது.
1966 – டெக்சாசு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1968 – புரூணையின் 29வது சுல்தானாக அசனல் போல்கியா முடிசூடினார்.
1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.
1980 – அயர்லாந்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.
1988 – இலண்டனில் இராணுவ முகாம் ஒன்றின் மீது ஐரியக் குடியரசுப் படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதில் ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டார்.
2004 – பரகுவை தலைநகர் அசுன்சியோனில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 396 பேர் உயிரிழந்தனர், 500 பேர் காயமடைந்தனர். 
2006 – இலங்கை, திருகோணமலையில் கடற்படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 14 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
2007 – அமெரிக்காவில் மினியாபோலிசில் மிசிசிப்பி ஆற்றின் குறுக்கே அமைந்த பாலம் ஒன்று வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்தனர், 145 பேர் காயமடைந்தனர்.
2008 – உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
2008 – உலகின் இரண்டாவது பெரிய மலையான கே-2 கொடுமுடியில் 11 பன்னாட்டு மலையேறிகள் உயிரிழந்தனர்.

பிறப்புகள் 

கிமு 10 – குளோடியசு, உரோமைப் பேரரசர் (இ. 54)
1744 – ஜீன் பாப்தித்தே லாமார்க், பிரான்சிய உயிரியலாளர், போர்வீரர் (இ. 1829)
1782 – இயூஜின் டி மசெனோ, பிரெஞ்சு கத்தோலிக்கப் புனிதர் (இ. 1861)
1818 – மரியா மிட்செல், அமெரிக்க வானியலாளர் (இ. 1889)
1819 – ஏர்மன் மெல்வில், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1891)
1837 – மேரி ஹாரிசு ஜோன்சு, ஐரிய-அமெரிக்கத் தொழிற்சங்கவாதி (இ. 1930)
1876 – டைகர் வரதாச்சாரியார், தமிழக கருநாடக இசைக் கலைஞர் (இ. 1950)
1881 – கா. சூரன், ஈழத்து சைவப் பெரியார் (இ. 1956)
1882 – புருசோத்தம் தாசு தாண்டன், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1962)
1885 – ஜியார்ஜ் டி கிவிசி, நோபல் பரிசு பெற்ற அங்கேரிய-செருமானிய வேதியியலாளர் (இ. 1966)
1899 – கமலா நேரு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1936)
1905 – எலன் சாயர் கோகு, அமெரிக்க-கனடிய வானியலாளர் (இ. 1993)
1910 – கேர்டா டேரோ, செருமானிய புகைப்படக் கலைஞர் (இ. 1937]])
1910 – முகமது நிசார், இந்தியத் துடுப்பாளர் (இ. 1963)
1924 – சவூதி அரேபியாவின் அப்துல்லா (இ. 2015)
1929 – ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிய அரசியல்வாதி (இ. 1979)
1930 – பியரே பூர்டோ, பிரான்சிய சமூகவியலாளர், மெய்யியலாளர் (இ. 2002)
1932 – கு. சிவமணி, தமிழக வரலாற்றாளர், எழுத்தாளர், சட்டவறிஞர் (பி. 2022)
1932 – மீனாகுமாரி, இந்திய நடிகை (இ. 1972)
1934 – குரும்பசிட்டி இரா. கனகரத்தினம், இலங்கை ஆவண அறிஞர், தமிழார்வலர், எழுத்தாளர் (இ. 2016)
1935 – சோக்கல்லோ சண்முகநாதன், இலங்கை மேடை நாடக, வில்லுப்பாட்டு கலைஞர்
1944 – டெல்லி கணேஷ், தமிழகத் திரைப்பட, நாடக நடிகர்
1946 – குப்பிழான் ஐ. சண்முகன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2023)
1949 – குர்மான்பெக் பாக்கியெவ், கிர்கித்தானின் 2வது அரசுத்தலைவர்
1952 – வி. ராதாகிருஷ்ணன், இலங்கை மலையக அரசியல்வாதி
1967 – ஜோஸ் பாடில்கா, பிரேசில் இயக்குநர்
1969 – கிரகாம் தோர்ப், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1984 – பாஸ்தியான் இசுவைன்சுடைகர், செருமன் கால்பந்தாட்ட வீரர்
1987 – டாப்சி பன்னு, இந்திய நடிகை

இறப்புகள் 
1714 – பெரிய பிரித்தானியாவின் அரசி ஆன் (பி. 1665)
1787 – அல்போன்ஸ் மரிய லிகோரி, இத்தாலியப் புனிதர் (பி. 1696)
1868 – பீட்டர் ஜூலியன் ஐமார்ட், பிரெஞ்சு கத்தோலிக்க குரு (பி. 1811)
1920 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1856)
1944 – மானுவல் எல். குவிசோன், பிலிப்பீனின்2வது அரசுத்தலைவர் (பி. 1878)
1967 – ரிச்சர்ட் குன், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-செருமானிய வேதியியலாளர் (பி. 1900)
1974 – மு. இராமலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1908)
1982 – தா. திருநாவுக்கரசு, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
1999 – நீரத் சந்திர சவுத்ரி, வங்காளதேச-ஆங்கிலேய வரலாற்றாளர் (பி. 1897)
1999 – கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (பி. 1928)
2008 – ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்திய அரசியல்வாதி (பி. 1916)
2009 – கொரசோன் அக்கினோ, பிலிப்பீன்சின் 11வது அரசுத்தலைவர் (பி. 1933)
2020 – எம். எஸ். செல்லச்சாமி, இலங்கை அரசியல்வாதி (பி. 1926)
2023 – விமல் சொக்கநாதன், வானொலிக் கலைஞர், ஒலிபரப்பாளர் (பி. 1944)

சிறப்பு நாள்  
விடுதலை நாள் (பெனின், பிரான்சிடம் இருந்து 1960)
வெற்றி நாள் (கம்போடியா, லாவோஸ், வியட்நாம்)
தேசிய நாள் (சுவிட்சர்லாந்து, 1291)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 

 
 நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
 

ஆகத்து
ஆண்டின் நாட்கள்
மீன்கொத்தி (Kingfishers) உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன. இவை பெரிய தலைகளும் நீண்ட கூரிய அலகுகளும் குட்டைக் கால்களும் சிறு வால்களும் கொண்டவையாகும். எடுப்பான நிறங்கள் கொண்ட இம் மீன்கொத்தி இனங்களின் வகைப்பாட்டில் மூன்று குடும்பங்கள் உள்ளனன. அவையாவன, ஆற்று மீன்கொத்திகள் எனப்படும் ஆல்சிடினிடீ (Alcedinidae), மர மீன்கொத்தி எனப்படும் ஆல்க்கியோனிடீ (Halcyonidae), நீர் மீன்கொத்தி எனப்படும் செரிலிடீ (Cerylidae).

நீர்நிலையருகில் வாழும் மீன்கொத்திகள் சுழியோடி சிறு மீன்களைப் பிடித்து உண்கின்றன. தவளைகள், பூச்சிகளையும் உண்கின்றன. இவற்றின் கண்கள் நீருள்ளும் வெளியேயும் பார்க்கக் கூடியதான முட்டைவடிவ வில்லையைக் கொண்டுள்ளன. மர மீன்கொத்திகள் ஊர்வனவற்றைப் பிடித்துண்கின்றன. எல்லா வகையான மீன்கொத்திகளும் தாம் பிடித்த இரையை மரத்தில் அடித்தோ கல்லில் வீழ்த்தியோ கொன்று உண்கின்றன.

பரவலும் வாழிடமும்

மீன்கொத்திகள் உலகில் புவிமுனைப் பகுதிகள், மிக வறண்ட சில பாலைவனங்களைத் தவிர ஏறக்குறைய மற்ற எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. சில இனங்கள் பசிபிக் பெருங்கடலின் தெற்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள தீவுகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவில் மெக்சிக்கோவிற்கு வடக்கிலும் சிறிய எண்ணிக்கையிலான மீன்கொத்தி இனங்களே காணப்படுகின்றன.

வெளி இணைப்புக்கள்
  மீன்கொத்தி (Alcedo atthis) நிழற்படங்கள் மற்றும் நிகழ்படங்கள்  - (ஆங்கிலம்)
  Internet Bird Collection இணையத்தளத்தில் மீன்கொத்தி நிகழ்படங்கள் - (ஆங்கிலம்)

மீன்கொத்திகள்
புரந்தரதாசர் (பொ.ஊ. 1470–1564) கருநாடக இசையின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.
இவர் ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்கள் முதலியவற்றை இயற்றியுள்ளார். மாயாமாளவகௌளை என்னும் இராகம் தான் ஆரம்பப் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற ராகம் எனத் தேர்ந்தெடுத்தவரும் இவரே.

வாழ்க்கைக் குறிப்பு 
புரந்தரதாசர் பொ.ஊ. 1470 ஆம் ஆண்டு கன்னட மாநிலத்தில் புரந்தடகட எனும் ஊரில் மத்மதோஸ்த பிராமண குலத்தில்  பிரபல்யமான செல்வந்தரான வரதப்பநாயக்கருக்கும் கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். இவரின் இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக் ஆகும். இவர் இளமையில் சீனப்பா என்ற பெயராலும் பின்பு திம்மப்பா, திருமலையப்பா என்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் விட்டலர் மீது பக்தி ஏற்பட்டதால் புரந்தரவிட்டலர் எனும் பெயரும் வழங்குதலாயிற்று. தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். தனது பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தையே தானும் தொடர்ந்து பெரும் செல்வம் ஈட்டி நவகோடி நாராயணன் என்னும் பெயருடன் விளங்கினார். இவர் தொடக்கத்தில் மிகவும் கருமியாகவும் பணமீட்டுவதிலேயே எண்ணமாகவும் இருந்தார். இப்படியிருந்த இவரை பக்தி வழிக்கு திருப்பியது ஒரு முக்கிய சம்பவமாகும். ஒரு சமயம் இவர் வயிற்று வலியால் அல்லலுற்றார். இதைப் போக்க யாராலும் முடியவில்லை. பண்டரிபுரத்தில் கோயில் கொண்டுள்ள விட்டலர் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்த பின் வயிற்று வலி நீங்கியது. தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று பின்பு 1525 ம் ஆண்டு விஜயராச சுவாமிகளினதும், சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார்.இவர் சங்கீத பிதாமகர்,ஆதி குரு எனவும் அழைக்கப்படுகிறார்.

இசைப் பணி 
இவர் 475,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளிய என்னும் உருப்படியில் குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது 8000 உருப்படிகள் தான் எஞ்சியுள்ளது. இவரின் உருப்படிகள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவரின் உருப்படிகளை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவரது முத்திரை புரந்தரவிட்டல என்பது ஆகும். இலகுவான மொழியில் உள்ள இவரின் உருப்படிகளின் நடை மிகவும் எளிது. இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் உருப்படிகள் செய்துள்ளார். இந்துஸ்தானி இசையிலும் சிறந்து விளங்கினார்.

இறப்பு 
இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து 1564 ம் ஆண்டு தை மாதம் இரண்டாம் திகதி அமாவாசையன்று இப்பூவுலகை நீர்த்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள் 
Biography of Purandara Dasa 
Lyrics of songs by Purandara Dasa 
Purandaradasa by  Dr. Jyotsna Kamat

1484 பிறப்புகள்
1564 இறப்புகள்
வாக்கேயக்காரர்கள்
கருநாடக இசைக் கலைஞர்கள்
வைணவ அடியார்கள்
கன்னடக் கவிஞர்கள்
இந்திய சமுதாய மறுமலர்ச்சியாளர்கள்
ஒரு நிலப்பகுதியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (gross domestic product அல்லது GDP) என்பது, அப்பகுதியின் பொருளாதாரத்தின் அளவை அறிய உதவும் அளவைகளுள் ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியுள், ஒரு ஒரு நிலப்பகுதியின் எல்லைக்குள் உற்பத்தி செய்யப்படுகின்ற மொத்தப் பொருட்களினதும், சேவைகளினதும் சந்தைப் பெறுமதியே மொத்த உள்நாட்டு உற்பத்தி என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பதன் ஆங்கிலச் சுருக்கமான ஜிடிபி என்பதை  பரவலாக தனிசொல்லாகவே பயன்படுத்துவோரும் உண்டு. ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியை அளவிட உதவும் இச்சொல் ஓர் பகுதி அல்லது ஓர் தொழிற்றுறையை அளவிடவும் பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இது விற்பனையை விட மதிப்புக் கூட்டலையே அளக்கின்றது; ஒவ்வொரு நிறுவனத்தின் நிகர மதிப்பும் கூட்டப்படுகின்றது. ( வெளிவரும் பொருட்களின் மதிப்பிலிருந்து அதனை உருவாக்க பயன்பட்ட மதிப்பைக் கழித்துப் பெறுவதாகும்).  காட்டாக, ஓர் நிறுவனம் இரும்பை வாங்கி அதிலிருந்து தானுந்து தயாரிக்கின்றது; இரும்பின் மதிப்பையும் தானுந்து மதிப்பையும் கூட்டினால் ஜடிபி இரட்டிப்பாக  எண்ணப்படும். எனவேதான் மொ.உ.உற்பத்தியில் மதிப்பு கூட்டல்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஓர் நிறுவனம் அதே வெளியீட்டிற்கு தயாரிப்புச் செலவையோ பயன்படுத்தப்படும் பொருட்களையோ குறைத்தால்  மொ.உ.உ  மதிப்பு கூடுகின்றது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் பொருளாதார வளர்ச்சியை காலாண்டுக்கு காலாண்டோ ஆண்டுக்கு ஆண்டோ ஒப்பிடப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பொருளாதாரக் கொள்கைகளின் வெற்றி/தோல்விகளை தீர்மானிக்கவும்  பொருளாதார பின்னடைவை கண்காணிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது. 

மொத்த உள்நாட்டு உற்பத்தியை அளப்பதற்கும், விளங்கிக் கொள்வதற்கும் பொதுவாகப் பயன்படுவது செலவின முறையாகும் (expenditure method). 

மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவினங்கள் + (ஏற்றுமதி - இறக்குமதி)

இதனுள் மூலதனப் பண்டங்களின் தேய்வும் சேர்ந்திருப்பதன் காரணமாக மொத்த உற்பத்தி என்று குறிப்பிடப் படுகின்றது. இச் சமன்பாட்டில் நுகர்வும், முதலீடும் முற்றுப்பெற்ற பொருட்களினதும், சேவைகளினதும் மீதான செலவினங்களாகும். தற்காலத்தில் பொருளியலாளர்கள் நுகர்வை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கருதுகிறார்கள். அவை தனியார் நுகர்வு, பொதுத்துறைச் செலவினம் என்பனவாகும்.

 உள்நாட்டு உற்பத்தி எதிர் தேசிய உற்பத்தி 

மொத்த தேசிய உற்பத்தி ( மொ.தெ.உ, Gross National Product'') மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (மொ.உ.உ) இருந்து மாறுபட்டது. மொ.உ.உ ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியின் அளிவீடு. இதற்கு புவியியல் எல்லைகள் உண்டு. ஆனால் மொ.தே.உ, உள்நாட்டு உற்பத்தி போலவே கணக்கிடப்பட்டாலும், அதற்குப் புவியியல் எல்லைகள் கிடையாது. எ.கா. ஒரு நாட்டின் மொ.உ.உ அந்நாட்டின் எல்லைகளுக்குள் உள்ள மக்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடப்படும். மொ.தே.உ கணக்கீட்டில் அந்நாட்டின் குடிமகன்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும். (அவை நாட்டெல்லைக்கு வெளியே அமைந்திருந்தாலும்) மேலும் ஒரு நாட்டின் மொ.உ.உ கணக்கீட்டில் பிற நாட்டு குடிமகன்களின் அமைப்புகளும் நாட்டெல்லைக்குள் அமைந்திருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் ஆனால் மொ.தெ.உ கணக்கீட்டில் அவை ஏற்றுக் கொள்ளப்படா.

மேற்சான்றுகள்

பொருளாதார அளவீடுகள்


நிகழ்வுகள் 
கிமு 338 – பண்டைய மக்கெடோனிய இராணுவம் இரண்டாம் பிலிப்பு தலைமையில் ஏதன்சு, தீபசு படைகளை கெரோனியா சமரில் தோற்கடித்து, மக்கெடோனிய ஆதிக்க அரசியலை கிரேக்கத்தில் அது நிலைநிறுத்தியது.
கிமு 216 – கார்த்தீனிய இராணுவம் ஹன்னிபால் தலைமையில் கனே சமரில் உரோமை இராணுவத்தை வென்றது.
1274 – முதலாம் எட்வர்டு ஒன்பதாம் சிலுவைப் போரில் இருந்து திரும்பி வந்தார். 17 நாட்களின் பின்னர் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1610 – வடமேற்குப் பெருவழியைக் கண்டுபிடிக்கும் தனது கடற் பயணத்தின் போது என்றி அட்சன் இன்றைய அட்சன் விரிகுடாவை அடைந்தார்.
1776 – அமெரிக்க விடுதலைச் சாற்றுரையின் ஒப்பமிடுதல் நிகழ்வு இடம்பெற்றது.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
1798 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: நைல் நதிப் போரில் பிரித்தானியா வெற்றி பெற்றது.
1830 – |பிரான்சின் பத்தாம் சார்லசு மன்னர் முடிதுறந்தார். அவரது பேரன் என்றி மன்னராக முடிசூடினார்.
1858 – இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
1870 – உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: ஜேர்மனியப் படையினர் லக்சம்பர்க்கை செருமனி ஆக்கிரமித்தது.
1916 – முதலாம் உலகப் போர்: லியனார்டோ டா வின்சி என்ற இத்தாலியப் போர்க்கப்பல் ஆத்திரியாவினால் தாரந்தோவில் மூழ்கடிக்கப்பட்டது.
1918 – கனடிய வரலாற்றில் முதல் தடவையாக பொது வேலைநிறுத்தம் வான்கூவர் நகரில் இடம்பெற்றது.
1922 – சீனக் குடியரசைத் தாக்கிய சூறாவளியில் 50,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1932 – பாசிட்ரான் (இலத்திரனின் எதிர்மின்னி) கார்ல் ஆண்டர்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1934 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவரானார்.
1937 – ஐக்கிய அமெரிக்காவில் கஞ்சா போதை மருந்தும் அதன் துணை விளைபொருட்களும் தடைசெய்யப்பட்டன.
1939 – அணுவாயுதத்தை தயாரிக்க உதவும் மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள்.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் படகு ஒன்று சப்பானியக் கடற்படையினரின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டது. லெப். ஜான் எஃப். கென்னடி (பின்னாளைய அமெரிக்க அரசுத்தலைவர்) உயிர் தப்பினார்.
1943 – போலந்தில் திரெபிலிங்கா வதை முகாமில் நாட்சிகளுக்கு எதிராக யூதர்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. இவ்வதைமுகாமில் 18 மாதங்களில் 900.000 கைதிகள் கொல்லப்பட்டனர்.
1944 – சோசலிச மக்கெடோனியக் குடியரசு உருவானது.
1945 – இரண்டாம் உலகப் போர்: தோல்வியடைந்த செருமனியின் எதிர்காலம் குறித்து விவாதித்த நேச நாடுகளின் பொட்ஸ்டாம் உச்சி மாநாடு நிறைவடைந்தது.
1947 – புவனெசு ஐரில் இருந்து சான் டியேகோ நோக்கிச் சென்ற பிரித்தானிய தென்னமெரிக்க அவ்ரோ விமானம் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் சிதைவுகள் 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டன.
1968 – பிலிப்பீன்சில் கசிகுரான் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 270 பேர் உயிரிழந்தனர்.
1973 – மான் தீவில் டக்லசு நகரில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
1980 – இத்தாலியில் பொலோனா தொடருந்து நிலையத்தில் குண்டு வெடித்ததில் 85 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
1985 – டெல்ட்டா ஏர்லைன்சு 191 விமானம் டாலசு- வொர்த் கோட்டை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் உயிரிழந்தனர்.
1989 – பாக்கித்தான் பொதுநலவாய அமைப்பில் மீண்டும் இணைந்தது.
1989 – 1989 வல்வெட்டித்துறைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.
1994 – பலாலி இராணுவத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியதில் உலங்கு வானூர்தி, கவச வண்டி தாக்கியழிக்கப்பட்டன.
1999 – இந்தியாவின் அசாம் மாநிலத்தில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 285 பேர் உயிரிழந்தனர்.
2006 – திருகோணமலை மாவட்டத்தில் மகிந்தபுர, கிளிவெட்டி, பாலதோப்பு, பச்சனூர் இராணுவ முகாம்களைத் தாக்கி  மூதூர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்  விடுதலைப் புலிகள் நுழைந்தனர்.
2014 – சீனாவில் குன்சான் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் 146 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள் 

1834 – பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி, விடுதலைச் சிலையை வடிவமைத்த பிரான்சிய சிற்பி (இ. 1904)
1859 – ஆபிரகாம் பண்டிதர், தமிழகத் தமிழிசைக் கலைஞர் (இ. 1919)
1861 – பிரபுல்லா சந்திர ராய், வங்காளதேச வேதியியலாளர் (இ. 1944)
1876 – பிங்கலி வெங்கையா, இந்திய தேசியக் கொடியை வடிவமைத்தவர் (இ. 1963)
1913 – தனிநாயகம் அடிகள், ஈழத்துத் தமிழறிஞர், வரலாற்றாளர் (இ. 1980)
1923 – சிமோன் பெரெஸ், இசுரேலின் 9வது அரசுத்தலைவர் (இ. 2016)
1926 – ஜோர்ஜ் ஹபாஷ், பாலத்தீனத் தலைவர் (இ. 2008)
1929 – வித்தியா சரண் சுக்லா, இந்திய அரசியல்வாதி, அமைச்சர் (இ. 2013)
1930 – ஏ. பி. வெங்கடேசுவரன், இந்திய முன்னாள் வெளியுறவுச் செயலர் (இ. 2014)
1932 – பீட்டர் ஓ டூல், பிரித்தானிய-ஐரிய நடிகர் (இ. 2013)
1941 – சூல்ஸ் ஹொஃப்மன், நோபல் பரிசு பெற்ற லக்சம்பர்கு-பிரான்சிய மருத்துவர்
1945 – பங்கர் ராய், இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர்
1950 – கிரகாம் ஆன்கோக், பிரித்தானிய எழுத்தாளர், ஊடகவியலாளர்
1958 – அர்சாத் அயூப், இந்தியத் துடுப்பாளர்
1964 – மேரி லூயீஸ் பார்க்கர், அமெரிக்க நடிகை
1974 – சித்தார்த் ராய் கபூர் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளார்
1976 – சாம் வோர்திங்டன், ஆங்கிலேய-ஆத்திரேலிய நடிகர்
1979 – தேவி ஸ்ரீ பிரசாத், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்

இறப்புகள் 
 257 – முதலாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
 686 – ஐந்தாம் யோவான் (திருத்தந்தை) (பி. 635)
1819 – அஸிம்-உத்-தவுலா, கர்நாடகத்தின் நவாப் (பி. 1775)
1849 – எகிப்தின் முகமது அலி, உதுமானிய அல்பேனியத் தளபதி (பி. 1769)
1922 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-கனடியப் பொறியியலாளர் (பி. 1847)
1957 – ஜார்ஜி யபேர், பிரெஞ்சு உடற்கல்வி பயிற்சியாளர், கோட்பாட்டாளர் (பி. 1875)
1976 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (பி. 1890)
1996 – வி. பி. கணேசன், இலங்கைத் தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி, நடிகர், தயாரிப்பாளர்
2000 – நாஞ்சில் கி. மனோகரன், தமிழக அரசியல்வாதி (பி. 1929
2012 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)
2013 – வெ. தட்சிணாமூர்த்தி, தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1919)
2013 – சக்தி அ. பாலையா, இலங்கையின் மலையக எழுத்தாளர் (பி. 1925

சிறப்பு நாள்  
குடியரசு நாள் (மாக்கடோனியக் குடியரசு)

வெளி இணைப்புகள் 
 பிபிசி: இந்த நாளில்
நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்
 கனடா இந்த நாளில்

ஆகத்து
ஆண்டின் நாட்கள்
மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்சுபிரசு அல்லது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மின்னஞ்சல் மென்பொருள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் 98 இல் இருந்து. இது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளேளருடனும் இணைத்தே விநியோகிக்கப்டுகின்றது. இது விண்டோஸ் 95 இயங்குதளத்திற்கும் ஆப்பிள் வகைக்கணிகன்களிலும் இப்பதிப்பானது விநியோகிப்படுகின்றது எனினும் இதன் Mac OS X இலிருந்து மாக்கிண்டோஷ் கணினிகளிற்கு மைக்ரோசாப்ட் ஆபிஸ் பதிப்புடன் சேர்ந்து விநியோகிப்பதால் இது உள்ளடக்கபடவில்லை. விண்டோஸ் விஸ்டா இயங்குதளத்தில் விண்டோஸ்மெயில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளை மாற்றீடு செய்துள்ளது. மைக்ரோட்சாப்ட் விண்டோஸ் லைவ்மெயில் டெக்ஸ்டாப் என்ற ஓர் மென்பொருளையும் விருத்தி செய்து கொண்டு வருகின்றது. இவ்விரண்டினதும் வழிவந்த பதிப்பாக விண்டோஸ் லைவ் மெயில் விளங்குகின்றது.

மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 இல் இணைப்பாக வந்த மைக்ரோசாப்ட் இணைய மின்னஞ்சல் மற்றும் செய்தி மென்பொருளை இது மாற்றீடு செய்துள்ளது.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ஆனது மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்கின்ற ஆபிஸ் மென்பொருளுடன் வினியோகிப்படுகின்ற ஓர் மாறுபட்ட பிரயோக மென்பொருள் ஆகும். இவ்விரண்டு மென்பொருட்களும் ஓர் பொதுவாக மூலநிரலைப் பகிர்வதில்லையாயினும் கட்டமைப்பில் ஒரே பாணியையே பின்பற்றுகின்றன. இரண்டு பெயர்களும் ஒரே மாதிரியாக உள்ளமையால் அநேகமானவர்கள் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் அவுட்லுக் இன் ஓர் வசதி குறைக்கப்பட்ட (stripped-down) பதிப்பாகக் கருதுகின்றனர். அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் வருவதால் மிகப்பெருமளவில் பாவிக்கப்பட்ட மென்பொருளாக விளங்கியது இது வைரஸ் தாக்குதல்களிற்கும் அடிக்கடி உட்பட்டது. மாக்கிண்டோஷ் கணினிகளுக்கான பதிப்பானது இதைவிட வைரஸ் பிரச்சினைகள் இருந்தாலும்  இப்பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அவுட்லுக் எக்ஸ்பிரஸ் விண்டோஸ் முகவரிப் புத்ததையே பாவித்தாலும் இவை இரண்டும் வெவ்வேறான பிரயோகங்கள். அத்துடன் இது விண்டோஸ் மெசன்ஜருடன் ஒத்திசைவானது.

சரித்திரம் 
அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இண்டநெட் எக்ஸ்புளோளர் 4.0 உடன் சேர்த்து செப்டம்பர் 1997 வெளிவந்தது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் என்று அழைக்கபடும் மின்னஞ்சல் மற்றும் செய்திகளுக்கான மென்பொருளின் வழிவந்தது ஆகும். மைக்ரோசாப்ட் இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் என்கின்ற மென்பொருளானது இண்டநெட் எக்ஸ்புளோளர் 3.0 உடனான ஓர் பொருத்து என்பதுடன் அது வெறும் எழுத்துக்களால் ஆன மின்னஞ்சலை மாத்திரமே ஆதரித்தது.

ஒருகட்டத்தில் வெள்ளோட்டத்தில் (பீட்டா) இருந்த அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மென்பொருளானது எரிதம் (ஸ்பாம்) வடிகட்டும் வசதியினைக் கொண்டிருந்த பொழுதிலும் வெளியிடுவதற்கு முன்னர் இவ்வசதிகளை நீக்கப்பட்டே வெளிவந்தது. பல்வேறு பட்ட இணையத்தளங்களும் செய்திக் குழுக்களும் பெருந்தொகையாகச் சந்தைப்படுத்துவதற்காக இது உறுதியானதல்ல என்ற கருத்தை வெளியிட்டிருந்ததே இதன் காரணம் ஆகும். பின்னர் இரண்டு வருடங்களின் பின்னர் இதே முறையைப் பின்பற்றி மைக்ரோசாப்ட் அவுட்லுக் எரிதங்களை வடிகட்டும் வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.

பதிப்புக்களும் கோப்பு முறையும் 
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 4 விண்டோஸ் 98 ஜூன் 1998 இல் வெளிவந்தது. கோப்புக்களானது *.mbx முறையில் சேமிக்கப்படும். (யுனிக்ஸ் இயங்குதளத்தில் உள்ள MBOX உடன் ஒப்பிடக்கூடியது.)
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5 விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் வெளிவந்தது. *.dbx முறையில் கோப்புக்கள் சேமிக்கப்ப்டும் இதிலிருந்து ஒவ்வோர் கோப்புறைக்க்கும் தனித்தனியான கோப்புக்கள் உருவாக்கப் பட்டன.
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5.0 விண்டோஸ் 2000 உடன் பெப்ரவரி 2000 வெளிவந்தது.
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 5.5 விண்டோஸ் மில்லேனியம் பதிப்புடன் ஜீன் 2006 இல் வெளிவந்தது .
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6 விண்டோஸ் எக்ஸ்பி பதிப்புடன் அக்டோபர் 2001 இல் வெளிவந்தது.
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6 சேவைப் பொதி 2 விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 2 உடன் ஆகஸ்ட் 2004 இல் வெளிவந்தது.
 அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6 சேவைப் பொதி 3 விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதி 3 உடன் ஏப்ரல் 2008 இல் வெளிவந்தது.

வெளியிணைப்புக்கள் 
 
 
 Outlook Express dbx file format by Arne Schloh  – a partial documentation of the DBX file format with sample code
Outlook Express Help - Tips and Tricks How to use Outlook Express, setup and configure new email accounts including Gmail, backup emails, message rules, email signatures etc. on WebDeveloperNotes.com

மேற்கோள்கள்

மின்னஞ்சல்
மைக்ரோசாப்ட்


ஜூன் 15, 2006
முல்லைத்தீவில் இலங்கை அரச கிபிர் விமானம் குண்டுவீச்சு.  இலங்கை இந்திய நேரம் 11:43 அளவில் முல்லைத்தீவுப் பகுதியில் நுளைந்த கிபிர் விமானம் சுனாமியால் இடம்பெயர்ந்திருந்த நலன்புரி நிலையமான செல்வபுரம் வட்டுவாகலிலும், பின்னர் 11:57 அளவில் நுளைந்த கிபிர் மாத்தளனிலும் (இடம் உறுதிப்படுத்த இயலவில்லை) குண்டுகளை வீசியது. இதில் 5 அப்பாவித் தமிழ் மக்கள் காயமடைந்தனர்.
 எறிகணைத் தாக்குதல்கள் சம்பூரில் தாக்குதலகள் நிகழ்ந்ததாகத் தமிழ் நெட் தெரிவித்துள்ளது. புதினம்

ஜூன் 10, 2006 
 மன்னார் - வங்காலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை தமிழ்நெற்-ஆங்கிலம்

2006 செய்திகள்
ஜூலை 18 - லெபனான் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்.(பிபிசி)
 ஜூலை 31 - ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். (தமிழ் நெட்)

2006 செய்திகள்
வளைய வலையமைப்பு என்பது கணினி வலையமைப்பில் ஒரு வகையாகும். இதில் ஒவ்வொரு கணினியும் மற்ற இரு கணினிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு தொடர்ந்து கணினிகள் இணைக்கப்பட்டு ஒரு வளையத்தை உருவாக்குகின்றன. இதுவே வளைய வலையமைப்பு என்று அழைக்கப்படுகிறது. வளைய வலையமைப்பில் எந்த இரண்டு இணைப்பிற்கும் ஒரே வழியே உள்ளதால் ஓர் அந்தத்தில் (Node) உள்ள இணைப்பு பழுதடைந்தால் முழுவலையமைப்புமே பாதிப்படையும். கண்ணாடியிழைகளூடாகத் தரவுப் பரிமாற்றத்தில் (FDDI) வலையமைப்பில் பிழை ஏற்படும் போது மணிக்கூட்டுத் திசையாகவும் அதற்கு எதிர்த் திசையாகவும் தரவு அனுப்படுவதால் இந்தப் பிரச்சினை அங்கு இல்லை. இது C வளைய வலையமைப்பு அல்லது ஐபிஎம் டோக்கின் றிங் வலையமைப்பு எனப்படும் இங்கு பௌதீகரிதியாக (Physically) விண்மீன் வலையமைப்பு மாதிரி நடுவில் கணினி சுவிச்சுடன் இணைக்கப்பட்டிருக்கும் பின்னர் தர்க்கரீதியாக வளைய வலையமைப்பில் நடைமுறைப்படுத்தப்படும். 

பெரும்பாலான வலையமைப்புக்கள் மேலதிகமாக சுழலும் திசைக்கு எதிராகவும் ஓர் வலையமைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்.

அநுகூலங்கள் 
 பழைய வலையமைப்பில் எல்லாச் சாதனங்களுமே டோக்கின் (Token) ஐப் பெற்று அதை அநுப்பக்கூடிய வசதி.
 அதிக வேலைப் பழுவுள்ள வலையமைப்பில் விண்மீன் வலையமைப்பை விட வினைத்திறனாக இயங்கக்கூடியது. 
 டோக்கின் றிங் ஐப் பாவித்துப் பெரிய வலையமைப்பை உருவாக்கலாம். 
 ஒவ்வொரு கணினிக்கும் இடையிலான தொடர்பை நிர்வாகிக்க கணினி வழங்கி (சர்வர் server) தேவையில்லை.

பிரதிகூலங்கள் 
 ஒரு ஒழுங்காக வேலை செய்யாத கணினி அல்லது வலையமைப்பு அட்டை முழு வலையமைப்பிற்குமே பிரச்சினையை உண்டு பண்ணும். 
 இவ்வலையமைப்பில் இணைப்புக்களை நகர்த்துதல், சேர்த்தல் மற்றும் சாதனங்களை மாற்றுதல் வலையமைப்பைப் பாதிக்கும். 
 சாதாரண ஈதர்நெட் வலையமைப்பு அட்டையை விட இந்த வலையைமைப்பு அட்டை விலைகூடியது. 
 சாதாரண ஈதர்நெட் வலையமைப்பை விட இந்த வலையைமைப்பு மெதுவானது.

மேலும் பார்க்க 
 விண்மீன் வலையமைப்பு

கணினிப் பிணையமாக்கம்
இந்திய நாகம், இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாகக் காணப்படும் நச்சுப் பாம்பாகும். ஏனைய நாகப் பாம்பினங்களைப் போலவே இந்திய நாகமும் எதிரிகளைத் தாக்கத் தயாராகும் போது எழுந்து படமெடுக்கும். இவை எறத்தாழ இரண்டு மீட்டர் நீளம் வரை வளரக் கூடியன. ஏப்ரல் முதல் ஜூலை மாதங்களுக்கிடையில் இவை முட்டை இடுகின்றன. ஒரு முறையில் 12 முதல் முப்பது முட்டைகள் இடப்படுகின்றன. இம்முட்டைகள் 48 முதல் 69 நாட்களில் பொரிக்கின்றன. பிறக்கும்போது 20 முதல் 30 சென்ரி மீற்றர் நீளமுடையனவாக இருக்கும் நாக பாம்புக் குட்டிகளது நச்சுப் பைகள் அவை முட்டையிலிருந்து வெளியேறும் போதே செயற்படக் கூடியன.

மேலும் பார்க்க
 பெரும் நான்கு (இந்தியப் பாம்புகள்)
 நாகப்பாம்பு

நச்சுப் பாம்புகள்‎
தமிழ்நாட்டுப் பாம்புகள்

மேற்கோள்கள்
டஸ் கப்பிற்ரால் (Das Kapital) (தமிழில் - மூலதனம், ஆங்கிலத்தில் - Capital) என்பது கார்ல் மார்க்ஸினால் ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட அரசபொருளியல் சார்ந்த ஆராய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூலாகும். இந் நூலானது மூலதனம் பற்றி பொருளியலாளர்களினால் முன்வைக்கப்பட்ட கோட்பாடுகள், முதலாளித்துவம் பற்றிய மார்க்சின் ஆய்வுகள் போன்றவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நூல் முதன்முதலில் தியாகு என்பவரால் தமிழில் மூலதனம் என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்யப்பட்டது.

பதிப்பு 
டஸ் கப்பிற்ரால் நூலின் முதல் பாகம் கார்ல் மார்க்சினால் 1867ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. இரண்டாம், மூன்றாம் பாகங்கள் அவரின் உற்ற நண்பனான பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) என்பவரால் தொகுத்து 1885 மற்றும் 1894 இல் வெளியிடப்பட்டது. நான்காவது பாகமான Theories of Surplus-Value ஆனது 1905-1910 காலப்பகுதியில் Karl Kautsky என்பவரால் தொகுத்து வெளியிடப்பட்டது.

வெளி இணைப்புக்கள்

Online editions 
 Capital, Volume I: The Process of Production of Capital
 Capital, Volume II: The Process of Circulation of Capital
 Capital, Volume III: The Process of Capitalist Production as a Whole
 Capital, Volume IV: Theories of Surplus Value

பிற இணைப்புக்கள் 
 மூலதனம் என்னும் கலைப் படைப்பு எஸ். வீ. இராஜதுரை, தி இந்து 2017 அக்டோபர் 1
 Annotations, Explanations and Clarifications to Capital . Will help with understanding the early concepts.
 Wage Labour and Capital. An earlier document that deals with many of the ideas later expanded in Das Kapital.

Synopses 
 A synopsis of Capital by Engels (PDF document, 54 pages).
 A synopsis of Capital by Otto Ruhle (PDF document, 48 pages)

பொதுவுடைமை நூல்கள்
கார்ல் மார்க்சின் நூல்கள்
நூலட்டை விடுபட்ட நூல்கள்
மார்க்சீய நூல்கள்
1894 புத்தகங்கள்
சுன்னாகம் அல்லது சுண்ணாகம் (Chunnakam), இலங்கைத் தீவின் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நகரங்களுள் ஒன்று. இதன் பழைய பெயர் மயிலணி ஆகும். ஏறத்தாழக் குடாநாட்டின் மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம் யாழ்ப்பாண நகரிலிருந்து, காங்கேசன்துறை துறைமுகப் பட்டினத்தை இணைக்கும் காங்கேசந்துறை வீதியில், 6 ஆவது மைலில் அமைந்துள்ளது. இதன் வடக்குப் பக்கத்தில் மல்லாகமும், தெற்கே உடுவிலும், மேற்கே கந்தரோடையும், கிழக்கே புன்னாலைகட்டுவனும் அமைந்துள்ளன.

இந்த நகரம் முக்கியமான வேளாண்மைப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளதால், சிறப்பாக வேளாண்மைச் சேவைகளுக்கான மைய இடமாகவும் திகழ்கின்றது. இங்கு அமைந்துள்ள காய்கறி மற்றும் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை இப்பகுதியில் புகழ் பெற்றது.

புகழ் பெற்ற சுன்னாகத்தவர்

 சுன்னாகம் குமாரசாமிப் புலவர்
 முத்துக்குமாரக் கவிராயர்
 வரத பண்டிதர்
 முருகேச பண்டிதர்
 குப்பிழான் ஐ. சண்முகன்

இவற்றையும் பார்க்கவும்
 சுன்னாக எழுச்சி
 சுன்னாகம் தொடருந்து நிலையம்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
யாழ்ப்பாண மாவட்டம்
இணுவில் (Inuvil), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.

அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.

அந்தவகையில் மிகவும் பெயர் பெற்ற இந்த புண்ணிய பூமியில் சித்தர் பெருமகனார்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர் அவர்களுள் வடிவேலர் எனும் சித்தர் பெருமகனார் பரமானந்த வல்லி அம்மன் எனும் ஆலயத்தை பரிபாலித்து சில அற்புதங்களையும் செய்துகாட்டினார் என்பது செவிவழி கதையாக வந்தவை 

மற்றும் பிரபல சித்த வைத்தியரான செல்லப்பா பரியாரியார் (அதாவது அந்தகாலத்தில் மருத்துவரை பரியாரியார் என்று கௌரவ அடைமொழி வைத்து கூறுவது வழக்கம்)  வாழ்ந்த புண்ணிய பூமி. வைத்தியர் பரம்பரையினர் சித்தர் பரம்பரையினர் வாழ்ந்த அற்புத பூமி.

ஆனாலும் இங்கு வாழ்ந்த ஆதிப் பரம்பரையினரின் வரலாற்றினை சரியான முறையில் இனங்காணமுடிவதில்லை என்பது கவலைக்குரியதொன்றாகும்.

இணுவிலில் அமைந்த புகழ்பெற்ற பாடசாலைகள் 
 இணுவில் மத்திய கல்லூரி
 இணுவில் இந்துக் கல்லூரி

இணுவில் தந்த புகழ் பூத்தோர் 
 இணுவில் சின்னத்தம்பிப் புலவர் - இலக்கண, இலக்கிய நூலாசிரியர்
 ஆர். சிவலிங்கம் (உதயணன்) - சிறுகதை, புதின எழுத்தாளர்
 பண்டிதர் கா. செ. நடராசா
 இ. இரத்தினம்
 சிதம்பர திருச்செந்திநாதன் - எழுத்தாளர்
 பண்டிதர் ச. வே. பஞ்சாட்சரம்
 செல்லப்பா பரியாரியார்(சித்த வைத்தியர்)
 வடிவேல் சுவாமிகள்
 மருத்துவர் கந்தையா பாலசுப்ரமணியம்(Dr Bala)
 கலாநிதி சபா ஜெயராஜா அவர்கள்
 வாழ்நாட் பேராசிரியர் வல்லிபுரம் மகேஸ்வரன் அவர்கள்
 செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் அவர்கள்

கலைஞர்கள் 
 வீரமணி ஐயர் - இசைக், நடனக் கலைஞர்
 வி. தெட்சணாமூர்த்தி - தவில் கலைஞர்
 ஏரம்பு சுப்பையா, பரத நாட்டியக் கலைஞர்
 உ. இராதாகிருஷ்ணன் - வயலின், வாய்ப்பாட்டு
 விஸ்வலிங்கம், தவில்
 வி. உருத்திராபதி - வாய்ப்பட்டு, நாதஸ்வரம், புல்லாங்குழல், ஆர்மோனியம்
 வி. கோதண்டபாணி - நாதஸ்வரம்
 கே. ஆர். சுந்தரமூர்த்தி - நாதஸ்வரம்
 கே. ஆர். புண்ணியமூர்த்தி - தவில்
 இணுவில் சின்னராசா - தவில்
 இணுவில் கணேசன் - தவில்
 க. சண்முகம்பிள்ளை, மிருதங்கக் கலைஞர்
 இணுவையூர் மயூரன் - எழுத்தாளர், வானொலி கலைஞர், கவிஞர்

இணுவிலில் அமைந்துள்ள கோயில்கள் 
புகழ் பெற்ற, பழமை வாய்ந்த இந்துக் கோயில்கள் பல இவ்வூரில் அமைந்துள்ளன. இவற்றுள் சிறப்பு வாய்ந்தவை வருமாறு:

 பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
 இணுவில் காரைக்கால் சிவன் கோவில்
 சிவகாமி அம்மன் கோயில்
 செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்
 இணுவில் கந்தசுவாமி கோயில்
 பரமானந்தவல்லி அம்மன் ஆலயம்(இங்குதான் தவில்மேதை தட்சனாமூர்த்தி அவர்களுக்கு தவில் அரங்கேற்றம் நடைபெற்றது)
 மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்
 இணுவில் இளந்தாரி கோயில்
 இணுவில் அண்ணமார் கோயில்
 இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார் கோயில் எனவும் வழங்கப்படுகின்றது)
இணுவில் தெற்கு ஞானலிங்கேஸ்வரர் கோவில்
 இணுவில் வத்துவினி வைரவர் ஆலயம்
 இணுவில் வத்துவினி பிள்ளையார் ஆலயம்
 இணுவில் வத்துவினி கண்ணகா பரமேஸ்வரி ஆலயம்

வெளி இணைப்புக்கள் 
 இணுவில்
 இணுவில் கந்தசுவாமி கோயில்

மேற்கோள்கள்

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்
 
யாழ்ப்பாண மாவட்டம்


நிகழ்வுகள் 
 762 – பகுதாது நகரம் நிறுவப்பட்டது.
1502 – கிறித்தோபர் கொலம்பசு தனது நான்காவது கடற்பயணத்தின் போது ஒந்துராசை அடைந்தார்.
1619 – யேம்சுடவுன் நகரில் அமெரிக்காக்களின் முதலாவது பிரதிநிதிகள் சபையின் கூட்டம் நடைபெற்றது.
1626 – இத்தாலியில் நாபொலி நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் உயிரிழந்தனர்.
1635 – எண்பதாண்டுப் போர்: ஆரஞ்சு இளவரசர் பிரெடெரிக் என்றி எசுப்பானிய இராணுவத்திடம் இருந்து தாம் இழந்த முக்கிய கோட்டையைக் கைப்பற்ற சமரை ஆரம்பித்தார்.
1656 – சுவீடன் படையினர் மன்னர் பத்தாம் சார்லசு குசுத்தாவ் தலைமையில் வார்சாவில் நடந்த சமரில் போலந்து-லித்துவேனியப் படையினரை வென்றனர்.
1733 – முதலாவது மசோனிக் விடுதி மாசச்சூசெட்சில் அமைக்கப்பட்டது.
1756 – கட்டிடக் கலைஞர் பிரான்செசுக்கோ பார்த்தலோமியோ ராசுத்திரெல்லி சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் தாம் அமைத்த கத்தரீன் அரண்மனையை உருசிய அரசி எலிசபெத்திடம் கையளித்தார்.
1811 – மெக்சிக்கோ விடுதலைப் போரின் தலைவர் மிகுவேல் இடால்கோ காஸ்டில்லா எசுப்பானியரினால் மெக்சிக்கோவில் தூக்கிலிடப்பட்டார்.
1865 – அமெரிக்காவின் பிரதர் ஜொனத்தன் என்ற நீராவிக் கப்பல் கலிபோர்னியாவில் மூழ்கியதில் 225 பயணிகள் உயிரிழந்தனர்.
1866 – அமெரிக்காவின் லூசியானா, நியூ ஓர்லென்ஸ் நகரில் இடம்பெற்ற கலவரங்களில் 48 பேர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1871 – நியூயார்க்கில் இசுட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர்.
1912 – சப்பானியப் பேரரசர் மெய்ஜி இறந்தார். அவரது மகன் யொசிகீட்டோ பேரசராக முடிசூடினார்.
1930 – மொண்டேவீடியோ நகரில் நடைபெற்ற முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் உருகுவை அணி அர்கெந்தீனா அணியை 4-2 கணக்கில் தோற்கடித்து முதலாவது உலகக்கோப்பையை வென்றது.
1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் ஐ-58 அமெரிக்காவின் இந்தியானாபொலிசு என்ற கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் உயிரிழந்தனர். 
1962 – திரான்சு-கனடிய நெடுஞ்சாலை, உலகின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை, அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
1966 – இங்கிலாந்து அணி மேற்கு செருமனியை 4-2 என்ற கணக்கில் வென்று காற்பந்து உலகக்கோப்பையை வென்றது.
1969 – வியட்நாம் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் தென் வியட்நாம் சென்று அங்கு அரசுத்தலைவர் நியூவென் வான் தியூவை சந்தித்தார்.
1971 – அப்பல்லோ திட்டம்: அப்பல்லோ 15 விண்கலத்தில் சென்ற டேவிட் ஸ்காட், யேம்சு எர்வினனாகியோர் பால்க்கன் என்ற தரையுலவியுடன் நிலாவில் இறங்கினர்.
1971 – சப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதியதில் 162 பேர் உயிரிழந்தனர்.
1980 – பிரான்சு, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.
1981 – கம்யூனிசப் போலந்தில் உணவுப் பற்றாக்குறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 50,000 பேர் லோட்சு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
1995 – ஈழப்போர்: இலங்கை, வாழைச்சேனையில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் கிழக்கிலங்கை இராணுவத் தளபதி நளின் அங்கம்மன கொல்லப்பட்டார்.
1997 – ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் "திரெட்போ" என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் உயிரிழந்தனர்.
2012 – ஆந்திரப் பிரதேசம், நெல்லூரில் தமிழ்நாடு விரைவுவண்டி தீப்பிடித்ததில் 32 பயணிகள் உயிரிழந்தனர், 27 பேர் காயமடைந்தனர்.
2012 – தில்லியில் மின்வெட்டு ஏற்பட்டதில் 300 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2014 – மகாராட்டிரத்தில் இடம்பெற்ற மண்சரிவில் 20 பேர் உயிரிழந்தனர்.

பிறப்புகள் 

1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)
1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)
1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)
1898 – ஹென்றி மூர், ஆங்கிலேய சிற்பி (இ. 1986)
1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)
1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)
1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)
1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்
1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்
1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்
1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்
1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்
1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்
1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)
1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை
1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்
1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்
1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்
1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்
1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்

இறப்புகள் 
1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)
1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)
1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)
1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)
1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்
1977 – ஏ. எல். சீனிவாசன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் (பி. 1923)
2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)
2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)
2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)
2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)

சிறப்பு நாள் 
மாவீரர் நாள் (தெற்கு சூடான்)
விடுதலை நாள் (வனுவாட்டு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 

 பிபிசி: இன்றைய நாளில்
 நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
 சூலை 30 வரலாற்று நிகழ்வுகள், OnThisDay.com

சூலை
ஆண்டின் நாட்கள்


நிகழ்வுகள் 
70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ அணைக்கப்பட்டது.
435 – நெஸ்டோரியனிசத்தை ஆரம்பித்தவர் எனக் கருதப்படும் கான்ஸ்டண்டினோபிலின் ஆயர் நெஸ்டோரியசு பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசினால் எகிப்துக்கு நாடுகடத்தப்பட்டார்.
881 – பிரான்சின் மூன்றாம் லூயி மன்னர் வைக்கிங்குகளைத் தோற்கடித்தார்.
1057 – ஒன்பதாம் இசுடீவன் என்ற பெல்ஜியர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1492 – கிறித்தோபர் கொலம்பசு எசுப்பானியாவை விட்டுப் புறப்பட்டார்.
1601 – நீண்ட துருக்கியப் போர்: ஆத்திரியா டிரான்சில்வேனியாவைக் கைப்பற்றியது.
1645 – முப்பதாண்டுப் போர்: செருமனியில் நோர்திலிங்கன் சமரில் பிரெஞ்சுப் படைகள் புனித உரோமைப் பேரரசுப் படைகளைத் தாக்கி வெற்றி பெற்றனர்.
1678 – அமெரிக்கப் பேரேரிகளில் முதலாவது கப்பல், லெ கிரிஃபோன் அமைக்கப்பட்டது.
1795 – அமெரிக்காவில் வடமேற்கு இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி ஜார்ஜ் வார்டு ஆரம்பித்து வைத்தார்.
1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: அரா என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.
1860 – நியூசிலாந்தில் இரண்டாவது மாவோரி போர் ஆரம்பமானது.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனி பிரான்சுடன் போர் தொடுத்தது. உருமேனியா நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
1936 – உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர், 20 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியப் படையினர் பிரித்தானிய சோமாலிலாந்து மீது போர் தொடுத்தது.
1946 – உலகின் முதலாவது பல வணிக நோக்குடைய கேளிக்கைப் பூங்கா அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1949 – அமெரிக்காவின் என். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்) அமைப்பு உருவானது.
1959 – போர்த்துகலின் அரசக் காவல்துறையினர் போர்த்துக்கீச கினியின் பிசாவு நகரில் பணி நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1960 – நைஜர் பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1975 – மொரோக்கோவில் தனியார் விமானம் ஒன்று மலையில் மோதியதில் 188 பேர் உயிரிழந்தனர்.
1976 – காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
1977 – உலகில் பெருமளவு வெளியிடப்பட்ட முதலாவது தனி மேசைக் கணினிகளில் ஒன்றான டிஆர்எஸ்-80 ஐ டாண்டி கார்ப்பரேசன் வெளியிட்டது.
1990 – கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
1997 – அல்சீரியாவில் இரு கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 146 கிராமத்தவர்கள் கொல்லப்பட்டனர்.
2005 – மூரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் மாவோயா ஊல்ட் தாயா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
2010 – பாக்கித்தான், கராச்சியில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 85 பேர் உயிரிழந்தனர்.
2014 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
2018 – ஆப்கானித்தானின் கிழக்கே சியா பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர்.
2019 – அமெரிக்கா, டெக்சாசு மாநிலத்தில் எல் பாசோ நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள் 

1347 – அலாவுதின் பாமன் சா, பாமினிப் பேரரசின் சுல்தான் (இ. 1358)
1856 – ஆல்பிரெட் டிக்கன், ஆத்திரேலியாவின் 2வது பிரதமர் (இ. 1919)
1869 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (இ. 1947)
1884 – நான்காம் கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1940)
1886 – மைதிலி சரண் குப்த், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (இ. 1964)
1890 – ஸ்ரீ பிரகாசா, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (இ. 1971)
1913 – ஸ்ரீபாத பினாகபாணி, தென்னிந்தியக் கருநாடக இசைப்பாடகர், மருத்துவர் (இ. 2013)
1923 – தோர்ப்சான் சிக்கிலேண்டு, நார்வே வேதியியலாளர் (இ. 2014)
1945 – வாணிஸ்ரீ, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1950 – ஆறு. இராமநாதன், தமிழக எழுத்தாளர்
1960 – கோபால் சர்மா, இந்தியத் துடுப்பாட்ட வீரர்
1979 – இவாஞ்சலீன் லில்லி, கனடிய நடிகை
1984 – சுனில் சேத்ரி, இந்தியக் கால்பந்தாட்ட வீரர்
1989 – இழூல்சு பியான்கி, பிரெஞ்சு காரோட்ட வீரர் (இ. 2015)

இறப்புகள் 
1749 – அன்வருத்தீன் கான், இரண்டாவது ஆற்காடு நவாப் (பி. 1672)
1924 – ஜோசப் கொன்ராட், போலந்து-பிரித்தானிய எழுத்தாளர் (பி. 1857)
1957 – தேவதாஸ் காந்தி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1900)
1975 – என். வி. நடராசன், தமிழக அரசியல்வாதி (பி. 1912)
1993 – சுவாமி சின்மயானந்தா, வேதாந்த தத்துவத்தைப் பரப்பிய இந்திய ஆன்மிகவாதி (பி. 1916)
2008 – அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளர் (பி. 1918)
2019 – நிக்கொலாய் கர்தசோவ், உருசிய வானியற்பியலாளர் (பி. 1932)

சிறப்பு நாள் 
 விடுதலை நாள் (நைஜர், பிரான்சிடம் இருந்து 1960)

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள் 

 
 நியூயார்க் டைம்சு: இன்றைய நாளில்
 

ஆகத்து
ஆண்டின் நாட்கள்
கலப்பை  () , அவுத்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னி பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பினரால் ஜூலை 1994 இலிருந்து வெளியிடப்படும் காலாண்டு கலை இலக்கிய இதழாகும்.

”மனித மனங்களை உழுது, உலகத் தமிழர் தம் உணர்வை உயர்த்தி நிற்க வேண்டும்”, ”முக்கால நிகழ்வுகளையும் உள்ளடக்கிச் சமுதாய சீர்திருத்தத்திற்காகப் பாடுபட வேண்டும்” என்பது கலப்பையின் முக்கிய கோட்பாடாகும். இன்றைய தமிழ் இளைஞரின் தேவைகளைப் நிறைவு செய்யக்கூடிய ஆக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் கலப்பையின் குறிக்கோளாகும்.

நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் ஆக்கங்களைத் தாங்கி வெளிவரும் கலப்பையின் வெளியீட்டுப் பணியை இப்போது "அவுஸ்திரேலியத் தமிழ்ப் பட்டதாரிகள் சங்கம்" என்ற அமைப்பு பொறுப்பேற்று நடத்துகின்றது.

வெளி இணைப்புகள்
விருபா தமிழ்ப் புத்தகத் திரட்டு

ஆத்திரேலியத் தமிழ் இதழ்கள்
எரியும் முட்செடி, என்பது யாத்திராகமம் நூலில் காணப்படும் ஒரு புதுமையாகும், யாவே கடவுள் மோசேயை, இஸ்ரவேலரின் எகிப்து அடிமை வாழ்விலிருந்து அவர்களை மீட்பதற்கான தலைவராக அழைக்கப் பயன்படுத்தினார்.

யாத்திராகமம் நூலில் உள்ளவை
மோசே எகிப்தை விட்டு தப்பிவந்து எத்திரோவிடம் வாழ்ந்தபோது, ஆடுகளை மேய்த்து கொண்டிருக்கும் போது மலைமீது எரியும் முட்செடி ஒன்றை கண்டு மரம் மரம் வெந்துபோகமல் இருக்க கண்டு அதனருகே போனார். அப்போது கடவுளின் ஆவி முட்செடியின் நடுவிலிருந்து மோசேயை அழைத்து, அவர் நிற்பது புனித பூமி என்றும்,மோசேயின் பாதணிகளை அகற்றுமாறும் கட்டளையிட்டு, தன்னை "நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்" என அறிமுகப்படுத்தினார். 
பின்பு கடவுள் மோசேயை எகிப்துக்கு போய் அரசனிடம் பேசி இஸ்ரவேலரை விடுவித்து அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு வழிநடத்துமாறு கட்டளையிட்டார்.

வணக்கத் தளம்
இந்த சம்பவம் நடந்ததாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இப்போது காணப்படும் முட்செடி மோசேக்கு கடவுள் தோன்றிய முட்செடியின் வழிவருவது என்பது நம்பிக்கையாகும். மோசேக்கு கடவுள் தோன்றிய மரம் இறந்துவிட்டது.

உசாத்துணை

வெளி இணைப்புகள் 

 Icon of the Mother of God "the Unburnt Bush" திருவோவியம் and Synaxarion of the feast
 The Burning Bush History of the use of the burning bush symbol among Reformed churches

விவிலிய சொற்றொடர்கள்
கிறித்தவக் குறியீடுகள்
யூதக் குறியீடுகள்
விவிலிய நிகழ்வுகள்
எபிரேய விவிலிய நிகழ்வுகள்